சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணி எலும்புக் கூடுகளின் மரபணு மாதிரிகளை சேகரித்து பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்க – ரவிகரன்

செம்மணி எலும்புக்கூடுகளின் ஆய்வு விவகாரம்; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மரபணுமாதிரிகளை சேகரித்து பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்க – ரவிகரன்எம்.பி வலியுறுத்து செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகளின் தரவுகளோடு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மரபணு மாதிரிகளை ஒப்பிட்டு ஆய்வுசெய்யவேண்டிய சட்டத் தேவைப்பாடு இருப்பதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணுக்களை அவர்களின் ஒப்புதலுடன் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டுமெவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் 05.08.2026இன்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் செம்மணி மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வுப்பணிகள் ஓகஸ்ட் 04ஆம் திகதி நேற்றையதினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் செம்மணிமனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளில் இதுவரை மொத்தம் 483மனித எலும்புக்கூடுகள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

டெங்கு ஒழிப்புக்கு இந்தியா வழங்கிய மலத்தியன் அமைச்சரிடம் ஒப்படைப்பு

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்தியா 500 லீற்றர் மலத்தியன் பூச்சிகொல்லியை வழங்கியுள்ளது.சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (04) இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.இந்நிகழ்வு சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இந்த நன்கொடை, இலங்கையின் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு அத்தியாவசிய தொழில்நுட்ப ஆதரவாக அமைவதோடு, பொது சுகாதாரத் துறையில் இலங்கை மற்றும் இந்தியா இடையே பல தசாப்தங்களாக நிலவி வரும் நெருக்கமான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாகவும் கருதப்படுகிறது. நாட்டின் சில பகுதிகளில் டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகள் தற்போது பயன்படுத்தப்படும் சில பூச்சிக்கொல்லிகளுக்கு எதிர்ப்பு சக்திைய உருவாக்கியிருப்பது விஞ்ஞான ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்,மாற்று பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.இந்தியாவால் வழங்கப்பட்டுள்ள தொழில்நுட்பத் தரமுடைய மலத்தியன், அதிக ஆபத்து நிலவும் பகுதிகளை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தாயகச் செய்தி 

முல்லை, மன்னார் வைத்திய சாலைகளுக்கு CT, MRI ஸ்கேனர் இயந்திரங்கள். நளிந்த ஜயதிஸ்ஸ

வடக்கில் முல்லைத்தீவு மற்றும் மன்னார் பொது வைத்தியசாலைகளுக்கு சி.ரி, எம்.ஆர்.ஐ.ஸ்கேனர் இயந்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், வன்னிமாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.ரவிகரன் எம்.பி தமது கேள்வியின் போது; மன்னார் வைத்தியசாலைக்கு சி.ரி ஸ்கேனர் வசதிகள் ஏற்படுத்தப்படுமென ஏற்கனவே சுகாதார அமைச்சரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,முல்லைத்தீவு மாவட்டத்திலும் சி,ரி ஸ்கேனர் வசதி இல்லாமல் நீண்டகாலமாக முல்லைத்தீவு மாவட்ட நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். பல நூற்றுக் கணக்கான நோயாளர்கள் சி.ரி ஸ்கேன் எடுப்பதற்காக வவுனியா உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சென்று வரவேண்டிய நிலையே காணப்படுகிறது.அந்த வகையில் மேற்படி இரண்டு வைத்தியசாலைகளுக்கும் சி.ரி ஸ்கேனர் வசதிகளை வழங்க வேண்டுமென,…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அம்பாறையில். ஐஸ்’ போதைப் பொருளுடன் மூவர் கைது

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை பிராந்திய பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, அம்பாறை பிராந்திய பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் வழிகாட்டலில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (04) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து தலா 150 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் பிரதான நபரிடமிருந்து 2,500 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் 14,700 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அம்பாகஹவெல்ல, ஜெமுனுபுர மற்றும் பொல்வக காலனி பகுதிகளைச் சேர்ந்த 21 முதல்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இலங்கைக்கு வருகை

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட நிலையில், இன்று புதன்கிழமை இலங்கைக்கு வருகை தருகின்றார். கொழும்பில் அரசுடன் உயர்மட்டப் பேச்சுகளை முன்னெடுப்பதுடன், இலங்கையில் நீடித்து நிலைக்கக்கூடிய இனச்சிக்கலுக்கான தீர்வுகள், பிராந்தியப் பாதுகாப்பு, உத்திசார் இணைப்புத் திட்டங்கள் மற்றும் இருதரப்புப் பொருளாதார உறவுகள் குறித்துக் கலந்துரையாடுவதே அவரின் இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கமாகவுள்ளது. தனது விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்து அவர் விரிவான பேச்சுகளை நடத்தவுள்ளார். இந்தியாவின் ‘அண்டைய நாடுகளுக்கு முதலுரிமை’ கொள்கையின் அடிப்படையில், இலங்கையுடனான இராஜதந்திர மற்றும் பொருளாதாரப் பிணைப்பை மேலும் வலுப்படுத்த புதுடில்லி தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. இந்த விஜயத்தின் மிக முக்கியமான அம்சமாக, வடக்கு – கிழக்கு மற்றும் மலையகத்தைப்…

மேலும் படிக்க