தமிழ் மக்களி டமிருந்து ராஜபக்சக் கள் கொள்ளையடித்த நகைகளை மக்களு க்கு வழங்க வேண்டும்
தமிழ் மக்களிடமிருந்து ராஜபக்சக்களால் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீண்டும் அவர்களிடம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,தமிழரசுக்கட்சி எம். பி எஸ். சிறீதரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவற்றில் ஊழல் நடந்துள்ளதால் இது தொடர்பில் விசாரணை செய்யாமல் விட முடியாது என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த நகைகளை மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பில் தேர்தல் காலங்களில் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட அரசாங்க அதிபர்கள் ஊடாக பட்டியலைக் கோரி அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் என குறிப்பிட்ட அவர்,எத்தனை ஆயிரம் பேர் நகைகளை அடகு வைத்துள்ளனர். அவ்வாறென்றால் எவ்வளவு கோடி ரூபா பெறுமதியான நகைகளை ராஜபக்ஷ அரசாங்கம் கொள்ளையடித்துள்ளது என்பதனை வெளிக்கொண்டு வாருங்கள் என்றும் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம், நிதிசார் கொடுக்கல்,வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாத நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் ஆகியன மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

