அபிவிருத்தி உத்தி யோகத்தர் களின் பிரச்சினையை விசாரிக்க சுயாதீன விசாரணைக் குழு
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவம் மற்றும் தொழில்சார் நலன்களைப் பாதித்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணையை முன்னெடுப்பதற்கான சுயாதீன விசாரணைக்குழு நியமிக்கப்படும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்தார். வடக்கு மாகாணசபை அலுவலக வளாகத்துக்கு முன்பாக இன்று (17.08.2026) காலை போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள், அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து தமது மனுவை இவர்களில் ஐந்து பிரதிநிதிகளுக்கு ஆளுநரை நேரில் சந்தித்து தமது கருத்துக்களை முன்வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் கையளித்த மனுவில், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவத்தையும் தொழில்சார் நலன்களையும் பாதித்ததாகக் குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில் சுயாதீனமானதும் பக்க சார்பற்றதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சம்பவத்துடன் தொடர்புடைய ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. மேலும்,…
மேலும் படிக்க