சிறப்புச் செய்தி தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

எமது பூர்வீக நிலங் களை உடனடியாக எம்மிடம் ஒப்படை யுங்கள்! – மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

தமது பூர்வீக நிலங்களை உடனடியாக உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க வலியுறுத்தியும், நீண்டகாலமாக காணிகளை மீட்பதற்காக போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் மன்னாரில் இன்று (7) வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் நகர சுற்றுவட்டத்திற்கு முன்பாக காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த போராட்டம், காணி இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டிலும், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (MSEDO) நிறுவனத்தின் அனுசரணையிலும் நடைபெற்றது. யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவு கேப்பாபுலவு மற்றும் மட்டக்களப்பு மயிலத்தமடு–மாதவனை உள்ளிட்ட பகுதிகளில் தமது பூர்வீக காணிகளை மீட்பதற்காக பல ஆண்டுகளாக போராடி வரும் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மன்னார் மாவட்டத்தில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள், கிராம மக்கள், மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், மனித…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கசிப்பு நிலைய முற்றுகைக்கு சென்ற பொலிஸாரை தாக்கிய கும்பல்!

மட்டக்களப்பு – வெல்லாவெளி 35ஆம் கொலனி பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை முற்றுகையிடச் சென்ற பொலிஸார் மீது பெண்கள் உட்பட 25 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியதில் இரு பொலிஸார் படுகாயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று (06) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று இயங்கி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான 7 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர் ஜீப் வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சென்று இரவு 7 மணியளவில் குறித்த இடத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது, அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களின் உறவினர்கள் எனக் கூறப்படும் பெண்கள் உள்ளிட்ட 25 பேர் கொண்ட குழுவினர் பொல்லுகளால் பொலிஸாரை தாக்கி, முற்றுகை நடவடிக்கையை தடுக்க முயற்சித்துள்ளனர். தாக்குதலில் இரு பொலிஸ் அதிகாரிகள்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

யாழ். நகரில் படையினரின் அடாவடித்தனமான வியாபாரம்

யாழ்ப்பாண நகரில்  சோள வியாபார நடவடிக்கைகளில் இலங்கைப் படையினர் ஈடுபட்டு வருவதால் சிறு வியாபாரிகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக பலராலும் குற்றம் சாட்டப்படுகின்றது. அத்துடன் வலிகாமம் வடக்கு பகுதியில்  அபகரிக்கப்பட்ட மக்களின் சொந்தக் காணிகளில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் விவசாய விளைச்சல்ககளே இவ்வாறு யாழ் நகருக்குக் கொண்டுவந்து விற்கப்படுகின்றதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது ​குறிப்பாக வலிகாமம் வடக்கில் மக்களின் சொந்தப் பூர்வீக நிலங்கள் இன்னமும் விடுவிக்கப்படாமல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அந்தக் காணிகளில் படையினர் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறு அறுவடை செய்யப்படும் சோளங்களை இராணுவத்தினரே நேரடியாகத் தங்களது வாகனங்களில் யாழ்ப்பாண நகர்ப் பகுதிக்குக் கொண்டுவந்து விற்பனையில் ஈடுபட்டு வருவது அண்மைய நாள்களில் அவதானிக்க முடிகின்றது. ​அதேநேரம் தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு கோரி வலிகாமம் பகுதி மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். பல வருடங்களாக அகதி…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணி மனிதப் புதைகுழியின் என்புக்கூடுகளின் எண்ணிக்கை 499 ஆக உயர்வு

செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமையுடன் 100ஆவது நாள் பூர்த்தியடையும் நிலையில் நேற்று வியாழக்கிழமை வரை 499 என்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு 494 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 100 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளில் சிறுவர்கள், பெரியவர்கள் என என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை குவியல்களாகவும், ஒழுங்கு முறையின்றியும் நேர் சீரின்றியும், உட்கார்ந்த நிலையிலும், கழுத்துடன் துண்டாட்டப்பட்டு, மண்டையோடு பிறிதொரு இடத்திலும் தலையில்லா முண்டமான என்புகூட்டு பிறிதொரு இடத்திலும், மழை அங்கியுடன் சிறுவர் ஒருவரின் என்புக் கூடும் மீட்கப்பட்டுள்ளன. என்புக் கூடுகள் மாத்திரமன்றி சான்றுப் பொருட்களாக குழந்தைகளுக்கான “பால் போத்தல்”, பாடசாலை புத்தக பை, வளையல்கள், செருப்பு, காலுறைகள், மோதிரம், தாயத்து உள்ளிட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.   மீட்கப்பட்ட என்பு கூடுகள் மற்றும் சான்றுப் பொருட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளன. நேற்று…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

திருகோணமலையில் பாடசாலையில் குளவிக்கொட்டு: 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகதிவுல்வெவ தேசிய பாடசாலையில் இன்று (06) காலை இடம்பெற்ற திடீர் குளவிக்கொட்டுச் சம்பவத்தில் 30 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை நேரத்தில் எதிர்பாராத விதமாக இடம்பெற்ற இந்தச் சம்பவத்தையடுத்து, குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்களுக்கு உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டதுடன், அவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். காயமடைந்த மாணவர்களில் மூவரின் உடல்நிலை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏனைய மாணவர்கள் மருத்துவ கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைக் கட்டடத்தில் இருந்த குளவிக் கூடு திடீரென கலைந்ததால், அங்கு இருந்த மாணவர்கள் மீது குளவிகள் தாக்குதல் நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து பாடசாலை வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதுபோன்ற…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

நெடுந்தீவு கடற்பரப்பில் சிக்கிய 11 இந்திய மீனவர்களை மீட்கும் பணியில் இலங்கை கடற்படை

இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான இந்திய இழுவைப் படகில் இருந்த 11 இந்திய மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகளை இலங்கை கடற்படை ஆரம்பித்துள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று (05) இரவு நிலவிய சீரற்ற வானிலை காரணமாக இந்திய இழுவைப் படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த படகில் 11 இந்திய மீனவர்கள் இருந்த நிலையில், அவர்கள் ஆபத்தான நிலைக்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, மீனவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தை பயன்படுத்தி, துணிகரக் கொள்ளை

யாழ்ப்பாணம், அராலி வடக்கு பகுதியில் மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தை பயன்படுத்தி, துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது. பொலிஸ் தகவல்களின்படி, நேற்றுமுன்தினம் இரவு மின்சாரம் தடைப்பட்டிருந்த வேளையில் நால்வர் கொண்ட கும்பல் ஒன்று அராலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. அப்போது வீட்டில் இருந்தவர்களை தாக்கிய குறித்த கும்பல்,   சுமார் 10 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையடித்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்கள் முகங்களை மூடியபடி வந்திருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை என வீட்டார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், கொள்ளையில் ஈடுபட்டவர்களை கண்டறியும் நோக்கில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

செம்மணி மனித புதைகுழியின் 44ஆவது நாளான நேற்று (05), மேலும் 8 எலும்புக்கூடுகள்

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 44ஆவது நாளான நேற்று (05), மேலும் 8 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 8 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், செம்மணி மனித புதைகுழியின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் கீழ் இதுவரை மொத்தமாக 491 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 489 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணி எலும்புக் கூடுகளின் மரபணு மாதிரிகளை சேகரித்து பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்க – ரவிகரன்

செம்மணி எலும்புக்கூடுகளின் ஆய்வு விவகாரம்; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மரபணுமாதிரிகளை சேகரித்து பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்க – ரவிகரன்எம்.பி வலியுறுத்து செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகளின் தரவுகளோடு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மரபணு மாதிரிகளை ஒப்பிட்டு ஆய்வுசெய்யவேண்டிய சட்டத் தேவைப்பாடு இருப்பதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணுக்களை அவர்களின் ஒப்புதலுடன் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டுமெவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் 05.08.2026இன்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் செம்மணி மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வுப்பணிகள் ஓகஸ்ட் 04ஆம் திகதி நேற்றையதினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் செம்மணிமனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளில் இதுவரை மொத்தம் 483மனித எலும்புக்கூடுகள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தாயகச் செய்தி 

முல்லை, மன்னார் வைத்திய சாலைகளுக்கு CT, MRI ஸ்கேனர் இயந்திரங்கள். நளிந்த ஜயதிஸ்ஸ

வடக்கில் முல்லைத்தீவு மற்றும் மன்னார் பொது வைத்தியசாலைகளுக்கு சி.ரி, எம்.ஆர்.ஐ.ஸ்கேனர் இயந்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், வன்னிமாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.ரவிகரன் எம்.பி தமது கேள்வியின் போது; மன்னார் வைத்தியசாலைக்கு சி.ரி ஸ்கேனர் வசதிகள் ஏற்படுத்தப்படுமென ஏற்கனவே சுகாதார அமைச்சரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,முல்லைத்தீவு மாவட்டத்திலும் சி,ரி ஸ்கேனர் வசதி இல்லாமல் நீண்டகாலமாக முல்லைத்தீவு மாவட்ட நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். பல நூற்றுக் கணக்கான நோயாளர்கள் சி.ரி ஸ்கேன் எடுப்பதற்காக வவுனியா உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சென்று வரவேண்டிய நிலையே காணப்படுகிறது.அந்த வகையில் மேற்படி இரண்டு வைத்தியசாலைகளுக்கும் சி.ரி ஸ்கேனர் வசதிகளை வழங்க வேண்டுமென,…

மேலும் படிக்க