அண்மை செய்தி இலங்கை செய்தி. 

நாடு திரும்பும் அகதிகளின் பிரச்சினைகளை ஒரே பொறிமுறையில் தீர்க்க வேண்டும்

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் இலங்கை அகதிகளின் பிரச்சினைகளை ஒரே பொறிமுறையில் நீக்குவதற்கு வடக்கு, கிழக்கில் ‘ஒருங்கிணைந்த மீள் வருகை மற்றும் மறுவாழ்வு அலகு’ ஒன்றை நிறுவ வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளை 27/2 இல் விசேட கூற்றொன்றை முன்வைத்தே அவர், இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது; இந்தியாவிலுள்ள எமது மக்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது சனத்தொகை வீதம் குறைவடைந்து வருகிறது.இந்நிலையில் அவர்கள் மீண்டும் நாட்டுக்கு வந்தால் எமது சனத்தொகை விகிதாசாரம் அதிகரிக்கும், பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் அதிகரிக்கும்.இவ்வாறு வரும் பட்சத்தில்,இராணுவத்தின் வசமுள்ள இவர்களின் காணிகளையும் விடுவிக்க முடியும்.இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைத தமிழ் அகதிகள் மீண்டும் இலங்கைக்குத் திரும்ப விரும்புவது தொடர்பாக, குறிப்பாக பாதுகாப்பு அனுமதி, வீடமைப்பு,காணி மற்றும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மொனராகலையில் அதிகாலை பயங்கரம்; கோர விபத்தில் ஐவர் பலி! மூவர் படுகாயம்

மொனராகலை, கும்புக்கன பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட  ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியின் கும்புக்கன, களு பாலம் பகுதியில், வெல்லவாய நோக்கிப் பயணித்த டிப்பர் வண்டியொன்று எதிர்த்திசையில் வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தின்போது உழவு இயந்திரத்தில் 10 பேர் பயணித்த நிலையில், அவர்களில் எட்டுப் பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 21, 26, 31, 55 மற்றும் 56 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் தொடங்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த ஏனைய மூவரும் மொனராகலை வைத்தியசாலையில் தொடர்ந்து…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கை மக்களுக்கு காவல்துறை விடுத்த முக்கிய அறிவிப்பு

பத்தரமுல்ல, இசுஹுருபாய கட்டடத்தின் 17ஆவது மாடியில் அமைந்துள்ள காவல்துறை. தலைமையகத்தினால் வழங்கப்படும் காவல்துறை.  அனுமதி அறிக்கை தரவு அமைப்பில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அனுமதி சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தல், அறிக்கைகளை கோருதல் மற்றும் சான்றிதழ்களை அச்சிடுதல் ஆகிய நடவடிக்கைகள் தரவு அமைப்பொன்றின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. குறித்த தரவு அமைப்பு நேற்று நண்பகல் முதல் செயலிழந்துள்ளதாக  காவல்துறை. தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அத்துடன், தரவு அமைப்பை மீளச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குறித்த தரவு அமைப்பு மீள செயல்படும் வரை காவல்துறை. அனுமதி அறிக்கைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தரவு அமைப்பு மீளவும் இயங்கியவதுடன் பொலிஸ் அனுமதி அறிக்கைகளுக்கான விண்ணப்பங்களை மீண்டும் சமர்ப்பிக்க முடியும் என பொ

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வடக்கு மாகாணத்தி லுள்ள மருத்துவ மனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நன்கொடை

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு குருதி சுத்திகரிப்பு இயந்திரம் என்பது ஒரு மருத்துவ உபகரணம் மாத்திரமல்ல, தொடர்ந்தும் வாழ்வதற்கான ஒரு வாய்ப்பாகும். அந்த வாய்ப்பை வடக்கு மாகாண மக்களுக்கு, குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் வாழும் நோயாளிகளுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 83 ஆயிரத்து 544 கனேடிய டொலர் பெறுமதியான ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்படுவது மிகவும் பெறுமதியான மனிதநேயப் பங்களிப்பாகும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இந்த இயந்திரங்கள் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைகளுக்கும், மல்லாவி ஆதார மருத்துவமனைக்கும் வழங்கப்படவுள்ளதுடன், அவற்றுக்கான வரித்தீர்வாக வடக்கு மாகாண சபையால் 3.5 மில்லியன் இலங்கை ரூபா வழங்கப்பட்டுள்ளது செந்தில்குமரன் நிவாரண நிறுவனமும் வடக்கு மாகாண சபையும் இணைந்து வடக்கு மாகாண மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு நேற்று(20.08.2026)…

மேலும் படிக்க