தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

துன்னாலை காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

அரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், துன்னாலை காட்டுப் பகுதியில் நீண்டகாலமாக இயங்கி வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்த சுற்றிவளைப்பின்போது 20,000 மில்லிலீற்றர் கசிப்பு, 540,000 மில்லிலீற்றர் கோடா, கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் துன்னாலை பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, அண்மைக்காலமாக வடமராட்சி பிரதேசத்தில் சட்டவிரோத கசிப்பு விற்பனை அதிகரித்து வருவதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ், காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம்

யாழ்ப்பாணம், காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று (24) கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்கு சென்ற சிலர், சடலம் ஒன்று கடலில் மிதப்பதை அவதானித்து இது தொடர்பில் ஊர்காவற்றுறை  பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.கரையொதுங்கிய சடலம் யாருடையது என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கடற்றொழிலுக்குச் சென்று காணாமல்போன மீனவர்களின் சடலமாக இருக்குமா எனவும் பொலிஸார் ஆராய்ந்துள்ளனர். எனினும், அண்மையில் எந்தவொரு மீனவரும் காணாமல்போனதாக முறைப்பாடுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

ஊர்காவற்றுறையில் வாகன விபத்து- சாரதியின் தூக்க கலக்கத்தில் நேர்ந்த விபரீதம்!

யாழ்ப்பாணம் –  ஊர்காவற்றுறை பிரதான வீதியில் வேகமாகச் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாள்ளத்துற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இன்று (22) மதியம் இடம்பெற்றுள்ளது. அராலிச் சந்தியை அண்மித்த பகுதியில் இருந்து யாழ் நோக்கி சென்ற குறித்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான குறித்த கார் யாழ் வேலணைப் பகுதியை நோக்கி புதிதாக கட்டமைக்கப்பட்டுவரும் அதி உயர் மின் கம்பத்தில் மோதி பலத்த சேதங்களுக்குள்ளான நிலையில் பொலிசாரின் விசாரணையை அடுத்து பாரம் தூக்கியின் உதவியுடன் வெளியே எடுக்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த விபத்தின் போது எவருக்கும் பாரதூரமான விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரியவருவதுடன் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை தூக்கமே விபத்துக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

22ஆவது திருத்தம்: நீதிமன்றத் தீர்ப்பின் பின்னரே இறுதி நிலைப்பாடு – சிறிதரன்

இலங்கையில் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டபோது, அதற்கு எதிராக 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் நோக்கில் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நீதியமைச்சரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் தமிழரசுக் கட்சி அவசரப்பட்டு எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சிறிதரன் எம்.பி.,22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணைகள் எந்த நிலைக்கு செல்லவுள்ளன என்பதை தமிழரசுக் கட்சி மிகுந்த அவதானத்துடன் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார். கடந்த வாரம் Zoom ஊடாக கட்சியின் உயர்மட்டக் குழுவினரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பில் கலந்துரையாடியதாகவும், அந்தக் கலந்துரையாடலின் அடிப்படையில் திருத்தம் தொடர்பில் அவசரப்பட்டு எந்தவொரு கருத்தையோ அல்லது தீர்மானத்தையோ…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மட்டக்களப்பில் 74,900 ஹெக்டேயரில் பெரும்போக நெற்செய்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பெரும்போகத்தில் 74900ஹெக்டெயரில் நெற்செய்கை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் 15இலட்சத்து 43ஆயிரத்து 500 கிலோ உரம் தேவையினை பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை முன்னெடுக்கப்படவுள்ள பெரும்போக நெற்செய்கை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் மாவட்ட விவசாய பணிப்பாளர் சிவனேசனின் ஒருங்கமைப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எச்.அருள்ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய,மாகாண நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர்கள், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஆர்.யோகராஜன், தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர், விவசாய அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் கே.திலகநாதன்  மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், துறைசார் அதிகாரிகள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர். குறிப்பாக, தற்போதைய எல் நினோ தாக்கம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களைக் கருத்திற்கொண்டு,…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அச்சுவேலி–பலாலி வீதியின் ஒட்டகப்புலம் பகுதியில் விபத்தில் இருவர் காயம்

அச்சுவேலி–பலாலி வீதியின் ஒட்டகப்புலம் பகுதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். ஒட்டகப்புலம் பகுதியில் அமைந்துள்ள 511 படையணியின் இராணுவ முகாமுக்கு முன்பாக இருந்த பூந்தொட்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிள் சேதமடைந்துள்ளதுடன், அதில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

நெடுந்தீவு போனி குதிரைகளுக்கு இலங்கை கடற் படையினர் குடிநீர் வழங்கும் திட்டம்

வடமாகாணத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள யாழ்ப்பாணம் நெடுந்தீவு போனி குதிரைகளுக்கு இலங்கை கடற்படையினர் குடிநீர் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ தேசிய திட்டத்தின் கீழ், நெடுந்தீவின் இயற்கைச் சூழலையும் பல்லுயிர்ப் பெருக்கத்தையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை நேற்று (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடும் வறட்சி காரணமாக நெடுந்தீவில் உள்ள நீர்நிலைகள் வற்றியுள்ள நிலையில், போனி குதிரைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளன. இதனையடுத்து, வடக்கு கடற்படைத் தளபதியின் மேற்பார்வையில், நெடுந்தீவில் அமைந்துள்ள இலங்கை கடற்படைக் கப்பல் வசப நிறுவனத்தின் ஊடாக போனி குதிரைகளுக்கு குடிநீர் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நெடுந்தீவின் மேற்குப் பகுதியில் உள்ள வெள்ளைப் பகுதியில் வாழும் போனி குதிரைகளின் எண்ணிக்கையைப் பாதுகாப்பதுடன், தீவின் இயற்கை அழகையும் பல்லுயிர்ப் பெருக்கத்தையும் எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்கும் நோக்கில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லைத்தீவு நகரில் மணிக்கூட்டுக் கோபுரத்தை அமைக்கக் கோரிய ரவிகரன் எம்.பி;

முல்லைத்தீவு நகரில் மணிக்கூட்டுக் கோபுரத்தை அமைக்கக் கோரிய ரவிகரன் எம்.பி; பேருந்து நிலையத்தில் நேரத்தைக் காண்பிக்கும் டிஜிற்றல் காட்சிப் பலகை பொருத்தப்படும் – அமைச்சர் விமல் ரத்நாயக்க பதில் முல்லைத்தீவு நகரில் மணிக்கூட்டுக் கோபுரமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் இவ்வருடத்திற்குள் முல்லைத்தீவு பேருந்து நிலையத்தின் நிர்மாணப்பணிகள் நிறைவடையும்போது, அங்கு நேரத்தைக் காண்பிக்கும் டிஜிற்றல் காட்சிப் பலகையொன்றை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் விமல் ரத்நாயக்க பதிலளித்துள்ளார். பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்திலேயே இவ்விடயம்தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

உழவியந்திர த்தின் சில்லில் சிக்கி மூன்றரை வயது சிறுவன் உயிரிழப்பு.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை மூன்றாம் யூனிற் பகுதியில் உழவியந்திரத்தின் சில்லில் சிக்கி மூன்றரை வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளது. உறவினரான 18 வயதுடைய இளைஞர் ஒருவர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவியந்திரத்தை எடுக்க முற்பட்டபோது, உழவியந்திரத்தின் பெட்டியில் நின்றிருந்த சிறுவன் தவறி கீழே வீழ்ந்துள்ளார்.இதன்போது உழவியந்திரத்தின் சில்லில் சிக்கி நசுங்கியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்த சிறுவனின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வடக்கு மாகாணத்தி லுள்ள மருத்துவ மனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நன்கொடை

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு குருதி சுத்திகரிப்பு இயந்திரம் என்பது ஒரு மருத்துவ உபகரணம் மாத்திரமல்ல, தொடர்ந்தும் வாழ்வதற்கான ஒரு வாய்ப்பாகும். அந்த வாய்ப்பை வடக்கு மாகாண மக்களுக்கு, குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் வாழும் நோயாளிகளுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 83 ஆயிரத்து 544 கனேடிய டொலர் பெறுமதியான ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்படுவது மிகவும் பெறுமதியான மனிதநேயப் பங்களிப்பாகும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இந்த இயந்திரங்கள் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைகளுக்கும், மல்லாவி ஆதார மருத்துவமனைக்கும் வழங்கப்படவுள்ளதுடன், அவற்றுக்கான வரித்தீர்வாக வடக்கு மாகாண சபையால் 3.5 மில்லியன் இலங்கை ரூபா வழங்கப்பட்டுள்ளது செந்தில்குமரன் நிவாரண நிறுவனமும் வடக்கு மாகாண சபையும் இணைந்து வடக்கு மாகாண மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு நேற்று(20.08.2026)…

மேலும் படிக்க