தாயகச் செய்தி 

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்க கோரிக்கை

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கக்கோரி வெகுசன ஊடக பிரதி அமைச்சரிடம் துரைராசா ரவிகரன் எம்.பி. கோரிக்கை பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் காணியை உறுதிப்படுத்தி, புதிய கட்டடம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வெகுஜன ஊடக பிரதி அமைச்சருக்கு அழுத்தமான கோரிக்கையை முன்வைத்துள்ளார். இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பருத்தித்துறை அஞ்சல் நிலையம் கடந்த 41 ஆண்டுகளாக, அடிப்படை வசதிகள் மிகவும் குறைந்த, பழைய வாடகை கட்டடம் ஒன்றிலேயே இயங்கி வருகின்றது. வடபகுதி மக்களின் அன்றாட நிர்வாக, நிதி மற்றும் அஞ்சல் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மிக முக்கியமான அரச நிறுவனமாக இது திகழ்கின்றது. இருப்பினும், இடவசதி இன்மை மற்றும் கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறை காரணமாக, பொதுமக்களுக்கு வினைத்திறனான…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர்களை உளவு இயந்திரமும் மடக்கிய பொலிஸார்!

மணல் அனுமதிப்பத்திரத்தை தவறாக வேறு பகுதியில் பயன்படுத்தி மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும் உளவு இயந்திரமும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் அகழ்வு இடம் பெறுவதாக  கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த கைது முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதியில் நேற்று திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்ட பொலிசார் திருகோணமலை மாவட்ட மணல் அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி கல்லாறு பகுதியில் மணல் அகழ்வில்  ஈடுபட்ட நான்கு டிப்பர்களும் ஒரு உளவு இயந்திரமும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவத்தின் டிப்பர் சாரதிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் தடயப்பொருட்கள்  22.07.2026 அன்று கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகம்  குறித்த கல்லாறு பகுதியில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

திருகோணமலையில் சட்டவிரோத கட்டடங்கள் அகற்றம்

திருகோணமலை உட்துறைமுக வீதியில் மீன்பிடி படகுத்துறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கட்டடங்கள் இன்று (20) அகற்றப்பட்டுள்ளன. கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் சட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, குறித்த கட்டுமானங்கள் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 28.20 அடி நீளம் மற்றும் 09.10 அடி அகலம் கொண்ட கட்டடம், 44.7 அடி நீளம் மற்றும் 09.10 அடி அகலம் கொண்ட கழிப்பறை மற்றும் 17.5 அடி அகலம் கொண்ட மற்றுமொரு கட்டடம் ஆகியவற்றை அகற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 1981ஆம் ஆண்டின் 57ஆம் இலக்க கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 31 (2) இன் கீழ், 1988ஆம் ஆண்டின் 64ஆம் இலக்க மற்றும் 2011ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க சட்டத் திருத்தங்களின் அடிப்படையில், குறித்த கட்டடங்களை அகற்றுவதற்கான உடைத்தல் கட்டளை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

செம்மணியில் கால்கள் மடக்கப்பட்ட அமர்ந்த நிலையில் எலும்புக்கூடு

செம்மணியில் கால்கள் மடக்கப்பட்ட அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்த எலும்புக்கூடு இன்று கண்டுபிடிப்பு செம்மணி மனித புதைகுழி அகழ்வில் 3ஆம் கட்டத்தின் 37ஆம் நாளான இன்று, 429ஆம் இலக்க மனித எலும்புக்கூடு கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தது அடையாளம் காணப்பட்டது

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

மாவிட்டபுரம் கந்தனுக்கு இன்று கொடியேற்றம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய 2026 மகோற்சவப் பெருவிழா இன்று (19) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. முருகப்பொருமானுக்கு அதிகாலையில் இருந்து சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்று காலை மூர்த்திகளுக்கு வசந்த மண்டப பூசைகள் நடைபெற்று, முருகப் விநாயகப் பெருமான், சிவன், உமாதேவியார்  சமேதராயும் மற்றும் முருகப் பொருமான் வள்ளி தெய்வானை சமேதராயும், வசந்த மண்டபத்திலிருந்து  கொடித் தம்பம்  எழுந்தருளி கொடியேற்றம்  சிறப்பாக நடைபெற்றது. மாவை கந்தனின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்களைக் கொண்ட இவ்வாலய மகோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும் 11 ஆம் திகதி  தேர்த் திருவிழாவும்  12 ஆம் திகதி ஆடி அமாவாசை தினத்தன்று கீரிமலை புனித  தீர்த்தத்தில் தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளமையும்  குறிப்பிடத்தக்கது. நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும்   ஏராளமான…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

இனியவாழ்வு இல்ல த்தின் பொதுச்சபை யைக் கூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்க;

இனியவாழ்வு இல்லத்தின் பொதுச்சபையைக் கூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்க; பழையமாணவர்களும், பெற்றோரும் ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள இனியவாழ்வு இல்லத்தின் பொதுச்சபையை விரைவாக கூட்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொழ்ளுமாறு, இனியவாழ்வு இல்லத்தின் பழையமாணவர்களும், பெற்றோரும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு விரைவில் பொதுச்சபையைக் கூட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் 18.07.2026நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இவ்விடயம்தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள இனியவாழ்வு இல்லத்தில் காணப்படும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியும், உடனடியாக பொதுச்சபையைக் கூட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி இனியவாழ்வு இல்லத்தின் பழையமாணவர்களும், அங்கு கல்வி கற்கும் மாணவர்களுடைய பெற்றோர்கள் பலரும்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மயிலிட்டி காணி விடுவிப்புக்காக தொடரும் போராட்டம்

அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில், கடந்த 36 ஆண்டுகளாகத் தங்களின் பூர்வீகக் காணிகளை இழந்து நிர்க்கதியாக நிற்கும் மயிலிட்டி மக்கள், அந்த நிலங்களை விடுவிக்கக் கோரி முன்னெடுத்து வரும் அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்ந்தது. ​மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக்குழு மற்றும் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்று வரும் இப்போராட்டத்தில், வலி வடக்கு வலையத்தைச் சேர்ந்த ஜே/248, ஜே/251, ஜே/246 மற்றும் ஜே/255 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். முன்பதாக யுத்த காலப்பகுதியில் இடம்பெயர்ந்த இப்பகுதி மக்கள், இன்றுவரை வெவ்வேறு பிரதேசங்களில் அகதி வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். அதேநேரம் யுத்தம் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும், தங்களின் சொந்த நிலங்கள் இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டிருப்பது, வாழ்வாதாரத்தையும், பூர்வீகமாக வாழ்ந்த…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

யாழ் ஆழியவளை பகுதியில் பாழடைந்த கட்டிடத்தில் கஞ்சா பொதிகள்

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழியவளை பகுதியில் பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து 14 கிலோ 500 கிராம் கஞ்சா பொதிகள் சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆழியவளை பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான பொதிகள் காணப்படுவதாக பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு சென்றுள்ளனர். இதன்போது, குறித்த கட்டிடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகளை கைப்பற்றிய அதிரடிப்படையினர், அவற்றை மேலதிக நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். மீட்கப்பட்ட கஞ்சா பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

முல்லைத்தீவு மாவட்ட செயலாளரைச் சந்தித்தார் – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு மாவட்ட செயலாளரைச் சந்தித்தார் – ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு மாவட்டசெயலாளருக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குமிடையில் 16.07.2026இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலா மேம்பாடு, முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச திணைக்களில் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை, கொக்குத்தொடுவாயில் தமிழ்மக்களின் வயல்காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் உப்பள விவகாரம் உள்ளிட்ட பல்வேறுவிடயங்கள் தொடர்பில் கவனஞ்செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

முள்ளியவளையில் நெற்கொள்வனவு ஆரம்பம்;

முள்ளியவளையில் நெற்கொள்வனவு ஆரம்பம்; நிலமைகளை நேரில் சென்று பார்வையிட்டார் – ரவிகரன் எம்.பி விவசாயிகளிடமிருந்து உடனடியாக சிறுபோக நெற்கொள்வனவை ஆரம்பிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்த 08.07.2026அன்று பாராளுமன்றக்க குழு அறையில் இடம்பெற்ற கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தியதுடன், கடந்த 13.07.2026 ஆம் திகதியன்று நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்கு மாகாண பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரனிடமும் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது தொடர் வலியுறுத்தலையடுத்து 15.07.2026ஆம் திகதியிலிருந்து முள்ளியவளை கமநல சேவைநிலையத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இவ்வாறு நெல்சந்தைப்படுத்தல் சபையினால் முள்ளியளையில் நெற்கொள்வனவு மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அங்கு 16.07.2026இன்று நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நெற்கொள்வனவு தொடர்பில் நேரடியாகப் பார்வையிட்டதுடன் நிலமைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

மேலும் படிக்க