மூத்த ஊடகவி யலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன். காலமானார்
யாழ். ஊடக அமையத்தின் (Jaffna Press Club) முன்னாள் தலைவரும், யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்கள் நேற்றிரவு கனடாவில் காலமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது.
தமிழ் ஊடகத்துறையில் நீண்டகாலம் பணியாற்றிய அவர், ஊடகவியலாளர்களின் குரலாகவும், அவர்களின் உரிமைப் போராட்டங்களில் முன்னின்று உழைத்த ஒரு சிறந்த ஆளுமையுமாவார்.அவரது அர்ப்பணிப்புள்ள பணிகள் தமிழ் ஊடக வரலாற்றில் என்றும் அழியாத தடம் பதித்தவை.

