தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கந்தளாய்: பாறைக்குன்றில் கைக்குண்டு மீட்பு!

கந்தளாய் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் உள்ள கழ்மலை பன்சலைக்கு அருகாமையிலுள்ள பாறைக்குன்றுப் பகுதியில், காலனித்துவ ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது எனச் சந்தேகிக்கப்படும் கைக்குண்டு ஒன்றை கந்தளாய் பொலிஸார்  மீட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த கைக்குண்டைப் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளனர். மேலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் அப்பகுதிக்குச் செல்வதற்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கைக்குண்டை விசேட அதிரடிப்படையினரின் (STF) வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவின் உதவியுடன் பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்வதற்கு, கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறுவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கைக்குண்டு மீட்கப்பட்ட பாறைக்குன்றுப் பகுதியில் காலனித்துவ ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த பழமையான கட்டிட இடிபாடுகள் காணப்படுகின்றன. அத்துடன், கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு…

மேலும் படிக்க
தாயகச் செய்தி புலச் செய்திகள் பொதுவான செய்திகள் 

மூத்த ஊடகவி யலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன். காலமானார்

யாழ். ஊடக அமையத்தின் (Jaffna Press Club) முன்னாள் தலைவரும், யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்கள் நேற்றிரவு கனடாவில் காலமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது. தமிழ் ஊடகத்துறையில் நீண்டகாலம் பணியாற்றிய அவர், ஊடகவியலாளர்களின் குரலாகவும், அவர்களின் உரிமைப் போராட்டங்களில் முன்னின்று உழைத்த ஒரு சிறந்த ஆளுமையுமாவார்.அவரது அர்ப்பணிப்புள்ள பணிகள் தமிழ் ஊடக வரலாற்றில் என்றும் அழியாத தடம் பதித்தவை.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கீரிமலை – மாவிட்டபுரம் பகுதிகள் குப்பைக் கிடங்காகும் அபாயம்;

யாழ்ப்பாணத்தின் வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால், அப்பகுதிகள் எதிர்காலத்தில் பாரிய குப்பைக் கிடங்காக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உள்ளிட்ட முக்கியமான ஆலயங்களை அண்மித்த பகுதிகளில், குறிப்பாக மாவிட்டபுரத்தில் இருந்து கீரிமலை செல்லும் வீதியை அண்மித்துள்ள பாரிய குழிகளில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இயங்கிய காலத்தில் குறித்த பகுதிகளில் சுண்ணக்கற்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டதன் காரணமாக பாரிய குழிகள் உருவாகியுள்ளன. 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து, அந்தப் பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தன. யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்டம் கட்டமாக அப்பகுதிகள்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிளிநொச்சி புளியம்பொக்கனை பாலம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

புளியம்பொக்கனை பாலம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு கிளிநொச்சி, 28 ஜூலை 2026 A35 பரந்தன்–முல்லைத்தீவு பிரதான வீதியின் 12ஆவது கிலோமீற்றர் பகுதியில் அமைந்துள்ள 40 மீற்றர் நீளமுடைய புளியம்பொக்கனை பாலம், புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று (28.07.2026) பொதுமக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. குறித்த பாலத்தின் புனரமைப்புப் பணிகள் 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும், கொரோனா பெருந்தொற்று மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. தற்போது அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூபா 206 மில்லியன் செலவில் புனரமைப்புப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டு, வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, வீதிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களினால் பாலம் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கோம்பாவில் விக்னேஸ்வர வித்தியாலயத்திற்கு கணினி வழங்கிய ரவிகரன் எம்.பி;

கோம்பாவில் விக்னேஸ்வர வித்தியாலயத்திற்கு கணினி வழங்கிய ரவிகரன் எம்.பி; புதிதாகப் பொருத்தப்பட்ட மின்னிணைப்புக்களையும் பார்வையிட்டார் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, கோம்பாவில், விக்னேஸ்வர வித்தியாலயத்திற்கு 27.07.2026இன்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் அவரது 2026ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதிஒதுக்கீட்டிலிருந்து மேசைக்கணினி வழங்கிவைக்கப்பட்டதுடன், மேல்மாடி வகுப்பறைகளுக்கு தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதிஒதுக்கீட்டின் மூலம் பொருத்தப்பட்ட மின்ணைப்புக்களையும் இதன்போது பார்வையிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு – கோம்பாவில், விக்னேஸ்வர வித்தியாலய பாடசாலைச் சமூகத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக கடந்த 10.03.2026அன்று குறித்த பாடசாலைக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பாடசாலையில் காணப்படும் குறைபாடுகள்தொடர்பில் நேரடியாக ஆராய்ந்தார். இதன்போது குறித்த பாடசாலைக்கு மேசைக்கணினி ஒன்று தேவையெனவும், மேல்மாடி வகுப்பறைகளுக்கு மின் இணைப்பு பொருத்தப்படவேண்டுமெனவும் பாடசாலைச் சமூகத்தினரால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் பாடசாலை சமூகத்தினரால் முன்வைக்கப்பட்ட…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் கவனயீர்ப்பு போராட்டம்

கடந்த 7 மாதங்களாக ஆசிரியர் நியமிக்கப்படாததைக் கண்டித்து தரம் 03 மாணவர்களுக்கு உடனடியாக ஆசிரியரை நியமிக்கக் கோருதல் மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில்… பயிலும் 36 மாணவர்கள் கடந்த 7 மாதங்களாக வகுப்பாசிரியர் இன்றி கல்வியில் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். உடனடியாக நிரந்தர அல்லது பதிலீட்டு ஆசிரியரை நியமித்து, மாணவர்களின் கல்வி சீரழிவதைத் தடுக்க கல்வித் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கவனயீர்ப்பு போராட்டம்

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ் காங்கேசன் துறை எரிபொருள் களஞ்சிய த்திற்கு அருகில் திடீர் தீ

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியசாலை வளாகத்திற்கு அருகிலுள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென தீ பரவிய நிலையில், கடற்படையினர் மற்றும் பெற்றோலிய அதிகாரிகளின் தீவிர முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எரிபொருள் களஞ்சியசாலை வளாகத்தைச் சூழவுள்ள வெற்றுக்காணிகள் நீண்டகாலமாக பராமரிப்பின்றி காணப்படுவதுடன், அவற்றில் குப்பைகளும் கொட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த காணிகளின் நிலைமை தொடர்பில் பெற்றோலிய அதிகாரிகளால் வலி. வடக்கு பிரதேச சபைக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. இன்றைய தினம் தீ பரவல் ஏற்பட்டமை தொடர்பிலும் பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், குறித்த பகுதிகளில் தீ மூட்ட வேண்டாம் என எச்சரிக்கும் பதாகைகளை காட்சிப்படுத்துமாறு காங்கேசன்துறை உப அலுவலக பொறுப்பதிகாரியிடம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்காக எழுத்துமூலமான கோரிக்கை கடிதம்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உமா குமரனுக்கு, ரவிகரன் எம்.பி வாழ்த்து;

ஐக்கிய இராச்சியத்தின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உமா குமரனுக்கு, ரவிகரன் எம்.பி வாழ்த்து; ஈழத் தமிழர் விவகாரத்திலும் கரிசனையோடு செயலாற்றுமாறும் வேண்டுகோள் ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் பாராளுமன்ற இணை அமைச்சராக (Parliamentary Under-Secretary of State) அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவரான உமா குமரன் அவர்களுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அத்தோடு இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக எதிர்நோக்கிவரும் அரசியல் உரிமைகள், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான நீதி, காணி உரிமைகள், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையை முழுமையாக மீள நிறுவுதல், நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு மனித நேயமும் நீதியும் சார்ந்த தீர்வைக் காண்பதற்கான பன்னாட்டு முயற்சிகள், சமத்துவம்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர்கள் மற்றும் போராளிகள் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனக்கலவரத்தின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் நினைவஞ்சலி நிகழ்வு நேற்று வடக்கு கிழக்கில் இடம்பெற்றது. திருகோணமலை பிரதான கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் நினைவேந்தல் மண்டபத்தில் இவ் நினைவேந்தல் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பமாக ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, உயிர்நீத்தோரின் நினைவாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணி ஆகியோரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன், சுடரேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை வன்முறைகளின் போது உயிரிழந்த பொதுமக்கள் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் தியாகம் நினைவுகூரப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கடைகளுக்குள் புகுந்த சொகுசு பஸ்! மட்டக்களப்பில் பாரிய விபத்து

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த சூப்பர் லைன் பயணிகள் பஸ் ஒன்று மட்டக்களப்பு–கொழும்பு பிரதான வீதியில் தன்னாமுனை பகுதியில் இன்று (26) அதிகாலை  பாரிய விபத்தில் சிக்கியுள்ளது. அதிகாலை சுமார் 04.45 மணியளவில்  பஸ், திடீரென பாதையை விட்டு விலகி வீதியோரத்தில் அமைந்திருந்த கடைகளுடன் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்தில் பஸ் வண்டிக்கும் கடைகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. சாரதி தூக்கக் கலக்கத்தில் இருந்தமையே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அதிர்ஷ்டவசமாக விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. சாரதி மற்றும் பஸ்ஸில் பயணித்த சிலர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க