அண்மை செய்தி இலங்கை செய்தி. 

அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஜூன் மாதத்திற்கான இரண்டாம் கட்டப் பலன்களை இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இக் கொடுப்பனவு 270,025 தகுதியான குடும்பங்களுக்குக் கிடைக்கப்பெறவுள்ளது. இதற்கமைய, மொத்தம் 3,287,163,750 ரூபா (மூன்று பில்லியன் இருநூற்று எண்பத்தேழு மில்லியன் இலட்சத்து அறுபத்து மூவாயிரத்து எழுநூற்று ஐம்பது ரூபாய் தொகை, இன்று உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளதாக அச்சபை மேலும் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வவுனியா மாநகர சபை அமர்வில் கடும் அமளிதுமளி: கறுப்பு சட்டை பதாதை களுடன் நுழைந்த உறுப்பினர்கள்

எட்டு மாதங்களின் பின்னர் இடம்பெற்ற வவுனியா மாநகரசபை அமர்வில் கடும் அமளிதுமளி: கறுப்பு சட்டை பதாதைகளுடன் நுழைந்த உறுப்பினர்கள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி எட்டு மாதங்களுக்கு பின்னர் இன்று (22.06) இடம்பெற்ற வவுனியா மாநகரசபையின் அமர்வில் குழப்பநிலை ஏற்ப்பட்டது. வவுனியா மாநகரசபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாட்டிற்கு இடைக்கால தடை உத்தரவை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்தது. சபை உறுப்பினர்கள் இருவர் தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில் அந்த உத்தரவு வழங்கப்பட்டது. இந்நிலையில் குறித்த வழக்கு இன்னும் முடிவடையாத போதும் சபை நடவடிக்கை மீது விதிக்கப்பட்ட தடைஉத்தரவை நீக்கி உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதனையடுத்து எட்டு மாதங்களாக முடக்கப்பட்டிருந்த சபையின் செயற்ப்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், சபையின் அமர்வு முதல்வர் சு.காண்டீபன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, சபைக் கூட்டத்திற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் கறுப்பு…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.அதன்படி, அவர்கள் எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் தங்கியிருந்து இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் ஈவன் பெபஜோர்ஜியு (Evan Papageorgiou) உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த பயணத்தில் இணையவுள்ளனர். இந்த விஜயத்தின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இலங்கையின் சமீபத்திய பொருளாதார வளர்ச்சியை மதிப்பீடு செய்யவும், இலங்கையின் பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடவும் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

புதுக்குடியிருப்பு குணா கலைக் கல்லூரியில் மாணவர் மதிப்பளிப்பு நிகழ்வு; ரவிகரன் எம்.பி பங்கேற்பு

புதுக்குடியிருப்பு குணா கலைக்கல்லூரியில் மாணவர் மதிப்பளிப்பு நிகழ்வு; ரவிகரன் எம்.பி பங்கேற்பு முல்லைத்தீவு – குணா கலைக்கல்லூரியில் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மற்றும் அண்மையில் வெளியாகியுள்ள க.பொ.த சாதாரணதரப் பரீட்சை முடிவுகளின்படி சிறப்புச்சித்தி பெற்ற மாணவர்களையும் மதிப்பளிக்கும் நிகழ்வானது 20.06.2026இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். இந்நிகழ்வானது விருந்தினர் மற்றும் சாதித்த மாணவர்கள் ஆகியோரது வரவேற்புடன் ஆரம்பமானது. அந்தவகையில் விருந்தினர்களும், சாதனை மாணவர்களும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு, தவில், நாதஸ்வர இசை முழக்கத்துடன் மலர்தூவி வரவேற்று அழைத்துவரப்பட்டனர். அதனையடுத்து மங்கலவிளக்கேற்றல் இடம்பெற்றதுடன், அதனையடுத்து பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மற்றும் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சிறப்புச் சித்திபெற்ற மாணவர்களும் மதிப்பளிக்கப்பட்டனர். அதனையடுத்து விருந்தினர்களது உரை, மாணவர்களது கலை நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன. மேலும் இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி பிடிப்பு..கயேந்திர குமாரின் கேள்வி

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி பிடிப்பு..கயேந்திர குமாரின் கேள்வியால் திண்டாடிய நெடுந்தீவு பிரதேச செயலாளர் குழப்பம் விளைவித்த என்பிபி ஆதரவாளர்கள். * பொலிஸார் வரவழைப்பு *அனுர அரசின் போலி வக்குறுதிகள் *யுத்தத்துக்கு பின்னரும் காணி பிடிப்பு தொடர்கிறது. *போலி வாக்குறுதிகளை வழங்கும் அனுர அரசு.. கயேந்திரகுமார் காட்டம் யாழ் நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் அரச காணியை கடற் படையின் தேவைக்காக யாழ் மாவட்ட செயலக காணி பயன்பாட்டு குழு வழங்கிய விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுப்பிய கேள்வியால் குழப்பநிலை ஏற்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் இடம் பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போதை இவ்வாறான நிலை ஏற்பட்டது. குறித்த விடையம் தொடர்பில் பாராளுமன்ற…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

2025 O/L தேர்வு முடிவுகள் வெளியீடு – 2,25,748 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சை முடிவுகளின்படி, 2,25,748 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வருடத் தேர்வில் 11,790 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ‘A’ சித்தியைப் பெற்று சிறந்த சாதனையைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 11,651 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்களாகவும், 139 பேர் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களாகவும் உள்ளனர். அதேவேளை, 7,419 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு விடைத்தாள்களை மறுபரிசீலனை செய்ய விரும்பும் மாணவர்கள் ஜூன் 25 முதல் ஜூலை 08 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 O/L தேர்வு முடிவுகள் நேற்று (19) நள்ளிரவில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

‘ஐஸ்’ போதைப் பொருள் கடத்தல்.! ஒருவர் கைது

கடவத்தையில் விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட சிறப்பு சுற்றிவளைப்பில் பெருமளவிலான ‘ஐஸ்’ வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) கடவத்தை, புனித அந்திரேயா அக்வில்லினோ தேவாலயத்திற்கு முன்பாக உள்ள வீதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியொன்றில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட நிலையில் சுமார் 6 கிலோ 288 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் சந்தை பெறுமதி 10 கோடி ரூபாயை விட அதிகமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் 38 வயதுடையவர் எனவும், கணேமுல்ல, கேந்தலியத்தபாலுவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கும்பல் தலைவர்கள் ‘பொடி சுரேஷ்’ மற்றும் ‘சங்க சமீர’ ஆகியோரின் இலங்கை வலையமைப்பை இயக்கும் முக்கிய நபராக செயல்பட்டதாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபரிடமிருந்து போதைப்பொருள் எடைபோட பயன்படுத்தப்பட்ட…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

போதைப் பொருளை கடத்த முயன்ற வெளிநாட்டு பிரஜை கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குள் பெருமளவிலான போதைப்பொருளை கடத்த முயன்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட விசேட கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர் டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.அவரிடமிருந்து சுமார் 37 கிலோகிராம் எடையுடைய ஹஷீஷ் வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இதன் பெறுமதி சுமார் 377 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டிற்குள் சட்டவிரோதமாக போதைப்பொருளை கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் சந்தேகநபரும் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

சிகையலங்கார நிலையத்தினுள் புகுந்து தாக்குதல் சந்தேக நபர் கைது

சிகையலங்கார நிலையத்தினுள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தினை சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட காணொளி தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை மதவாச்சி பொலிஸார் கைது செய்துள்ளனர். மதவாச்சி பகுதியில் உள்ள ஒரு சிகையலங்கார நிலையத்திற்குள் நுழைந்த நபர் ஒருவர் அதன் உரிமையாளரைத் தாக்கும் காணொளி ஒன்று சமீப நாட்களாக சமூக மற்றும் மின்னணு ஊடகங்களில் பரவி வருவதைத் தொடர்ந்து, 10 ஆம் திகதி மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாடு ஒன்றினைச் செய்திருந்தார். இந்தக் காணொளிகள் குறித்து மதவாச்சி பொலிஸார் நடத்திய விசாரணையின் போது தாக்குதல் இச்சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரை 17ஆம் திகதி புதன்கிழமை மாலை மதவாச்சி பொலிஸ் நிலைய பொலிஸ் குழுவினரால் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் .சம்பந்தப்பட்ட தாக்குதலில் சந்தேக நபரால் பயன்படுத்தப்பட்ட கூர்மையான ஆயுதம் ஒன்றையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைதுசெய்யப்பட்ட…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

புகையிரதத்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு – யாழ் நெடுங்குளத்தில் சோகம்

புகையிரதத்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு – யாழ் நெடுங்குளத்தில் சோகம் யாழ்ப்பாணம், நெடுங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், புகையிரதத்துடன் மோதி இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் பலாலி இராணுவ முகாமில் பணியாற்றிய, பகலகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நிரோஷன் லக்மால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, குறித்த சிப்பாய் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்த நிலையில், விடுமுறை காலம் முடிவடைந்த பின்னரும் நீண்டகாலமாக கடமைக்குத் திரும்பாதிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று மீண்டும் பலாலி இராணுவ முகாமுக்கு வந்த அவரிடம், நீண்டகாலமாக கடமைக்குத் திரும்பாதமை தொடர்பில் கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தில் ஆஜராகி விளக்கம் வழங்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் முகாமிலிருந்து வெளியேறிய அவர், அரியாலை – நெடுங்குளம் பகுதியில் புகையிரதத்துடன் மோதி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸாரின்…

மேலும் படிக்க