தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காணாமல் ஆக்கப் பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு பூரண ஆதரவு – செல்வம் எம்.பி. அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்  மாநாட்டிற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழீழ விடுதலை இயக்கமும் பூரண ஆதரவை வழங்குவதோடு, அவர்களுடன் தோளோடு தோள் நிற்கின்ற ஒரு செயல்பாட்டை  முன்னெடுக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், இராணுவத்திடம் கண் முன்னே ஒப்படைக்கப்பட்ட கணவன்,குழந்தைகள்,உறவுகள் , காணாமல் போயுள்ள நிலையில் காணாமல் போயிருக்கும் உறவுகளைத் தேடி கொண்டிருக்கின்ற காணாமல் போன உறவுகளின் தாய்மார்கள்  எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில்  மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறார்கள். உண்மையில் இந்த உறவுகளின் போராட்டங்கள் அவர்களுடைய தேடுதலுக்கான நடவடிக்கைகள் தான் இன்றைக்கும் எங்களுடைய தேசத்திலே உலக நாடுகளில் பேசும்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வீட்டுத்திட்ட மிகுதி நிதி எங்கே? – அராலி மத்தியில் மக்கள் போராட்டம்

வீட்டுத்திட்ட மிகுதி நிதியை வழங்குமாறு கோரி இன்றையதினம் அராலி மத்தி பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின்போது 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் சஜித் பிரேமதாசவினால் இந்த வீட்டுத்திட்டமானது வழங்கப்பட்டது. குறித்த வீட்டுத்திட்டத்தின் மொத்த நிதியானது ஐந்து இலட்சம் என்று கூறப்பட்டாலும் முழுமையான நிதி பயனாளிகளை சென்றடையாத காரணத்தினால் இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு முன்பாக ஆரம்பமான போராட்டம் சங்கானை பிரதான பேருந்து நிலையம் வரை பேரணியாக நகர்ந்தது. அதனை தொடர்ந்து பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மக்கள் தமது கோரிக்கைகளை பதாகைகளாக தாங்கி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சங்கானை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் மற்றும் உதவித் திட்டப் பணிப்பாளர் ஆகியோரிடம் மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அதிகாரப் போட்டி களுக்கு இடமளிக் காமல்,செயற்பட வேண்டும் வடக்கு ஆளுநர்

வடக்கு மாகாணத்தின் மக்கள் தேவைகளை திறம்பட நிறைவேற்றுவதற்கு மாகாண நிர்வாகத்தின் ஒவ்வொரு அங்கமும் ஒரே திசையிலும் ஒரே நோக்கத்துடனும் செயற்பட வேண்டும். தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள், தன்முனைப்பு மற்றும் அதிகாரப் போட்டிகளுக்கு இடமளிக்காமல், அனைவரும் மக்களுக்காக ஒரே அணியாகச் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் ஆளணி மற்றும் பயிற்சிப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிர்வாகச் சட்டம் தொடர்பான பயிற்சிப் பட்டறை இன்று (18.08.2026) செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் நா.வேதநாயகன் உரையாற்றினார். நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், மாகாண நிர்வாகத்தின் கட்டமைப்பு அபிவிருத்தி, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் வரவு–செலவுத் திட்ட முகாமைத்துவம் போன்ற பல விடயங்கள் முக்கியமானவையாக இருந்தாலும், அவற்றைச் சரியாக முன்னெடுப்பதற்கான அடிப்படை…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

ஈழத்தமிழர்கள்மீதான சகல படுகொலை களுக்கும் சர்வதேச நீதிவிசாரணை அவசியம்; ரவிகரன்

செம்மணி உள்ளிட்ட ஈழத்தமிழர்கள்மீதான சகல படுகொலைகளுக்கும் சர்வதேச நீதிவிசாரணை அவசியம்; அதற்கு இலங்கை அரசு ஒத்துழைக்கவேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து. செம்மணி படுகொலை உள்ளிட்ட தமிழ் மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட சகல படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி விசாரணை மேற்கொள்ளப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்திய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சர்வதேச நீதி விசாரணைக்கு தற்போதைய அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டுமெனவும் வலியுறுத்தினார். இவ்வாறு சர்வதேச நீதிவிசாரணைகள் மேற்கொள்ளப்படுவதன்மூலம் உண்மைகள் வெளிக்கொணரப்பட்டு, தமிழினப் படுகொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டுமெவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் 18.08.2026இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், செம்மணி படுகொலை உள்ளிட்ட தமிழினப் படுகொலைச் சம்பவங்களுக்கு சர்வதேச விசாரணை தேவை செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வுப் பணிகளின் 54ஆம் நாள் அகழ்வு 17.08.2026…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பலாலி காணி விடுவிப்பு போராட்டம் – போராட்டகாரருக்கு எதிராக வழக்கு

பலாலியில்  இடம்பெற்ற காணி விடுவிப்பு போராட்டத்தில் இடையூறு விளைவித்ததாக கூறி, வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தன், ஜனநாயக கட்சியின் தலைவர் வேந்தன் மற்றும் போராட்டத்தில் கலந்து கொண்ட காணி உரிமையாளர்களுக்கு பலாலி பொலிசாரும், உதவி பொலிஸ் அத்தியட்சகரும் இணைந்து மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். குறித்த வழக்கில், 2026.08.16 அன்று பலாலி பிரதான வீதியில் அமைந்துள்ள T சந்தியில், பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்டன் சுதாகர் என்பவரின் ஏற்பாட்டில், உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி, காலை 09.30 மணி முதல் 13.00 மணி வரை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பலாலி பிரதான வீதி T சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களினால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமை தொடர்பாக குறிப்பிட்டே, 2026.08.17 அன்று பலாலி பொலிஸாரினால்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்?

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். குறித்த விஜயம் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இடம்பெறும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது. இந்த விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உட்பட அரசாங்கத்தின் உயர் மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு நடவடிக்கைகள், பயிற்சித் திட்டங்கள், பிராந்திய பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயத்தின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

மேலும் படிக்க
தமிழ்நாடு இந்தியா செய்திகள் பொதுவான செய்திகள் 

பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டு,: தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்

கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் 3 தமிழர்கள் பலி: தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், அனூர் தாலுகா வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டு மூன்று நாட்களாகியும் இதுவரையில் கர்நாடகா அரசின் சார்பில் உரிய நீதி விசாரணையோ உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை குறித்து எந்த அறிவிப்பும் இல்லாததால் கர்நாடக அரசின் போக்குவரத்துக் கழக பேருந்தை சிறைபிடித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் உயிரிழந்த தமிழர்களுக்கு நீதி கேட்டு போராட்டம். கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் (அனூர்) தாலுகாவில் அமைந்துள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்தப் பகுதியில் வசித்து வந்த ஆண்டனி சாமி (50), ஜான் ரோஸ் பீட்டர் (42) மற்றும் குமார் (35) ஆகிய 3 தமிழர்கள் உயிரிழந்தனர். மேலும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

இராணுவ முகாம், மற்றும் விகாரை க்குள். தமிழ்மக்கள் படுகொலை செய்து புதைக்கப் பட்டு ள்ளனர்;

வட, கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களுக்குள்ளும், விகாரைகளுக்குள்ளும் தமிழ்மக்கள் படுகொலைசெய்து புதைக்கப்பட்டுள்ளனர்; அகழ்வாய்வுகளுக்கு உட்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களுக்குள்ளும், எவ்வித நிலத்தொடர்புகளுமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளுக்குள்ளும் கடந்தகாலங்களில் தமிழ்மக்கள் படுகொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். எனவே தமிழினப் படுகொலைக் குற்றவாளிகளை பாதுகாக்கும் அரணாக வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவமுகாம்களையும், விகாரைகளையும் பயன்படுத்த வேண்டாம் எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இராணுவ முகாம்களிலுள்ள இராணுவத்தினரை வெளியேற்றிவிட்டு சர்வதேச மேற்பார்வையில் இராணுவ முகாம்களையும், விகாரைகளையும் அகழ்வாய்விற்கு உட்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார். செம்மணி படுகொலை உள்ளிட்ட ஈழத் தமிழர்கள் மீதான இனவழிப்புச் செயற்பாடுகளுக்கு பன்னாட்டு நீதிகோரி தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் 17.08.2026இன்றையதினம் மேற்கொள்ளப்பட்ட நீதியின் ஓலம் – 02′…

மேலும் படிக்க