இலங்கை செய்தி. தாயகச் செய்தி 

முல்லை, மன்னார் வைத்திய சாலைகளுக்கு CT, MRI ஸ்கேனர் இயந்திரங்கள். நளிந்த ஜயதிஸ்ஸ

வடக்கில் முல்லைத்தீவு மற்றும் மன்னார் பொது வைத்தியசாலைகளுக்கு சி.ரி, எம்.ஆர்.ஐ.ஸ்கேனர் இயந்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், வன்னிமாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.ரவிகரன் எம்.பி தமது கேள்வியின் போது; மன்னார் வைத்தியசாலைக்கு சி.ரி ஸ்கேனர் வசதிகள் ஏற்படுத்தப்படுமென ஏற்கனவே சுகாதார அமைச்சரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,முல்லைத்தீவு மாவட்டத்திலும் சி,ரி ஸ்கேனர் வசதி இல்லாமல் நீண்டகாலமாக முல்லைத்தீவு மாவட்ட நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். பல நூற்றுக் கணக்கான நோயாளர்கள் சி.ரி ஸ்கேன் எடுப்பதற்காக வவுனியா உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சென்று வரவேண்டிய நிலையே காணப்படுகிறது.அந்த வகையில் மேற்படி இரண்டு வைத்தியசாலைகளுக்கும் சி.ரி ஸ்கேனர் வசதிகளை வழங்க வேண்டுமென,…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இலங்கைக்கு வருகை

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட நிலையில், இன்று புதன்கிழமை இலங்கைக்கு வருகை தருகின்றார். கொழும்பில் அரசுடன் உயர்மட்டப் பேச்சுகளை முன்னெடுப்பதுடன், இலங்கையில் நீடித்து நிலைக்கக்கூடிய இனச்சிக்கலுக்கான தீர்வுகள், பிராந்தியப் பாதுகாப்பு, உத்திசார் இணைப்புத் திட்டங்கள் மற்றும் இருதரப்புப் பொருளாதார உறவுகள் குறித்துக் கலந்துரையாடுவதே அவரின் இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கமாகவுள்ளது. தனது விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்து அவர் விரிவான பேச்சுகளை நடத்தவுள்ளார். இந்தியாவின் ‘அண்டைய நாடுகளுக்கு முதலுரிமை’ கொள்கையின் அடிப்படையில், இலங்கையுடனான இராஜதந்திர மற்றும் பொருளாதாரப் பிணைப்பை மேலும் வலுப்படுத்த புதுடில்லி தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. இந்த விஜயத்தின் மிக முக்கியமான அம்சமாக, வடக்கு – கிழக்கு மற்றும் மலையகத்தைப்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சீரற்ற வானிலை தீவிரம்: உயிரிழப்பு 7 ஆக உயர்வு;

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. மேலும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. ஹட்டன் – பொல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில், அங்கு வசித்து வந்த 47, 58 மற்றும் 83 வயதுடைய மூன்று பெண்களும், 22 வயதுடைய இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. வட்டவளை, ஞானானந்தகம வீதியில் மகாவலி கங்கைக்கு குறுக்காக அமைந்துள்ள பாலத்தின் மீது பயணித்த 53 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். நாவலப்பிட்டி, சோலங்கந்த, ஜனஉதான கிராமத்தில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் குறிப்பிட்டுள்ளது. மேலும், நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பேருந்தும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 20 பேர் காயம்

கேகாலை – கரடுபன பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை (இ.போ.ச.) பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர் இன்று (03) காலை 6.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரம்புக்கனையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இ.போ.ச. பேருந்தும், திகனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்துமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கேகாலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை;

நாட்டின் நான்கு மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நேற்று (02) இரவு 11.00 மணியளவில் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள மற்றும் கங்கஇஹல கோரள பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட (Level 2) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் நோர்வுட் பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு முன்னெச்சரிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட (Level 1) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஊழல் தடுப்புச் சட்டத்தில் முன்வைக்கப் பட்டுள்ள புதிய திருத்தங்கள்

ஊழல் தடுப்புச் சட்டத்தில் அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய திருத்தங்கள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.ஊழல் மூலம் ஈட்டப்பட்ட சொத்துகள் தொடர்பாக விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிப்பதற்கும், பிணை வழங்கும் நடைமுறைகளை மேலும் கடுமையாக்குவதற்கும் இத்திருத்தங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஊழல்கள் மூலம் பெறப்பட்ட சொத்துக்கள் அல்லது அவற்றை மாற்றியமைத்ததாக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு, குறித்த சொத்தின் பெறுமதியை விடக் குறையாத மூன்று மடங்கு தொகை மேலதிக அபராதமாக விதிக்கப்படும்.இதற்கு முன்னர், ஊழல் குற்றத்திற்கான அதிகபட்ச தண்டனையாக 10 ஆண்டுகளுக்கு குறையாத கடூழியச் சிறைத்தண்டனையும், ரூ.10 இலட்சம் அபராதமும் மட்டுமே விதிக்கப்பட்டது. புதிய திருத்தத்தின்படி, ஊழல் காரணமாக அரசுக்கு ஏற்பட்டுள்ள முழுமையான நிதி இழப்பிற்குச் சமமான தொகையையும் மேலதிக அபராதமாக அறவிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான பிணை வழங்கும் நடைமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. ரூ.1 இலட்சத்திற்குக்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மெட்ரோ தாழ்தள பேருந்துகளில் பயணிப்போருக்கு சிறப்பு சலுகைகள்

நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இறக்குமதி செய்யப்பட்ட தாழ்தள மெட்ரோ (Metro) பேருந்துகளில் வார இறுதியில் பயணிக்கும் பயணிகளுக்காக ரூ.799 பெறுமதியிலான சிறப்புச் சலுகைப் பொதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்டுள்ள 104 மெட்ரோ பேருந்துகளின் பதிவு நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலே,இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்ததாவது, இந்தப் பேருந்துகள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. பதிவு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், இம்மாத இறுதிக்குள் அனைத்து 104 பேருந்துகளும் சேவையில் இணைக்கப்படும். இதற்கிடையில், மெட்ரோ நிறுவனம் வார இறுதியில் பயணிக்கும் பயணிகளுக்காக ரூ.799 பெறுமதியிலான சிறப்புச் சலுகைப் பொதியை அறிமுகப்படுத்தியுள்ளது. சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தப் பாதையிலும் எத்தனை தடவைகள் பயணம் செய்தாலும், ரூ.799 செலுத்துவதன் மூலம்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

17 ஆண்டு கால விளக்கமறியலின் பின்னர் தமிழ் அரசியல் கைதி ஒருவருக்குப் பிணை

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்த உளவுத் தகவல்களை வழங்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக எவ்வித இறுதித் தீர்ப்புமின்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த செல்லையா பியூபாகரன் என்பவருக்கே நேற்று இவ்வாறு பிணை அனுமதிக்கப்பட்டது. எனினும், நீதிமன்றம் விதித்த கடுமையான பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்குப் போதிய பிணையாளர்களோ அல்லது வசதிகளோ இல்லாத காரணத்தால், பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் அவர் மீண்டும் சிறைச்சாலையிலேயே அடைக்கப்பட்டுள்ளார். நீண்டகாலமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் மனித உரிமைகள் மற்றும் நீதித்துறைத் தாமதங்கள் குறித்து இந்தச் சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே மீண்டும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கையில் இனி மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை

மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவையொன்றை ஆரம்பிக்க 1990 சுவசெரிய அறக்கட்டளை தீர்மானித்துள்ளது. அதிக வாகன நெரிசல் உள்ள நகர்ப்புறங்களிலும் மற்றும் வீதித் தடங்கல்கள் உள்ள பகுதிகளிலும் இந்த மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. அம்புலன்ஸ் வண்டி சென்றடைவதற்கு முன்னர் நோயாளிக்கு விரைவாக முதலுதவி மற்றும் அடிப்படை மருத்துவ வசதிகளை வழங்குவதே இந்த புதிய வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என சுவசெரிய அறக்கட்டளை குறிப்பிட்டுள்ளது. இதற்காக விசேட பயிற்சி பெற்ற வைத்திய அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், அடிப்படை மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. இந்த வேலைத்திட்டத்தை ஒரு முன்னோடிச் செயற்றிட்டமாக கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களை இலக்கு வைத்து இந்த வருடம் முடிவடைவதற்குள் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தம் – வர்த்தமானியில் வெளியான சட்டமூலம்

ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் பல முக்கிய திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்கான திருத்தச் சட்டமூலம் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.இதற்கமைய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் குறித்த ஊழல் ஒழிப்பு (திருத்தச்) சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் ஒழிப்புச் சட்டத்தைத் திருத்தும் நோக்கில் இந்தச் சட்டமூலம் நேற்று (27) விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின்படி, தற்போதைய ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் பல முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இதில் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த திருத்தச் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மேலும் படிக்க