செய்திகள் தாயகச் செய்தி 

பாசிக்குடாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இ.போ.ச பஸ் விபத்து:

கொழும்பு – வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில், மட்டக்களப்பு பாசிக்குடாவிலிருந்து காலி நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (24) அதிகாலை 2.45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இதில் பஸ்ஸில் பயணித்த 12 பயணிகளும், டிப்பர் லொறியின் ஓட்டுநரும் காயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.   உயிரிழந்தவரின் உடல் தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

காணிகளை கையகப் படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத் திற்கு இல்லை

வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் காணி உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக பாராளுமன்றத்தின் குழு அறை 1 இல் நேற்று (23) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார்.   இதுவரை காலமும் வடக்கு மற்றும் கிழக்கில் நில உரிமைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்னைய அரசாங்கங்கள் மேற்கொண்ட திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன என்றும், காணிகளை சொந்தமாக வைத்திருப்பவர்களிடம் தங்கள் உரிமையை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதுடன்,…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

2 வருடமாகியும் புனரமைக்காத மகிழவெட்டுவான் பாலம்;

2 வருடமாகியும் புனரமைக்காத மகிழவெட்டுவான் பாலம்; அரசியல்வாதிகள் வந்தால் கட்டிப்போடுவோம் என பொதுமக்கள் சீற்றம்   வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பாலம் உடைந்து வீழ்ந்துள்ளது. இதனால் 2 வருடமாக மட்டக்களப்புக்கும் மகிழவெட்டுவான் பிரதேசத்துக்கும் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதையடுத்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் பிரயாணம் செய்ய முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோகி வருவதாகவும் இதுவரை அரசியல்வாதிகள் அரச அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். மகிழவெட்டுவான் நரிப்புதோட்டம், கல்குடா, நெல்லூர் பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு செல்லும் பிரதான வீதியிலுள்ள மகிழவெட்டுவான் பாலம் கடந்த 2023 டிசம்பர் மாதம் உடைந்து வீழ்ந்துள்ளது.இதனால் மட்டக்களப்பு நகருக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் நகரில் இருந்து அந்த பிரதேசத்துக்கு செல்லும் பொது போக்குவரத்து பஸ் வண்டி பாலம் ஊடாக செல்ல முடியாது.அந்த பாலம் வரை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் தன்னைத்தானே சுட்டு உயிர்மாய்ப்பு

மன்னார் – நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் ஒன்று நேற்று (22) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த கடற்படை சிப்பாய் 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் வங்காலை மற்றும் அச்சங்குளம் கடற்படை முகாமில் பணியாற்றி உள்ளார் எனவும் தெரியவருகின்றது. குறித்த சிப்பாய் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அச்சங்குளம் கடற்கரை ஓரத்தில் அமைக்கப்பட்ட கடற்படையின் கண்காணிப்பு காவலரணில் நேற்று காலை 10. மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது. சம்பவ இடத்திற்கு முருங்கன் பொலிஸார், தடயவியல் நிபுணர்கள், சென்று பார்வையிட்டனர். பின்னர் மன்னார் மாவட்ட நீதிபதி வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளின் பின்னர் நேற்று மாலை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.  …

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

இளைஞன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் இருந்து தொலைக்காட்சியில் IPL போட்டியை பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சங்கானை தேவாலய வீதியைச் சேர்ந்த 26 வயதான பரமானந்தம் கோவிந் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். இளைஞன் நேற்று முன்தினம் (20) இரவு உணவருந்திவிட்டு தொலைக்காட்சியில் IPL கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டிருந்தவேளை திடீரென நெஞ்சுவலிப்பதாக கூறிய நிலையில் மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து வரை வீட்டார் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இருதய அறைக்குள் இரத்த கசிவு ஏற்பட்டமையால் மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
காணொளி தாயகச் செய்தி 

முள்ளி வாய்க்கால் நினை வேந்தலில் துவாரகா பிரபாகரன் வழங்கிய உரை

பிரான்சில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் துவாரகா பிரபாகரன் வழங்கிய உரை

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள்

செம்மணி பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.   எனினும் குறித்த பகுதியில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பில் பொலிஸாரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, விடயத்தை பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றதைத் தொடர்ந்து, பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி சம்பவ இடத்தில் நீதவான் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். இதன்போது, மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே, அங்கு அகழ்வாய்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது. துறைசார் வல்லுநர் பேராசிரியர் சோமதேவ கடந்த மூன்றாம் திகதியன்று மனித எச்சங்கள் அவதானிக்கப்பட்ட இடத்தில்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

இறுதிப் போரில் இடம் பெற்ற குற்றங்க ளுக்கான பொறுப்புக் கூறலை உறுதி செய்ய ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும்

இறுதிப் போரில் இடம்பெற்ற அட்டூழியக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதி செய்ய ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கான கூட்டுறவு குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வலிந்து காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த துன்பப்படும் வயதான தமிழ் தாய்மார்கள் சார்பாக குறித்த கடிதம் பொதுச் செயலாளர் ஏ.லீலாதேவியால் நேற்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கை பாதுகாப்புப் படையினராலும், அதனுடன் இணைந்த துணை இராணுவக் குழுக்களாலும் வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்களின் உறவினர்களான நாங்கள், பதினாறு ஆண்டுகளுக்கும் மேலாக நீதிக்காகப் போராடி வருகிறோம். பிப்ரவரி 20,…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

தமிழினப் படுகொலையை நினைவுகூறும் நினைவாயுதம் கண்காட்சி

யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் நேற்றைய தினம் தமிழினப்படுகொலையை நினைவுகூறும் ” நினைவாயுதம் கண்காட்சியில் பல்கலைக்கழக மாணவர்கள்    காட்சிப் படுத்தப்பட்டது  தமிழினம் பட்ட அவலங்களை கண்ட சோகங்களை உணர்வுபூர்வமாக மனதை உறுத்தும்படி அமைந்ததுn தொடர்ச்சியாக  இன்று 15ஆம் திகதியிலிருந்து ஞாயிறு 18ஆம் திகதிவரை மாணவர்கள், பொதுமக்கள் என சகலரும் பார்வையிடலாம்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு யாழ். பல்கலையில் இரத்ததான முகாம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகத்தின் ஒருங்கிணைப்பில் “குருதியால் தோய்ந்த நம் தேசத்திற்காய் ஒரு துளி குருதி” எனும் கருப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று இன்றைய தினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை நினைவுகூரும் முகமாக இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது. இதில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு குருதிக்கொடையில் ஈடுபட்டனர். தமிழ், சிங்கள, முஸ்லீம் மாணவர்கள் என அனைவரும் இனம், மதம், மொழி பேதங்களை கடந்து இந்த இரத்ததான முகாமில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க