அண்மை செய்தி இலங்கை செய்தி. 

க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை இன்று 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 மத்திய நிலையங்களில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இம்முறை பரீட்சைக்காக பாடசாலை ரீதியில் விண்ணப்பதாரர்கள் 264,496 பேரும், தனியார் விண்ணப்பதாரர்கள் 107,814 பேர் உள்ளடங்கலாக 372,310 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தங்களது கையொப்பத்தை முறைப்படி சான்று படுத்திக் கொள்வது கட்டாயமாகும். அனுமதி அட்டை தொலைந்து போயிருந்தால், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து அதை மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். பரீட்சைக்கான கால அட்டவணையை கவனத்திற் கொண்டு, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பதாகவே…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சிறைச்சாலை மோதல்கள்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளுக்கு அழைப்பு

சிறைச்சாலைகள் சில தொடர்பில் பதிவாகியுள்ள அமைதியின்மை மற்றும் குழப்ப நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் தலைவர்களையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதே இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கம் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜீ. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அதற்கிணங்க எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ள மேற்படி கலந்துரையாடலுக்கு சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.அது தொடர்பில் மேலும் தெரிவித்த ஆணைக் குழுவின் தலைவர்;சிறைச்சாலைகளில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் மிகவும் கவலைக்குரியவை. மனித உரிமைகள் ஆணைக்குழு அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் கணிசமானளவு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கடற்பிராந்திய ங்களுக்கு சிவப்பு அறிவிப்பு; கடலுக்கு செல்லத் தடை

நாட்டின் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பிராந்தியங்கள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.​அந்த வகையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளுக்கு மறுஅறிவித்தல் வர தொழில்களுக்கு செல்ல வேண்டாம் என கடற்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பாக வெளியிடப்படும் அறிவிப்புகளை தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறு கடல்சார் மற்றும் மீனவ சமூகத்தினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதற்கிணங்க, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றருக்கும் அதிகமாக வீசக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளிலுள்ள கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மட்டக்களப்பு, திருகோணமலை, கங்கேசன்துறை, மன்னார் ஊடாக சிலாபம் வரையான மற்றும் காலியிலிருந்து மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாடளாவிய பொலிஸ் தேடுதல் நடவடிக்கை 437 சந்தேகநபர்கள் கைது

குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தினசரி தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் 437 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, நேற்று (08) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 33,024 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அதன்போதே இந்த சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 15 நபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 135 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 65 நபர்களும், அலட்சியமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 68 நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,189 நபர்களுக்கு எதிராக சட்ட…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சில நாடுகளில் நிராகரிக்கப்படும் புதிய இலங்கை கடவுச்சீட்டு? –

புதிய இலங்கை கடவுச்சீட்டின் தரம் காரணமாக பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். புதிய இலங்கை கடவுச்சீட்டுகளின் தரம் தொடர்பில் அண்மையில் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் விவாதம் இடம்பெற்றுள்ளது. குறித்த கடவுச்சீட்டை முறையாக ஸ்கேன் செய்து வாசிக்க முடியாததால், அது போலியான கடவுச்சீட்டாக இருக்கலாம் என பிரித்தானிய அதிகாரிகள் சந்தேகித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடவுச்சீட்டுக்கான கட்டணம் 6,000 ரூபாயாக தொடரும் நிலையில், கடவுச்சீட்டின் பக்கங்களின் எண்ணிக்கை 64 இலிருந்து 48 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். புதிய கடவுச்சீட்டுகளில் அவதானிப்பு அல்லது நீட்டிப்பு பக்கங்கள் இல்லாததுடன், அச்சுத் தரமும் குறைவாக இருப்பதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அத்துடன், குடிவரவு முத்திரைகளின் மை மறுபக்கத்தில் கசிவது உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக சில…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெறவுள்ளது.  நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 மாணவர்கள் தோற்றவுள்ளனர். சிங்கள மொழியில் 220,366 மாணவர்களும், தமிழ் மொழியில் 73,723 மாணவர்களும் இதில் அடங்குவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது. பிள்ளைகளின் மன ஏகாகிரதையைப் பேணி, கவனத்துடன் பரீட்சைக்கு முகங்கொடுப்பதற்கு இலகுவாக இருக்கும் வகையில், பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களைச் சென்றடையுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்துகிறது. இதற்கமைய, காலை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், அனைத்து மாணவர்களும் காலை 09.00 மணிக்கு பரீட்சை மண்டபத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார். முதலாவதாக இரண்டாம் வினாத்தாள் வழங்கப்படும் என்பதுடன், அது காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி காலை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு

அனைத்து தேர்தல்களையும் உரிய காலக்கட்டத்தில் நடத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அதன்படி, மாகாண சபைத் தேர்தலை முடிந்தவரை விரைவாக நடத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து விளக்கமளிக்கும் நோக்கில், நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுடன் நேற்று வியாழக்கிழமை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். ”நாட்டில் நடைபெற வேண்டிய அனைத்து தேர்தல்களும் ஜனநாயக நடைமுறைகளுக்கு அமைவாக உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அதன்பிரகாரம் மாகாண சபைத் தேர்தலை பிற்போடும் எந்தவொரு என்னமும் அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, உரிய சட்ட நடவடிக்கைகளின் பின்னர் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த எதிர்பார்க்கிறோம் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை,…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டில் டெங்கு பாதிப்பு 88 ஆயிரத்தை கடந்தது – 63 பேர் உயிரிழப்பு

நடப்பு ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரை நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 88,000 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (05) நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 88,088 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காய்ச்சல் காரணமாக 63 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஒரு மாத காலப்பகுதியில் மாத்திரம் 2,739 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் நுளம்பு பெருக்கம் ஏற்படும் இடங்களை அழித்தல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு பொதுமக்களிடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாடு முழுவதும் 471 மருந்தகங்களில் விசேட சோதனை

நுகர்வோரின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 471 விசேட மருந்தக சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது 109 மருந்தகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் 86 சட்டமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 362 மருந்தகங்களில் விசேட சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. அண்மைய சோதனைகளையும் இணைத்துக் கொண்டதன் பின்னர், இவ்வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட மொத்த விசேட மருந்தக சோதனைகளின் எண்ணிக்கை 471 ஆக உயர்ந்துள்ளது. இந்த சட்ட அமலாக்க நடவடிக்கைகளின் மூலம் நீதிமன்ற…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

டெங்கு ஒழிப்புக்கு இந்தியா வழங்கிய மலத்தியன் அமைச்சரிடம் ஒப்படைப்பு

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்தியா 500 லீற்றர் மலத்தியன் பூச்சிகொல்லியை வழங்கியுள்ளது.சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (04) இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.இந்நிகழ்வு சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இந்த நன்கொடை, இலங்கையின் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு அத்தியாவசிய தொழில்நுட்ப ஆதரவாக அமைவதோடு, பொது சுகாதாரத் துறையில் இலங்கை மற்றும் இந்தியா இடையே பல தசாப்தங்களாக நிலவி வரும் நெருக்கமான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாகவும் கருதப்படுகிறது. நாட்டின் சில பகுதிகளில் டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகள் தற்போது பயன்படுத்தப்படும் சில பூச்சிக்கொல்லிகளுக்கு எதிர்ப்பு சக்திைய உருவாக்கியிருப்பது விஞ்ஞான ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்,மாற்று பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.இந்தியாவால் வழங்கப்பட்டுள்ள தொழில்நுட்பத் தரமுடைய மலத்தியன், அதிக ஆபத்து நிலவும் பகுதிகளை…

மேலும் படிக்க