தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் மீது கொடூரத் தாக்குதல்

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் சுமார் 5 மணியளவில் இடம்பெற்றதாகவும், தாக்குதல் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவராக போதகர் அன்டனி செபஸ்டியன் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அந்தப் பொறுப்பில் இருந்து பல்வேறு நிர்வாக விடயங்களில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக தென்னிந்திய திருச்சபையில் பணியாற்றும் போதகர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான குடும்ப ஒன்றுகூடல் மற்றும் வழிநடத்தல் தொடர்பான பயிற்சிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த விசேட குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. இதன் இறுதி நாளான…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லையில் சிறார்களின் பாதுகாப்பையும், உரிமைகளையும் பாதுகாக்க வலியுறுத்தி பேரணி;

முல்லையில் சிறார்களின் பாதுகாப்பையும், உரிமைகளையும் பாதுகாக்க வலியுறுத்தி பேரணி; சிறுவர் பாதுகாப்பு மாநாடும் முன்னெடுப்பு முல்லைத்தீவில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு, சிறுவர்களின் பாதுகாப்பினையும், சிறுவர்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டதுடன், “எதிர்கால தலைவர்களைக் கட்டி எழுப்புவோம்” என்னும் தொனிப்பொருளில் 2026ஆம் ஆண்டிற்கான சிறுவர் பாதுகாப்பு மாநாடு ஒன்றும் 27.08.2026இன்று முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மதுரம், விக்றி ஜெனரேஷன், ஷாறிபாத், ஹார்மெல், ப்லோமிங் ஆகிய சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் ஏற்பாட்டில் இந்த பேரணியும், மாநாடும் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் சிறுவர்களின் பாதுகாப்பையும், உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி இடம்பெற்ற குறித்த பேரணியானது முல்லைத்தீவு பேருந்துநிலைய வளாகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு முல்லைத்தீவு பொலிஸ்நிலையம்வரை இடம்பெற்றது. அதற்கமைய சிறார்களின் பாதுகாப்பையும், உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டும், கோசங்கள் எழுப்பப்பட்டும் பேரணி முன்னைடுக்கப்பட்டது. அத்தோடு பேரணியின் நிறைவில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் அதிக விலைக்கு குடிநீர் விற்பனை; உணவகத்திற்கு ரூ.9.5 இலட்சம் அபராதம்

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு 950,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் யாழ்ப்பாண மாவட்ட விசாரணை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 1 லீற்றர் குடிநீர் போத்தலொன்றுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 120 ரூபாய் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக 200 ரூபாவிற்கு நுகர்வோர் ஒருவருக்கு குறித்த உணவகத்தால் விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, குறித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கடந்த 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒரு பொருளைக் கொள்வனவு செய்யும் போது அதிலுள்ள அச்சிடப்பட்ட விலை மற்றும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தாயகச் செய்தி 

இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கை யர்கள் ஊடாக அச்சமின்றி நாடு திரும்பலாம்

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று (26) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்ததாவது, யுத்த காலத்தில் முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்கள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியபோது வழங்கப்பட்டிருந்த சில விதிவிலக்குகள், அண்மையில் பலாலி விமான நிலையம் ஊடாக நாடு திரும்பிய சிலருக்கு வழங்கப்படாததன் காரணமாக கைதுச் சம்பவங்கள் இடம்பெற்றன. இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிளிநொச்சியில் ரயில் கடவையில் கோர விபத்து – சிறுமி பலி

கிளிநொச்சி – யாழ் பல்கலைக்கழக வீதியில் உள்ள ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய சிறுமி  உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயில், கடவையை கடக்க முற்பட்ட காரை மோதியுள்ளது.விபத்துக்குள்ளான காரில் பயணித்த 17 வயதுடைய சிறுமி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ்.புங்குடுதீவு கடற்கரையில் அடையாளம் காண முடியாத நிலையில் சடலம்

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்கரையில் இன்று (26) காலை அடையாளம் காண முடியாத நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. கடற்றொழிலுக்காக கடலுக்குச் சென்ற சிலர் குறித்த சடலத்தை அவதானித்ததைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். கடற்கரையில் கரையொதுங்கியுள்ள சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால், இதுவரை உயிரிழந்தவர் யார் என்பது தொடர்பில் அடையாளம் காணப்படவில்லை. சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மட்டக்களப்பில் குடிநீர் விநியோகம் – நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் வகையில், உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக சுமார் 9,500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரச அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் தெரிவித்துள்ளார். அத்துடன், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு பொதுமக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமாகவும் கவனமாகவும் பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (25) நடைபெற்றது. இதன்போது, எல் நினோ தாக்கம் காரணமாக மாவட்டத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அவற்றை குறைப்பதற்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. மேலும், பிரஜாசக்தி வேலைத்திட்டங்கள், மாவட்டத்தில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ். சிறைச்சாலைக்கு நீதி அமைச்சர் ஹர்ஷன திடீர் கள விஜயம்!

யாழ். சிறைச்சாலைக்கு நீதி அமைச்சர் ஹர்ஷன திடீர் கள விஜயம்! யாழ்ப்பாணத்திற்கு நேற்று (25) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் செயற்பாடுகள் மற்றும் நிலைமைகளை நேரில் கண்காணிப்பதற்காக கள விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர், கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை கருத்திற்கொண்டு, மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் சம்பந்தப்பட்ட படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், துறைசார் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்து, குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கலந்துரையாடல்களை நடத்தி, அவசர நிலைமைகளுக்கு ஒருங்கிணைந்து முகங்கொடுக்கும் வகையில் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அத்துடன், சிறைச்சாலைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார். தொடர்ந்து சிறைச்சாலையின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று அங்குள்ள…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காணாமல் ஆக்கப்பட் டோர் தின நிகழ்வுக்காக யாழ்ப்பாண த்திற்கு 400 பேரை அழைத்து வர ஏற்பாடு

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (25) நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வில் பங்கேற்பதற்காக, பிற மாவட்டங்களிலிருந்து சுமார் 400 பேர் பஸ்கள் மூலம் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வு, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இடைக்கால நிவாரணமாக 2 இலட்சம் ரூபாய் பெற்றவர்களில் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 400 பேர் பஸ்கள் மூலம் அழைத்துவரப்படவுள்ளனர். இவர்களுடன் இணைந்து நிகழ்வில் 450க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என மண்டப ஏற்பாட்டுத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பண்டார வன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்;

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதிமன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள்மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள் 25.08.2026இன்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் உணவெழுச்சியுடன் இடம்பெற்றது. அந்தவகையில் முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, இரத்தினம் ஜெகதீசன், கலையரசி கமலேஸ்வரன், தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், தவராசா அமலன், சமூக ஆர்வலர்களான மணிவண்ணன் நிறோஜன், மரியநாயகம் மரியஎனஸ்ரின் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க