யாழ். மாநகர சபை செயற்பாட்டுக்கு ஆணையாளர் முட்டுகட்டை!
யாழ். மாநகர சபை செயற்பாட்டுக்கு ஆணையாளர் முட்டுகட்டை! அனைத்துக் கட்சிகளும் போர்க்கொடி யாழ். மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளுக்கு மாநகர ஆணையாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் தொடர்ச்சியாகப் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டி, மாநகர சபை உறுப்பினர்கள் இன்றையதினம் (11) அடையாளப் பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் கூட்டுப் பங்களிப்புடன் குறித்த அடையாளப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் தேசிய முன்னணி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதன்போது அதிகாரிகளின் இந்த முறையற்ற…
மேலும் படிக்க