சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

புதுக்குடியிருப்பில் மணற்கொள்ளை உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடு கள் ரவிகரன் எம்.பி

புதுக்குடியிருப்பில் மணற்கொள்ளை உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரிப்பு; பொலிசாரால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஆயுதங்களை எம்மிடம் கையளியுங்கள் – ரவிகரன் எம்.பி தெரிவிப்பு முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பொலிசாரால் குறித்த சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியாதெனில் எமது இளைஞர், யுவதிகளிடம் ஆயுங்களைக் கையளித்தால் அவர்கள் சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவார்கள் எனத் தெரிவித்துள்ளார். அதேவேளை விடுதலைப் புலிகளின் காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் இருந்திருக்கவில்லையெனவும், நடுநிசியில்கூட பெண்கள் உலவக்கூடிய நிலையிருந்ததாகவும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், தற்போது அத்தகைய நிலை இல்லை எனவும் சுட்டிக்காட்டினார். முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் 15.09.2026நேற்று இடம்பெற்றபோது, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (15) முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் முதலில் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுடரேற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா, தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றிருந்த பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தியாகிய திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பித்த நாள் {15 09 1987}

தியாகி திலீபன் (இராசையா பார்த்தீபன்) ஈழத்தமிழர்களின் உரிமைக்காகவும், இந்திய அமைதிப்படைக்கு எதிராகவும் 12 நாட்கள் நீரின்றியும் உணவின்றியும் சொட்டு நீர் கூட அருந்தாமல் சொட்டுச் சொட்டாக உயிரைத் துறந்த வரலாற்றின் ஒப்பற்ற தியாகி ஆவார். தியாகி திலீபன் (இராசையா பார்த்தீபன்) அவர்களின் 1987 உண்ணாவிரதப் போராட்டத்தையும் அவர் முன்வைத்த ஐந்து கோரிக்கைகளையும் சுருக்கமாகப் பதிவு செய்கிறது. இன்று செப்டம்பர் 15 என்பதால், அவரது உண்ணாவிரதம் தொடங்கிய நாளை நினைவுகூரும் நாளாகவும் இது அமைகிறது. அவர் 1987 செப்டம்பர் 26 அன்று, 12 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு உயிரிழந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். புனர்வாழ்வு என்ற பெயரில் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இடைக்காலப்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பலாலி காணி விடுவிப்பு போராட்டம் – போராட்டகாரருக்கு எதிராக வழக்கு

பலாலியில்  இடம்பெற்ற காணி விடுவிப்பு போராட்டத்தில் இடையூறு விளைவித்ததாக கூறி, வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தன், ஜனநாயக கட்சியின் தலைவர் வேந்தன் மற்றும் போராட்டத்தில் கலந்து கொண்ட காணி உரிமையாளர்களுக்கு பலாலி பொலிசாரும், உதவி பொலிஸ் அத்தியட்சகரும் இணைந்து மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். குறித்த வழக்கில், 2026.08.16 அன்று பலாலி பிரதான வீதியில் அமைந்துள்ள T சந்தியில், பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்டன் சுதாகர் என்பவரின் ஏற்பாட்டில், உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி, காலை 09.30 மணி முதல் 13.00 மணி வரை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பலாலி பிரதான வீதி T சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களினால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமை தொடர்பாக குறிப்பிட்டே, 2026.08.17 அன்று பலாலி பொலிஸாரினால்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

யாழ் செம்மணியில் அகழ்ந்து எடுக்கப் படும் மனித எச்சங்களுக்கு சர்வதேச நீதி கோரி பேரணி

  யாழ்ப்பாணம் – 17.08.2026 செம்மணியில் அகழ்ந்து எடுக்கப்படும் மனித எச்சங்களுக்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் பேரணி யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் அகழ்வுப் பணிகளின்போது கண்டெடுக்கப்பட்டு வரும் மனித எச்சங்கள் தொடர்பில் உண்மையை வெளிக்கொணரவும், தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகளுக்கு சர்வதேச நீதியைப் பெற்றுத்தரவும் கோரி இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வாசிகசாலை முன்றலில் இருந்து ஆரம்பமான பேரணி, கோயில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் வரை இடம்பெற்றது. இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பேரணியில் கலந்துகொண்டவர்கள் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முழுமையானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், அகழ்வுப் பணிகள் வெளிப்படைத்தன்மையுடனும் சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாகவும்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செஞ்சோலை படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவு நாள்.

செஞ்சோலை படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவு நாள்.  ஈழத்தமிழர் வரலாற்றுப் பக்கங்களில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய ‘செஞ்சோலை படுகொலை’ நடந்து இன்றோடு (2006 ஆகஸ்ட் 14 – 2026 ஆகஸ்ட் 14) 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த 2006ஆம் ஆண்டு இதே நாளில், முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தின் மீது இலங்கை விமானப்படை நடத்திய கொடூரமான வான்வழித் தாக்குதலில் 61 பாடசாலை மாணவிகள் உட்பட 64 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த 16 முதல் 19 வயதுக்குட்பட்ட உயர்தர மாணவிகள், முதலுதவி மற்றும் தலைமைத்துவப் பயிற்சிக்காக வல்லிபுனத்திலுள்ள செஞ்சோலை வளாகத்தில் தங்கியிருந்தனர். ஆகஸ்ட் 14 காலை 7:00 மணியளவில், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான கிஃபிர் (Kfir) போர் விமானங்கள்,…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் அகதிகளுக்கு அரசின் அறிவிப்பு

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் (UNHCR) உதவியுடன் மீண்டும் தாயகம் திரும்ப எதிர்பார்க்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கான சிறப்பு ஏற்பாடுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக, இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக குறித்த நபர்களின் இலங்கை அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டு, அரச புலனாய்வுச் சேவையின் ஒப்புதல் அனுமதி பெறப்பட்ட பின்னர் அவர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் திகதிக்கு முன்னர் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது அங்கீகரிக்கப்பட்ட துறைமுகம் ஊடான பயண ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்கு சென்றவர்கள், தங்களுடன் தொடர்புடைய கொலை, தேசத்துரோகம் உள்ளிட்ட பாரிய குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை களுக்கு இடையூறு

கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் திடீர் கோளாறு காரணமாக இன்று (11) முற்பகலில் கடவுச்சீட்டு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது தொடர்பில் வினவியபோது, குறித்த அமைப்பை விரைவில் வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் சமிந்த பத்திராஜ தெரிவித்தார்

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

எங்களின் பூர்வீக காணி அரச படைகளின் சரணாலயமா? பலாலி மக்கள்

எங்களின் பூர்வீக காணி அரச படைகளின் சரணாலயமா? எங்கள் நிலங்களை சுரண்ட இனியும் இடமளிக்க முடியாது என்ற வலுவான கோசத்துடன், வலிகாமம் வடக்கு – பலாலி பகுதியில் மீள்குடியேற முடியாத நிலையில் உள்ள மக்கள் இன்று 8ஆவது வாரமாகவும் அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர். பலாலி சந்தியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமது பூர்வீக நிலங்களை விடுவித்து மீள்குடியேற்றத்துக்கு வழிவகுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். பல ஆண்டுகளாக தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேற முடியாத நிலையில் இருப்பதாகவும், தமது காணிகள் அரச படைகளின் கட்டுப்பாட்டில் காணப்படுவதால் வாழ்வாதாரம், குடியிருப்பு மற்றும் எதிர்கால வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். எங்கள் காணிகள் எங்களுக்கே வேண்டும், பூர்வீக நிலங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும், மக்களின் நிலங்களை சுரண்டுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறு மக்கள் தமது…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

எமது பூர்வீக நிலங் களை உடனடியாக எம்மிடம் ஒப்படை யுங்கள்! – மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

தமது பூர்வீக நிலங்களை உடனடியாக உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க வலியுறுத்தியும், நீண்டகாலமாக காணிகளை மீட்பதற்காக போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் மன்னாரில் இன்று (7) வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் நகர சுற்றுவட்டத்திற்கு முன்பாக காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த போராட்டம், காணி இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டிலும், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (MSEDO) நிறுவனத்தின் அனுசரணையிலும் நடைபெற்றது. யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவு கேப்பாபுலவு மற்றும் மட்டக்களப்பு மயிலத்தமடு–மாதவனை உள்ளிட்ட பகுதிகளில் தமது பூர்வீக காணிகளை மீட்பதற்காக பல ஆண்டுகளாக போராடி வரும் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மன்னார் மாவட்டத்தில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள், கிராம மக்கள், மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், மனித…

மேலும் படிக்க