தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

புதிய கட்டுமான நடவடிக்கை களுக்காக, தற்காலிக இடமாற்றம் குறித்து விசேட ஆலோசனை

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய கட்டுமான நடவடிக்கைகளுக்காக, மருத்துவமனையின் சில பிரிவுகளை மாகாண சபைக்குச் சொந்தமான கட்டடத்துக்குத் தற்காலிகமாக இடமாற்றுவது தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (06.08.2026) வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு முன்பாக அமைந்துள்ள மாகாண சபைக்குச் சொந்தமான கட்டடத்தில் முன்னர் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை இயங்கி வந்த நிலையில், தற்போது அங்கு மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களம் இயங்கி வருகிறது. போதனா மருத்துவமனையில் தரைமட்டத்திலுள்ள சில பழமையான கட்டடங்கள் அகற்றப்பட்டு புதிய மாடிக் கட்டடம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கட்டுமானப் பணிகள் நிறைவடைய மூன்று ஆண்டுகள் செல்லும் என்பதால், இக்காலப்பகுதியில் தற்காலிகமாக இடம்பெயர வேண்டிய சிகிச்சைப் பிரிவுகளை மாகாண சபைக்குச் சொந்தமான குறித்த கட்டடத்துக்கு மாற்றுவது தொடர்பாகவும், அதற்கான ஒப்பந்தம்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் : குடும்பப் தகராறால் இரசாயனம் அருந்திய நபர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், அத்தியடிப் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய துரைராசா புஸ்பநாதன் என்பவர் இரசாயனப் திரவத்தை அருந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான இவர், வீட்டிலிருந்த கல்சியம் நீக்கி  திரவத்தைக் குடித்துள்ளார். இரசாயனத்தை அருந்தியதால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அவர், உடனடியாக மீட்புக் குழுவினரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றைய தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பான திடீர் மரண விசாரணைகளை அதிகாரி வி. அன்ரலா மேற்கொண்டுள்ளதோடு, மரணத்திற்கான மேலதிக பின்னணிகள் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மிகை ஊழியர் அதிபர்கள்மீதான புறக்கணிப் பென்பது “நவீன தீண் டாமை” ரவிகரன் எம்.பி;

மிகை ஊழியர் அதிபர்கள்மீதான புறக்கணிப்பென்பது “நவீன தீண்டாமை” எனச் சுட்டிக்காட்டிய ரவிகரன் எம்.பி; அவர்களின் நிருவாகக் கொடுப்பனவு மற்றும் இடமாற்றம் தொடர்பிலும் பிரதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார் மிகை ஊழியர் அதிபர்கள்மீதான புறக்கணிப்பென்பது “நவீன தீண்டாமை” என கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்னவிடம் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு மிகை ஊழியர் நியமன அதிபர்களுக்கு நிர்வாகக்கொடுப்பனவு வழங்கப்படாமை மற்றும் அவர்களுக்கு இடமாற்றம் பெறுவதிலுள்ள சிக்கல் நிலமைகள் குறித்தும் இதன்போது பாரளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்னவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆட்சேர்ப்பின் அடிப்படையிலும், நிதிபிரமாணங்களுக்கு அமைவாகவும், சுற்றறிக்கைகளின் அடிப்படையிலும் மிகை ஊழியர் அதிபர்களுக்கு நிர்வாகக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை எனத் தெரிவித்த பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, மிகை ஊழியர் அதிபர்களின் இடமாற்றம் தொடர்பில் எதிர்வரும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கீரிமலை பகுதியில் கழிவுகளை மீள அள்ளிச் செல்லாமல், பள்ளங்களுக்குள் தள்ளிவிட முயற்சி.

யாழ்ப்பாணம் – கீரிமலை பகுதியில் ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள கழிவுகளை மீள அள்ளிச் செல்லாமல், அவற்றை மேலும் பள்ளங்களுக்குள் தள்ளிவிட முயன்ற வலி. தெற்கு பிரதேச சபையினரை வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் முன்னதாக சுண்ணக்கல் அகழ்வுக்காக உருவாக்கப்பட்ட பாரிய பள்ளங்களில் வலி. தெற்கு பிரதேச சபையினரால் இலத்திரனியல் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகள் கொட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு வலி. வடக்கு பிரதேச சபையினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், வடமாகாண ஆளுநர், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை, மாவட்ட செயலாளர் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர். அத்துடன், ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள கழிவுகளை வலி.…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

எமது பூர்வீக நிலங் களை உடனடியாக எம்மிடம் ஒப்படை யுங்கள்! – மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

தமது பூர்வீக நிலங்களை உடனடியாக உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க வலியுறுத்தியும், நீண்டகாலமாக காணிகளை மீட்பதற்காக போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் மன்னாரில் இன்று (7) வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் நகர சுற்றுவட்டத்திற்கு முன்பாக காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த போராட்டம், காணி இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டிலும், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (MSEDO) நிறுவனத்தின் அனுசரணையிலும் நடைபெற்றது. யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவு கேப்பாபுலவு மற்றும் மட்டக்களப்பு மயிலத்தமடு–மாதவனை உள்ளிட்ட பகுதிகளில் தமது பூர்வீக காணிகளை மீட்பதற்காக பல ஆண்டுகளாக போராடி வரும் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மன்னார் மாவட்டத்தில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள், கிராம மக்கள், மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், மனித…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கசிப்பு நிலைய முற்றுகைக்கு சென்ற பொலிஸாரை தாக்கிய கும்பல்!

மட்டக்களப்பு – வெல்லாவெளி 35ஆம் கொலனி பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை முற்றுகையிடச் சென்ற பொலிஸார் மீது பெண்கள் உட்பட 25 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியதில் இரு பொலிஸார் படுகாயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று (06) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று இயங்கி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான 7 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர் ஜீப் வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சென்று இரவு 7 மணியளவில் குறித்த இடத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது, அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களின் உறவினர்கள் எனக் கூறப்படும் பெண்கள் உள்ளிட்ட 25 பேர் கொண்ட குழுவினர் பொல்லுகளால் பொலிஸாரை தாக்கி, முற்றுகை நடவடிக்கையை தடுக்க முயற்சித்துள்ளனர். தாக்குதலில் இரு பொலிஸ் அதிகாரிகள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு

அனைத்து தேர்தல்களையும் உரிய காலக்கட்டத்தில் நடத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அதன்படி, மாகாண சபைத் தேர்தலை முடிந்தவரை விரைவாக நடத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து விளக்கமளிக்கும் நோக்கில், நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுடன் நேற்று வியாழக்கிழமை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். ”நாட்டில் நடைபெற வேண்டிய அனைத்து தேர்தல்களும் ஜனநாயக நடைமுறைகளுக்கு அமைவாக உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அதன்பிரகாரம் மாகாண சபைத் தேர்தலை பிற்போடும் எந்தவொரு என்னமும் அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, உரிய சட்ட நடவடிக்கைகளின் பின்னர் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த எதிர்பார்க்கிறோம் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை,…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

திருகோணமலையில் பாடசாலையில் குளவிக்கொட்டு: 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகதிவுல்வெவ தேசிய பாடசாலையில் இன்று (06) காலை இடம்பெற்ற திடீர் குளவிக்கொட்டுச் சம்பவத்தில் 30 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை நேரத்தில் எதிர்பாராத விதமாக இடம்பெற்ற இந்தச் சம்பவத்தையடுத்து, குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்களுக்கு உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டதுடன், அவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். காயமடைந்த மாணவர்களில் மூவரின் உடல்நிலை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏனைய மாணவர்கள் மருத்துவ கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைக் கட்டடத்தில் இருந்த குளவிக் கூடு திடீரென கலைந்ததால், அங்கு இருந்த மாணவர்கள் மீது குளவிகள் தாக்குதல் நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து பாடசாலை வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதுபோன்ற…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டில் டெங்கு பாதிப்பு 88 ஆயிரத்தை கடந்தது – 63 பேர் உயிரிழப்பு

நடப்பு ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரை நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 88,000 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (05) நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 88,088 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காய்ச்சல் காரணமாக 63 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஒரு மாத காலப்பகுதியில் மாத்திரம் 2,739 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் நுளம்பு பெருக்கம் ஏற்படும் இடங்களை அழித்தல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு பொதுமக்களிடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

நெடுந்தீவு கடற்பரப்பில் சிக்கிய 11 இந்திய மீனவர்களை மீட்கும் பணியில் இலங்கை கடற்படை

இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான இந்திய இழுவைப் படகில் இருந்த 11 இந்திய மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகளை இலங்கை கடற்படை ஆரம்பித்துள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று (05) இரவு நிலவிய சீரற்ற வானிலை காரணமாக இந்திய இழுவைப் படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த படகில் 11 இந்திய மீனவர்கள் இருந்த நிலையில், அவர்கள் ஆபத்தான நிலைக்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, மீனவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்

மேலும் படிக்க