கோம்பாவில் விக்னேஸ்வர வித்தியாலயத்திற்கு கணினி வழங்கிய ரவிகரன் எம்.பி;
கோம்பாவில் விக்னேஸ்வர வித்தியாலயத்திற்கு கணினி வழங்கிய ரவிகரன் எம்.பி; புதிதாகப் பொருத்தப்பட்ட மின்னிணைப்புக்களையும் பார்வையிட்டார்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, கோம்பாவில், விக்னேஸ்வர வித்தியாலயத்திற்கு 27.07.2026இன்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் அவரது 2026ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதிஒதுக்கீட்டிலிருந்து மேசைக்கணினி வழங்கிவைக்கப்பட்டதுடன், மேல்மாடி வகுப்பறைகளுக்கு தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதிஒதுக்கீட்டின் மூலம் பொருத்தப்பட்ட மின்ணைப்புக்களையும் இதன்போது பார்வையிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
புதுக்குடியிருப்பு – கோம்பாவில், விக்னேஸ்வர வித்தியாலய பாடசாலைச் சமூகத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக கடந்த 10.03.2026அன்று குறித்த பாடசாலைக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பாடசாலையில் காணப்படும் குறைபாடுகள்தொடர்பில் நேரடியாக ஆராய்ந்தார்.
இதன்போது குறித்த பாடசாலைக்கு மேசைக்கணினி ஒன்று தேவையெனவும், மேல்மாடி வகுப்பறைகளுக்கு மின் இணைப்பு பொருத்தப்படவேண்டுமெனவும் பாடசாலைச் சமூகத்தினரால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் பாடசாலை சமூகத்தினரால் முன்வைக்கப்பட்ட குறித்த கோரிக்கைகள் தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென இதன்போது நாடாளுமன்ற உறுப்பினராலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தனது 2026ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து, கோம்பாவில் விக்னேஸ்வர வித்தியாலயத்திற்கு மேசைக்கணினி வழங்குவதற்காகவும், மேல்மாடி வகுப்பறைகளுக்கான மின்னிணைப்பை ஏற்படுத்துவதற்காககவும் 300,000 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.
இந்நிலையில் 27.07.2026இன்று குறித்த பாடசாலைக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், தனதுநிதி பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பெறப்பட்ட மேசைக்கணினியை பாடசாலைச் சமூகத்தினரிடம் கையளித்ததுடன், மேல்மாடி வகுப்பறைகளுக்கு தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதிஒதுக்கீட்டின் மூலம் பொருத்தப்பட்ட மின்ணைப்புக்களையும் பார்வையிட்டார்.

