தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பாம்பு தீண்டியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிதுவ கிராமத்தில் பாம்பு தீண்டியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (15) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. சிறிதுவ கிராமத்தைச் சேர்ந்த மொலக்கொட கெதர சாந்தினி பிரேமலதா என்ற  49 வயதுடைய குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் தேங்காய் உரித்துக் கொண்டிருந்தபோது, தேங்காய் குவியலுக்குள் மறைந்திருந்த பாம்பு அவரை தீண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணின் சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்துங்கள் – மீனவ அமைப்புகள் வேண்டுகோள்

வடமராட்சி கிழக்கில் இடம்பெறும் சட்ட விரோத மீன்பிடித் தொழிலை கட்டுப்படுத்துவதற்கு கடற்கரையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர். நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர்கள் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தனர். அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நீண்ட காலமாக குறித்த பகுதிகளில் உள்ள உள்ளூர் மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி கடல் வளத்தை அழித்து விரும் நிலையில் ஏனைய சிறு தொழில் மீனவர்கள் இதனால் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் மீனம்பா படகுகளை கடற் படையினர் தொடர்ச்சியாக கைது செய்து வரும் நிலையில் அவர்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறான நிலையில் தொடர்ச்சியாக சட்டவிரோத தொழில இடம் பெறுவதாக அப்போது…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

புதுக்குடியிருப்பில் மணற்கொள்ளை உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடு கள் ரவிகரன் எம்.பி

புதுக்குடியிருப்பில் மணற்கொள்ளை உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரிப்பு; பொலிசாரால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஆயுதங்களை எம்மிடம் கையளியுங்கள் – ரவிகரன் எம்.பி தெரிவிப்பு முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பொலிசாரால் குறித்த சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியாதெனில் எமது இளைஞர், யுவதிகளிடம் ஆயுங்களைக் கையளித்தால் அவர்கள் சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவார்கள் எனத் தெரிவித்துள்ளார். அதேவேளை விடுதலைப் புலிகளின் காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் இருந்திருக்கவில்லையெனவும், நடுநிசியில்கூட பெண்கள் உலவக்கூடிய நிலையிருந்ததாகவும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், தற்போது அத்தகைய நிலை இல்லை எனவும் சுட்டிக்காட்டினார். முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் 15.09.2026நேற்று இடம்பெற்றபோது, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (15) முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் முதலில் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுடரேற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா, தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றிருந்த பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தியாகிய திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பித்த நாள் {15 09 1987}

தியாகி திலீபன் (இராசையா பார்த்தீபன்) ஈழத்தமிழர்களின் உரிமைக்காகவும், இந்திய அமைதிப்படைக்கு எதிராகவும் 12 நாட்கள் நீரின்றியும் உணவின்றியும் சொட்டு நீர் கூட அருந்தாமல் சொட்டுச் சொட்டாக உயிரைத் துறந்த வரலாற்றின் ஒப்பற்ற தியாகி ஆவார். தியாகி திலீபன் (இராசையா பார்த்தீபன்) அவர்களின் 1987 உண்ணாவிரதப் போராட்டத்தையும் அவர் முன்வைத்த ஐந்து கோரிக்கைகளையும் சுருக்கமாகப் பதிவு செய்கிறது. இன்று செப்டம்பர் 15 என்பதால், அவரது உண்ணாவிரதம் தொடங்கிய நாளை நினைவுகூரும் நாளாகவும் இது அமைகிறது. அவர் 1987 செப்டம்பர் 26 அன்று, 12 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு உயிரிழந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். புனர்வாழ்வு என்ற பெயரில் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இடைக்காலப்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

எங்களை அழித்தவர்களுடன் ஒரே மேடையில் கூத்தடிக்கும் சிலர்’ – சிறீதரன் எம்.பி. குற்றச்சாட்டு

எங்களை அழித்தவர்கள், இன அழிப்பை மேற்கொண்டவர்கள், எங்கள் வீடுகளில் இன்றும் நெருப்பின் நினைவுகளை விட்டுச் சென்றவர்கள், எங்கள் பிள்ளைகளைக் காணாமல் ஆக்கியவர்கள் என நாம் குற்றஞ்சாட்டுகின்ற தரப்பினருடன் இன்று சிலர் ஒரே மேடையில் ஏறி நிற்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம்சாட்டினார். கிளிநொச்சி, கோணாவில் வட்டாரத்திற்கான மக்கள் சந்திப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இன்று (14) பிற்பகல் கோணாவில் கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.குறித்த கலந்துரையாடலில் வட்டார பிரதேச சபை உறுப்பினர் ச. சிவயோகலக்சுமி உள்ளிட்ட பிரதேச மக்கள் கலந்து கொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் பணியாற்றும் நீதிபதிகளின் ஓய்வு வயதை 62 இலிருந்து 67 ஆக அதிகரிப்பதற்கான தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும், வழக்கறிஞர்கள் சங்கமும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஆயுர்வேத கடை போர்வையில் கஞ்சா லேகியம் விற்பனை ஒருவர் கைது

ஆயுர்வேத கடை என்ற போர்வையில்    கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்து வந்த  சந்தேக நபரை  இன்று (13) பொலிஸார்  கைது செய்துள்ளனர்.nஅம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று  வன்னியர் வீதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 9 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா கலந்த லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இச் சோதனை நடவடிக்கையின் போது குறித்த லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் வழிகாட்டலில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி யூ.எல்.எஸ். ஆப்தீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

துப்பாக்கிச் சூடு நடத்தி டிப்பர்களை மடக்கிப்பிடித்த அதிரடிப்படையினர்!

யாழ்ப்பாணம், கொடிகாமம் – மீசாலை வடக்கு, புத்தூர் வீதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர் வாகனங்களை விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி தடுத்து நிறுத்தியதுடன், அவற்றின் சாரதிகள் இருவரையும் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (14) இரவு சுமார் 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொடிகாமம், கெற்பேலி பகுதியில் இருந்து மூன்று டிப்பர் வாகனங்கள் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் செல்வதாக விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற விசேட அதிரடிப்படையினர், மீசாலை – புத்தூர் வீதியில் பூதவராயர் கோவில் பகுதியில் குறித்த டிப்பர் வாகனங்களை வழிமறித்துள்ளனர். எனினும், அதிரடிப்படையினரின் சமிக்ஞைகளை பொருட்படுத்தாத டிப்பர் வாகனங்கள், அதிரடிப்படையினரின் வாகனத்தை மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து டிப்பர் வாகனங்களின் சில்லுகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி, இரண்டு டிப்பர் வாகனங்களையும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ் புத்தூரில் வயோதிப பெண் கொடூரக் கொலை

யாழ்ப்பாணம், புத்தூர் மேற்கு – சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வயோதிப பெண் ஒருவர் அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று (14) இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் புத்தூர் மேற்கு, சிவன் கோவில் அருகே அமைந்துள்ள வீட்டில் தனியாக வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் குறித்த வீட்டிலிருந்து சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து, அயல் வீட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் குறித்த வீட்டிற்குச் சென்று பார்வையிட்டபோது, வயோதிப பெண் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கொலைக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

உள்ளகப் பொறி முறையை நம்பி ஆதாரங்களை இழக்க முடியாது! கஜேந்திரகுமார்

தமிழினப் படுகொலைக்குக் கண்ணுக்கு முன்னால் கைகளாலே பிடிக்கக்கூடிய ஆதாரங்கள் செம்மணியில் கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், அதனை விசாரிப்பதற்கு மீண்டும் அந்த அரசிடமே அனுமதித்தால், அது எமது இனப்படுகொலைக்கான மிகச்சிறந்த ஆதாரங்களை நாமே இழப்பதற்குச் சமமாகிவிடும்.” – என்று தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் செம்மணி மனிதப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட மாபெரும் பேரணியின் இறுதியில், நல்லூர் கிட்டு பூங்காவில் ‘தமிழ் மக்களின் நீதிக்கான குரல்’ எனும் தொனிப்பொருளில் உள்ளகப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்கும் வகையிலும், சர்வதேச விசாரணையை ஐ.நா. பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பிரகடனக் கூட்டம் நடைபெற்றது. அதில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:- “போர்…

மேலும் படிக்க