தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

நயினாதீவு படகு விபத்து. மீட்கப்பட்ட 10 பேர். யாழ் போதனா வைத்தியசாலையில்.

நயினாதீவுக்கு அருகில் படகு விபத்துக்குள்ளானதில் மீட்கப்பட்ட 10 பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். குறிகட்டுவான் பகுதியில் இருந்து நெடுந்தீவு நோக்கி இரண்டு படகு இயக்குநர்கள் உட்பட 10 பேருடன் பயணித்த குறித்த படகு நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை மாலை கடலில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயிருந்தது. நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடற்பரப்பு கொந்தளிப்பாக காணப்பட்ட போதிலும், காணாமல் போன படகையும் அதில் பயணித்தவர்களையும் தேடும் பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டனர். இதன்போது, கடல் சீற்றத்துக்கு மத்தியிலும் காணாமல் போயிருந்த படகையும் அதில் பயணித்த 10 பேரையும் கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இதனையடுத்து, மீட்கப்பட்ட 10 பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செஞ்சோலை படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவு நாள்.

செஞ்சோலை படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவு நாள்.  ஈழத்தமிழர் வரலாற்றுப் பக்கங்களில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய ‘செஞ்சோலை படுகொலை’ நடந்து இன்றோடு (2006 ஆகஸ்ட் 14 – 2026 ஆகஸ்ட் 14) 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த 2006ஆம் ஆண்டு இதே நாளில், முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தின் மீது இலங்கை விமானப்படை நடத்திய கொடூரமான வான்வழித் தாக்குதலில் 61 பாடசாலை மாணவிகள் உட்பட 64 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த 16 முதல் 19 வயதுக்குட்பட்ட உயர்தர மாணவிகள், முதலுதவி மற்றும் தலைமைத்துவப் பயிற்சிக்காக வல்லிபுனத்திலுள்ள செஞ்சோலை வளாகத்தில் தங்கியிருந்தனர். ஆகஸ்ட் 14 காலை 7:00 மணியளவில், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான கிஃபிர் (Kfir) போர் விமானங்கள்,…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மாந்தை கிழக்கில் விளையாட்டுக் கழகங்களுக்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார் – ரவிகரன்

மாந்தை கிழக்கில் விளையாட்டுக்கழகங்களுக்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார் – ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு – மாந்தைகிழக்கு பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள நான்கு விளையாட்டுக்கழகங்களுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் 12.08.2026இன்று விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விளையாட்டுக்கழகங்களின் கோரிக்கைக்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தனது 2026ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து 200,000ரூபாய் பெறுமதியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடை என்பவற்றை வழங்கிவைத்தார். அந்தவகையில் செல்வபுரம் கலைமகள் விளையாட்டுக்கழகம், பாண்டியன்குளம் இளங்கதிர் விளையாட்டுக்கழகம், பாலிநகர் ஸ்கைலாப் விளையாட்டுக்கழகம், விநாயகபுரம் ஈஸ்வரன் விளையாட்டுக்கழகம் ஆகிய நான்கு விளையாட்டுக்கழகங்களுக்கும் தலா 50,000ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடை என்பன நாடாளுமன்ற உறுப்பினரால் வழங்கிவைக்கப்பட்டது. அத்தோடு தன்னிடம் கோரிக்கைவிடுத்த 28விளையாட்டுக் கழகங்களுக்காக, தனது 2026ஆம் ஆண்டிற்குரிய பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து 1.4மில்லியன்ரூபாய் நிதியினை நாடாளுமன்ற…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஆனைக்கோட்டை தொல்லியல் அகழ்வாய்வுப் பொருட்கள் நாளையும் நாளை மறுதினமும் காட்சிப் படுத்தப்படும்!

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாவாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்கள் நாளை (13.08.2026) வியாழக்கிழமை மற்றும் நாளை மறுதினம் (14.08.2026) வெள்ளிக்கிழமை ஆகிய இருதினங்கள் தொல்லியல் ஆய்வுத்தளத்தில் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளன. இக் கண்காட்சியில் நமது முன்னோர் பயன்படுத்திய அரிதான பொருட்கள், பண்டைய பண்பாட்டு எச்சங்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் பலவும் இடம்பெறவுள்ளன. இக் கண்காட்சியில் ஈழத்தின் பண்டைய வரலாற்றினையும் ஆனைக்கோட்டைப் பிரதேசத்தின் தொன்மைச் சிறப்பையும் சான்றுகளுடன் மக்கள் நேரில் கண்டு உணர்ந்துகொள்ள முடியும். பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் தமது வரலாற்று மற்றும் தொல்லியல் அறிவை மேம்படுத்திக்கொள்ள இதுவொரு சிறந்தவாய்ப்பாகும். எனவே மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் குறிப்பிட்ட இரு தினங்களிலும் வருகை தந்து இக் கண்காட்சியைப் பார்வையிட்டு நமது பண்டைய வரலாற்று சிறப்புகளை அறிந்துகொள்ளுமாறு…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

சர்வதேச கராத்தே போட்டியில் களமிறங்கும் யாழ்.இளைஞர்!

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான ரத்னம் ரோஸி ஹரிந்த், அவுஸ்திரேலிய தேசிய கராத்தே அணிக்குத் தெரிவாகி தாய்லாந்தில் ஆரம்பமாக வுள்ள, சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்கவுள்ளார். யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், யாழ். இந்துக் கல்லூரியில் உயர்கல்வியையும் தொடர்ந்த இவர், மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்தவராவார். அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கிறிபித் பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதுகலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன், தற்போது அவுஸ்திரேலியாவில் புவித்தொழில்நுட்பப் பொறியியலாளராகப் பணியாற்றி வருகின்றார். கராத்தே துறையில் 6ஆம் டான் தரத்தைப் பெற்றுள்ள இவர், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் துமுளு கராத்தே பாடசாலைகளின் ஊடாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் அதிகளவான போதைப்பொருளை உள்ளெடுத்த இளைஞன் பலி.

யாழில் அதிகளவான போதைப்பொருளை உள்ளெடுத்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது கோப்பாய் தெற்கு பகுதியைச் சேர்ந்த  33 வயதுடையவரே நேற்றுமுன்தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்றுமுன்தினம் இரவு கோப்பாய் தெற்கு பகுதியில் உள்ள வாழை தோட்டம் ஒன்றுக்குள் மயக்கமுற்ற நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் அவரை மீட்ட நண்பர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அவரது சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகளின் அடிப்படையில், அதிகளவான போதைப்பொருள் பாவனையால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை கோப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தொண்டமாநகரில் இரு பாரவூர்திகள் மோதி கோர விபத்து; இளைஞர் ஒருவர் உயிரிழப்பு.

கிளிநொச்சி A9 வீதியின் தொண்டமாநகர் பகுதியில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பாரவூர்திகள் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பாரவூர்தி தொண்டமாநகர் பகுதியில் வீதியோரமாக நிறுத்தப்பட்டு பொருட்களை இறக்குவதற்கு முற்பட்டிருந்த நிலையில், அதே திசையில் பின்னால் பயணித்த மற்றுமொரு பாரவூர்தி அதன்மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பாரவூர்தியின் சாரதி உதவியாளராகப் பணியாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 21 வயதுடைய சத்தியராசா சஞ்சயன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். மேலும், 28 வயதுடைய பாரவூர்தியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வெளிமாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடிக்கான அனுமதி வழங்குவதை உடனடியாக நிறுத்துக; ரவிகரன்

வெளிமாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடிக்கான அனுமதி வழங்குவதை உடனடியாக நிறுத்துக; சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து முல்லைத்தீவில் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடுகின்ற வெளிமாவட்ட மீனவர்கள் ஊடாகவே முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் ஊடுருவல்கள் இடம்பெறுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வெளிமாவட்ட மீனவர்களுக்கு முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதிகள் வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கடற்றொழில் நீரியல்வள பணிப்பாளர் நாயகம் ஆகியோரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பான புகைப்பட ஆதாரங்களை கடற்றொழில் அமைச்சரிடம் நேரடியாகக் கையளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறும் வலியுறுத்தினார். முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் 11.08.2026இன்று இடம்பெற்ற இவ்வாண்டிற்கான இரண்டாவது முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில்சார்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லைத்தீவில் கடற்சீற்றம்; மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று காலை திடீரென அதிகரித்த கடற்சீற்றம் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்ததால், அப்பகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடல்நீர் உட்புகுந்ததன் காரணமாக மீனவர்களின் வாடிகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதுடன், மீனவர்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கடற்சீற்றம் தொடரும் பட்சத்தில் மேலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்ற கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், மீனவர்களை சந்தித்து தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்தார். மேலும், கடற்சீற்றம் தொடரும் பட்சத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ். மாநகர சபை செயற்பாட்டுக்கு ஆணையாளர் முட்டுகட்டை!

யாழ். மாநகர சபை செயற்பாட்டுக்கு ஆணையாளர் முட்டுகட்டை! அனைத்துக் கட்சிகளும் போர்க்கொடி ​யாழ். மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளுக்கு மாநகர ஆணையாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் தொடர்ச்சியாகப் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டி, மாநகர சபை உறுப்பினர்கள் இன்றையதினம் (11) அடையாளப் பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். ​45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் கூட்டுப் பங்களிப்புடன் குறித்த அடையாளப் போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது. ​இந்தப் போராட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் தேசிய முன்னணி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். ​இதன்போது அதிகாரிகளின் இந்த முறையற்ற…

மேலும் படிக்க