இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கட்டுநாயக்கவில் ஒரு கோடி பயணிகளை கையாளத் திட்டம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் எதிர்வரும் 12 மாதங்களுக்குள் ஒரு கோடி பயணிகளை கையாளும் வகையில் மறுசீரமைக்கப்பட்டு வருவதாக, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.முதலாவது முனையத்தில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், பல்வேறு விரிவாக்கத் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”36 பயணிகள் பதிவு (Check-in) கவுண்டர்கள் மற்றும் முழுமையாக வசதிப்படுத்தப்பட்ட புதிய லொபி பகுதியை அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முனையம் ஒன்றின் திறனை அதிகரிப்பதற்காக மேலும் நான்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை அடுத்த மூன்று மாதங்களுக்குள் உரிய நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இந்த அனைத்துத் திட்டங்களும் ஒரு வருடத்துக்குள் நிறைவுசெய்யப்படும். இதன் மூலம் முனையம் ஒன்றில் பயணிகள் கையாளும் திறன் அடுத்த ஆண்டு, ஒரு கோடியாக அதிகரிக்கும்.இதேவேளை, நீண்டகாலமாக தாமதமடைந்துள்ள இரண்டு திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA), முனையம் இரண்டின் திட்டத்துக்கான ஒப்பந்த நிறுவனமாக எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் தெரிவுசெய்யப்படும்.

அன்மைச் செய்தி

Leave a Comment