தாயகச் செய்தி 

செம்மணியில் கைக்குழந்தை உட்பட 7 எலும்புக்கூடுகள் மீட்பு

இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழாய்வில் இதுவரை 420 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன அகழாய்வின் 34ஆவது நாளான இன்று (16), மேலும் 6 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன், 7 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் ஒரு கைக்குழந்தை உட்பட 3 சிறுவர்களின் எலும்புக்கூடுகளும், 3 பெரியவர்களின் எலும்புக்கூடுகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று ஒரு பாசிமணியும் சான்றுப் பொருளாக மீட்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அகழாய்வில் மொத்தம் 130 சான்றுப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின் குமார் முன்னிலையில் நடைபெற்று வரும் அகழாய்வில், இதுவரை அடையாளம் காணப்பட்ட 420 மனித எலும்புத் தொகுதிகளில் 416 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு, அடையாளமிடப்பட்டு, அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

மன்னாரில் அரச நிறுவனங்கள் மீது பாய்ந்த டெங்கு ஒழிப்பு சட்டம்!

மன்னார் மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு செயல் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரச நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்ததன்  அடிப்படையில், ஒரே நாளில் 3  அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. “சட்டம் அனைவருக்கும் சமமானது” என்பதை நிரூபிக்கும் வகையில், தனியார் இடங்கள் மட்டுமன்றி, அரச நிறுவனங்கள் மீதும் எந்தவித பாரபட்சமும் இன்றி சுகாதாரத்துறை மற்றும் முப்படை இணைந்து இந்த அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். மன்னார் நகர சபை பிரிவில் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், மன்னார் நகர சபையின் ஏற்பாட்டில் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பொது சுகாதார பரிசோதகர்கள், முப்படையின் இணைந்து விசேட வேலைத்திட்டம் நேற்று (15) காலை மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

தீர்த்தக்கரை கண்ணகி அம்மன் ஆலயத்தில் அடிக்கல்நாட்டு விழா;

தீர்த்தக்கரை கண்ணகி அம்மன் ஆலயத்தில் அடிக்கல்நாட்டு விழா; ரவிகரன் எம்.பி பங்கேற்பு முல்லைத்தீவு – கள்ளப்பாடு தெற்கு, தீர்த்தக்கரை, கண்ணகி அம்மன் ஆலயத்தில் அடிக்கல் நாட்டுவிழா 15.07.2026இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மகைதேவா குணசிங்க ராசா, பெருந்திரளான அடியவர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

மன்னார் மாவட்டத்தின் விசேட மாவட்ட விவசாய குழு கூட்டம்

மன்னார் மாவட்டத்தின் விசேட மாவட்ட விவசாய குழு கூட்டம் மன்னார் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நேற்று (15) மாலை 4 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. எல்நினோ (EL Nino) காலநிலை தாக்கம் விவசாயத் துறையில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில், அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு, விவசாயிகளுக்கு போதிய அறிவுறுத்தல்களும் விழிப்புணர்வையும் வழங்கி, அதன் ஊடாக இந்த கால நிலைக்கு சவாலை ஏற்றுக்கொண்டு, அதற்கு ஏற்ற பயிர்ச்செய்கை திட்டமிடலை மேற்கொள்வதற்கான கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கால நிலைத் தாக்கமானது 2026,2027ஆம் ஆண்டு வரை தொடரும் என்று எதிர்வு கூறப்பட்டிருக்கின்றது அதன் அடிப்படையில் இதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தேசிய மட்டத்திலும், ஏனைய பிரதேசங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. வட மாகாணத்தில் விசேட கூட்டத்தை ஏற்பாடு செய்து எவ்வாறு காலநிலை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

செம்மணியில் அகழாய்வு: மேலும் இரு சிறுவர்களின் என்புக்கூடுகள்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வின் மூன்றாம் பகுதி பணிகள் இன்று (15) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், 32 நாட்கள் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கடந்த 23ஆம் திகதி அவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து, மூன்றாம் கட்டத்தின் 33ஆவது நாள் அகழாய்வு இன்று மீண்டும் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய அகழாய்வின் போது புதிதாக இரண்டு என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை இரண்டும் சிறுவர்களுக்குரிய என்புக்கூடுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு என்புக்கூட்டு குவியல்களும் கண்டறியப்பட்டுள்ளன. எனினும், இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட எந்த என்புக்கூடும் அகழ்ந்து எடுக்கப்படவில்லை. இதனையடுத்து, செம்மணி மனித புதைகுழியில் இதுவரை மொத்தம் 87 நாட்கள் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது மொத்தமாக 414 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்.

கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம். கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் கொள்வனவு நடவடிக்கைகள், கடற்றொழில் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. கிளிநொச்சி மகிழங்காடு கமக்காரர் அமைப்பின் நெற்களஞ்சிய சாலையில், நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடமாகாண பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரும் மாவட்டClean Sri Lanka செயலணியின் இணைப்பாளருமான மருங்கன் மோகன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர். நெல் கொள்வனவு தொடர்பாக கருத்து தெரிவித்த விவசாயிகள், கடந்த காலங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வதற்காக போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், அறுவடை முடிந்து பல மாதங்களின் பின்னரே சில விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல் கொள்வனவு செய்யப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால் தற்போதைய…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

பனைநின்றான் பாலத்தை புதிதாக அமைக்க அடிக்கல் நாட்டிவைப்பு;

பனைநின்றான் பாலத்தை புதிதாக அமைக்க அடிக்கல் நாட்டிவைப்பு; ரவிகரன் எம்.பியின் தொடர் கோரிக்கை பலிதமானது. வவுனியாவடக்கு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட பனைநின்றான் கிராமத்திற்குச் செல்லும் வீதியில் அமைந்துள்ள பாலத்தை புதிதாக அமைப்பதற்கு 14.07.2026நேற்று அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த பனைநின்றான் பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தார். இந்நிலையில் 4,446,871.90 ரூபாய் பெறுமதியில் அப்பாலத்தினை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நெடுங்கேணி – ஒட்டுசுட்டான் பிரதான வீதியிலிருந்து பனைநின்றான் கிராமத்திற்குச்செல்லும் பாலமும் அதனோடிணைந்த வீதியும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததால் அவ்வீதியைப் பயன்படுத்தும் மக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவந்தனர். இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று கடந்த 2025.07.19ஆம் திகதியன்று குறித்த பகுதிக்கு நேரில் சென்ற வன்னிமாவட் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலைமைகளைப் பார்வையிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து குறித்த…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

புலிகளின் புதையல் – அகழ்வுப் பணிகளில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் (அ) பகுதி கணேஸ் திட்டத்திலுள்ள தனியார் காணியில் விடுதலைப் புலிகளின் புதையல் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணி நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றிருந்தது. பாரதி பிரதான வீதி, தேவிபுரம் (அ) பகுதி கணேஸ் திட்டத்திலுள்ள தனியார் காணியில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் இருப்பதாக கூறி கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வுப்பிரிவினர் நீதிமன்றத்தின் அனுமதியைபெற்று நேற்றையதினம் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அகழ்வு பணியை ஆரம்பித்திருந்தனர். இருப்பின் ஊடகங்களுக்கான செய்தி சேகரித்தலுக்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது ஊடகவியலாளருக்கு அப்பகுதி மக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த அகழ்வுபணியின் உண்மைத்தன்மையை வெளிக்கொண்டு வரும் நோக்கில் அப்பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற போது குறித்த அகழ்வு இடம்பெறும் பகுதிக்குள் செல்வதற்கும், வீடியோ மற்றும் புகைப்படங்கள் பதிவு செய்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. நேற்றையதினம் இடம்பெற்ற அகழ்வின் போது எதுவும் கிடைக்காத நிலையில் முதலாம்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

யாழ். மாவட்ட கல்வி அபிவிருத்தி உப குழுக் கூட்டம்!

யாழ்ப்பாண மாவட்ட  கல்வி  அபிவிருத்தி உப குழுக் கூட்டம் உபகுழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன்  தலைமையில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் பங்குபற்றுதலுடன், நேற்றைய தினம்(14.07.2026) பி. ப 02.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் வரவேற்புரையாற்றிய அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபன், கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று சுற்றுநிருபத்திற்கு அமைவாக திட்டமிடல், சுற்றுலா, உணவு பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் கல்வி ஆகிய உப குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அமைவாக கல்வி உபகுழுவின் தலைவராக ஜெயசந்திரமூர்த்தி றஜீவன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி உபகுழுவின் முதலாவது கூட்டம் இது எனவும் தெரிவித்தார். மேலும், அண்மையில் வெளியாகிய க.பொ. த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

பூநகரி பிரதேச செயலகத்தின் புதிய உதவிப் பிரதேச செயலாளர்

பூநகரி பிரதேச செயலகத்தில் பதில் கடமை அடிப்படையில் உதவிப் பிரதேச செயலாளராக பணியாற்றி வந்த ச.குணஜா, 14.07.2026 அன்று நிரந்தர உதவிப் பிரதேச செயலாளராக உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வின் போது, பிரதேச செயலகத்தின் கணக்காளர் மற்றும் ஏனைய அலுவலர்கள் இணைந்து அவருக்கு உளமார்ந்த வரவேற்பை வழங்கி, புதிய பொறுப்பில் சிறப்பாகச் செயலாற்ற தங்களது நல்வாழ்த்துகளையும் தெரிவித்தனர். புதிய பொறுப்பை ஏற்றுள்ள ச.குணஜாவுக்கு எதிர்கால பணிகள் அனைத்திலும் சிறப்பான வெற்றிகளை பெறுவதற்கு பிரதேச செயலகத்தினர் மற்றும் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க