தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

40 ஆண்டுகளுக்குப் பின்னர் புனரமைக்கப்படும் இலந்தைக் குளம்

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இலந்தைக் குளத்தின் புனரமைப்புப் பணிகளை சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று(11) உத்தியோபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குச்சவெளி பிரதேச செயலாளர் U.L. சியாவுல் ஹக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், “நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்டிருந்த இலந்தைக் குளத்தைச் செப்பனிடுவதற்காக அரசாங்கத்தினால் ரூ. 20.1 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்புனரமைப்புத் திட்டம் முழுமையடையும் போது, சுமார் 120 ஏக்கர் வயல் நிலங்கள் நேரடி நீர்ப்பாசன வசதியைப் பெறவுள்ளன. இதன் மூலம் அப்பகுதியின் விவசாய நடவடிக்கைகள் புத்துயிர் பெறுவதோடு, பல விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் கணிசமாக வலுப்பெறும். தற்போது திருகோணமலை மாவட்டத்திலும், குச்சவெளி பிரதேசத்திலும் பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கல்முனை வடக்கு வைத்தியசாலை விவகாரம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 5 முறைப்பாடுகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நியமனம் பெற்ற உதவி சுகாதார உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமைக்கு எதிராக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் ஐந்து (5) முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டத்தரணி சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் வழிகாட்டலில், குறித்த முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்த்துக்கொள்வது தொடர்பில், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரையும், சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரியையும் சட்டத்தரணி முஅஸ்ஸம் மற்றும் சட்டத்தரணி ருடானி சாஹிர் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டனர். எனினும், குறித்த சந்திப்பின் போது, நியமனம் பெற்ற உதவி சுகாதார உத்தியோகத்தர்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதே இதற்கான சிறந்த தீர்வாகும் என்ற நிலைப்பாட்டை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட உதவி சுகாதார உத்தியோகத்தர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், அவர்களின் அடிப்படை உரிமைகள்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

எங்களின் பூர்வீக காணி அரச படைகளின் சரணாலயமா? பலாலி மக்கள்

எங்களின் பூர்வீக காணி அரச படைகளின் சரணாலயமா? எங்கள் நிலங்களை சுரண்ட இனியும் இடமளிக்க முடியாது என்ற வலுவான கோசத்துடன், வலிகாமம் வடக்கு – பலாலி பகுதியில் மீள்குடியேற முடியாத நிலையில் உள்ள மக்கள் இன்று 8ஆவது வாரமாகவும் அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர். பலாலி சந்தியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமது பூர்வீக நிலங்களை விடுவித்து மீள்குடியேற்றத்துக்கு வழிவகுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். பல ஆண்டுகளாக தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேற முடியாத நிலையில் இருப்பதாகவும், தமது காணிகள் அரச படைகளின் கட்டுப்பாட்டில் காணப்படுவதால் வாழ்வாதாரம், குடியிருப்பு மற்றும் எதிர்கால வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். எங்கள் காணிகள் எங்களுக்கே வேண்டும், பூர்வீக நிலங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும், மக்களின் நிலங்களை சுரண்டுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறு மக்கள் தமது…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வரணி பிரதேசத்தில் மகிழுந்து ஒன்று மரத்துடன் மோதியதில் மூவர் காயம்

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பிரதேசத்தில் மகிழுந்து ஒன்று மரத்துடன் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து நேற்று பிற்பகல் 4 மணியளவில் வரணி பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த மகிழுந்து, வரணி வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள ஆலமரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்துக்குள்ளான மகிழுந்தில் பயணித்த மூவரும் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்தில் மகிழுந்து பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த 37 வயதுடைய நபர் கைது

சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த 37 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளிக்கிழமை (8) அதிகாலை பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சம்மாந்துறை, ஜமாலியா பாடசாலை வீதிக்கு அருகில் அதிகாலை நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 5 கேன்கள் கொள்ளளவு கொண்ட 25 கசிப்பு போத்தல்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல   மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி   ஆலோசனையிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் அவர்களின் நெறிப்படுத்தலிலும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் நேரடி…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

புதிய கட்டுமான நடவடிக்கை களுக்காக, தற்காலிக இடமாற்றம் குறித்து விசேட ஆலோசனை

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய கட்டுமான நடவடிக்கைகளுக்காக, மருத்துவமனையின் சில பிரிவுகளை மாகாண சபைக்குச் சொந்தமான கட்டடத்துக்குத் தற்காலிகமாக இடமாற்றுவது தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (06.08.2026) வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு முன்பாக அமைந்துள்ள மாகாண சபைக்குச் சொந்தமான கட்டடத்தில் முன்னர் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை இயங்கி வந்த நிலையில், தற்போது அங்கு மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களம் இயங்கி வருகிறது. போதனா மருத்துவமனையில் தரைமட்டத்திலுள்ள சில பழமையான கட்டடங்கள் அகற்றப்பட்டு புதிய மாடிக் கட்டடம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கட்டுமானப் பணிகள் நிறைவடைய மூன்று ஆண்டுகள் செல்லும் என்பதால், இக்காலப்பகுதியில் தற்காலிகமாக இடம்பெயர வேண்டிய சிகிச்சைப் பிரிவுகளை மாகாண சபைக்குச் சொந்தமான குறித்த கட்டடத்துக்கு மாற்றுவது தொடர்பாகவும், அதற்கான ஒப்பந்தம்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் : குடும்பப் தகராறால் இரசாயனம் அருந்திய நபர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், அத்தியடிப் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய துரைராசா புஸ்பநாதன் என்பவர் இரசாயனப் திரவத்தை அருந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான இவர், வீட்டிலிருந்த கல்சியம் நீக்கி  திரவத்தைக் குடித்துள்ளார். இரசாயனத்தை அருந்தியதால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அவர், உடனடியாக மீட்புக் குழுவினரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றைய தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பான திடீர் மரண விசாரணைகளை அதிகாரி வி. அன்ரலா மேற்கொண்டுள்ளதோடு, மரணத்திற்கான மேலதிக பின்னணிகள் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

இடிந்து விழும் அபாயத்தில் பழமையான இரும்புப் பாலம்; பரவிப்பாஞ்சான் மக்கள் போராட்டம்

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பரவிப்பாஞ்சான் பகுதியில் அமைந்துள்ள பழமையான இரும்புப் பாலம் சேதமடைந்துள்ள நிலையில், அதனை உடனடியாக சீரமைத்துத் தருமாறு கோரி பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏ-9 பிரதான வீதியிலிருந்து சுமார் 250 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள குறித்த பாலம், 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைக்கப்பட்டதாகவும், 1985ஆம் ஆண்டு சேதமடைந்த பின்னர் விடுதலைப் புலிகளால் தற்காலிகமாக அமைக்கப்பட்டு நீண்டகாலமாக மக்கள் பாவனையில் இருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறித்த பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், பல்வேறு மக்கள் போராட்டங்களின் பின்னர் 2018ஆம் ஆண்டு கட்டம் கட்டமாக மீள மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. எனினும், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பரவிப்பாஞ்சான் கிராமத்தின் வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மிகை ஊழியர் அதிபர்கள்மீதான புறக்கணிப் பென்பது “நவீன தீண் டாமை” ரவிகரன் எம்.பி;

மிகை ஊழியர் அதிபர்கள்மீதான புறக்கணிப்பென்பது “நவீன தீண்டாமை” எனச் சுட்டிக்காட்டிய ரவிகரன் எம்.பி; அவர்களின் நிருவாகக் கொடுப்பனவு மற்றும் இடமாற்றம் தொடர்பிலும் பிரதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார் மிகை ஊழியர் அதிபர்கள்மீதான புறக்கணிப்பென்பது “நவீன தீண்டாமை” என கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்னவிடம் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு மிகை ஊழியர் நியமன அதிபர்களுக்கு நிர்வாகக்கொடுப்பனவு வழங்கப்படாமை மற்றும் அவர்களுக்கு இடமாற்றம் பெறுவதிலுள்ள சிக்கல் நிலமைகள் குறித்தும் இதன்போது பாரளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்னவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆட்சேர்ப்பின் அடிப்படையிலும், நிதிபிரமாணங்களுக்கு அமைவாகவும், சுற்றறிக்கைகளின் அடிப்படையிலும் மிகை ஊழியர் அதிபர்களுக்கு நிர்வாகக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை எனத் தெரிவித்த பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, மிகை ஊழியர் அதிபர்களின் இடமாற்றம் தொடர்பில் எதிர்வரும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கீரிமலை பகுதியில் கழிவுகளை மீள அள்ளிச் செல்லாமல், பள்ளங்களுக்குள் தள்ளிவிட முயற்சி.

யாழ்ப்பாணம் – கீரிமலை பகுதியில் ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள கழிவுகளை மீள அள்ளிச் செல்லாமல், அவற்றை மேலும் பள்ளங்களுக்குள் தள்ளிவிட முயன்ற வலி. தெற்கு பிரதேச சபையினரை வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் முன்னதாக சுண்ணக்கல் அகழ்வுக்காக உருவாக்கப்பட்ட பாரிய பள்ளங்களில் வலி. தெற்கு பிரதேச சபையினரால் இலத்திரனியல் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகள் கொட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு வலி. வடக்கு பிரதேச சபையினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், வடமாகாண ஆளுநர், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை, மாவட்ட செயலாளர் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர். அத்துடன், ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள கழிவுகளை வலி.…

மேலும் படிக்க