இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

தற்போது ஆகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசரகால திட்டங்களை இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் தயாரித்துள்ளது. தற்போது ஆகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு மசகு எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் கையிருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்ய இந்தியாவிடம் இருந்து அதிகப்படியான எரிபொருளைக் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துச் செலவு குறைவு என்பதால் இந்திய நிறுவனங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சிங்கப்பூர் ஊடாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் திறந்தே உள்ளது.இதேவேளை, வளைகுடா பிராந்தியத்தில் போர் நீடித்தால், இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

13 இலட்சம் ரூபா பெறுமதியான உணவு பொருட்கள் அழிப்பு நீதிமன்றம் உத்தரவு

மன்னாரில் உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையம் ஒன்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேர்ட், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நகரசபை சுகாதார பரிசோதகர் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது, கலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்தியமை, அழுகிய மரக்கறி பழங்களை காட்சிப்படுத்தியிருந்தமை, உணவு பொருட்களை உரிய வகையில் களஞ்சியப்படுத்தாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பிரபல வர்த்தக நிலையம் ஒன்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையில், வர்த்தக நிலையத்தின் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் வர்த்தக நிலையத்திற்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட உணவு பொருட்களையும் உடனடியாக அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. மேற்படி 13 இலட்சம் ரூபா பெறுமதியான…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

உரும்பிராய் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீ

கோப்பாய் காவல்துறை.பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பற்றியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.எரிபொருள் தாங்கியானது இன்றையதினம் உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் எரிபொருள் கிடங்கிற்கு எரிபொருளை நிரப்ப முயற்சித்தது. எரிபொருளை  இறக்கிக் கொண்டிருந்த பொழுது மோட்டரில் தீப்பிடித்து   விபத்து ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.குறித்த தீ விபத்தில் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இயந்திரம் முழுமையாக சேதமடைந்ததாக தெரிய வருகிறது.தீ விபத்து தொடர்பில்  கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

அத்துமீறிய உப்பளம் அமைக்கும் முயற்சி; மகாவலி பணிப்பாளர் நாயகத்திற்கு – ரவிகரன் எம்.பி கடிதம்

கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகரின் அத்துமீறிய உப்பளம் அமைக்கும்முயற்சி; சட்டவிரோதமான அத்துமீறல்களை உடனடியாக தடுக்குமாறு மகாவலி பணிப்பாளர் நாயகத்திற்கு – ரவிகரன் எம்.பி கடிதம். முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் குஞ்சுக்கால்வெளி பகுதியிலுள்ள தமிழ்மக்களின் பூர்வீக தனியார்காணிகளை, மகாவலி அதிகார சபை தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள வர்த்தகருக்கு சட்டவிரோதமாக குத்தகைக்கு வழங்கியுள்ளது. இந்நிலையில் மகாவலி அதிகாரசபையிடமிருந்து சட்டவிரோத குத்தகை அனுமதியைப் பெற்றுக்கொண்ட குறித்த பெரும்பான்மையின வர்த்தகர் தமிழ்மக்களின் தனியார்காணிகளில் அத்துமீறி நுழைந்து உப்பளம் அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதால் இனமுறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சட்டவிரோதமான அத்துமீறிய செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மாகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு 07.03.2026 இன்று கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஈரானிய கப்பல் தொடர்பில் சர்வதேச சட்டங்கள் பின்பற்றப்படும்! அமைச்சர் விஜித ஹேரத்

ஈரானிய கப்பல்களிலிருந்து மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச கடல்சார் சட்டங்கள் பின்பற்றப்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இடம்பெற்ற RAISINA மாநாட்டில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது, இலங்கைக்கு அப்பாலான கடற்பரப்பில் இடம்பெற்ற அமெரிக்க நடவடிக்கை, இலங்கையின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது தொடர்பான விடயங்கள் குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத், இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகளின் கடல்சார் சாசனம் அதாவது சர்வதேச சட்டங்களை பின்பற்ற வேண்டி ஏற்படும். இதில் இந்து சமுத்திர விளிம்பு நாடுகளினது சங்கங்களின் நீல பொருளாதார சட்டகம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான மூலோபாய செயற்பாடுகள் ஆகிய இரண்டு விடயங்கள் தொடர்பில் கருத்திற்கொள்ள வேண்டும். இலங்கை இந்த விடயங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் 2025 ஆம்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

காவலில் இருக்கும் ஈரானியப் பணியாளர்களை ஈரானுக்கு மீண்டும் அனுப்ப வேண்டாம் அமெரிக்கா

ஈரானியப் போர்க்கப்பல் மீதான தாக்குதல் மற்றும் இலங்கையின் மனிதாபிமான உதவி குறித்த விவகாரத்தில் அமெரிக்கா தனது அழுத்தத்தைப் பிரயோகிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச செய்தி முகமையான ‘ராய்ட்டர்ஸ்’ (Reuters) மற்றும் ஏனைய ஊடகங்களின் தகவல்படி,இலங்கை அரசாங்கத்திடம் அமெரிக்கா சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகத் தெரியவருகிறது: இலங்கையின் காவலில் இருக்கும் ஈரானியப் பணியாளர்களைத் தற்போதைய சூழலில் ஈரானுக்கு மீண்டும் அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஈரானிய தரப்பினர், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது நாட்டு வீரர்களைத் தவறான பிரசார நோக்கங்களுக்காக (Propaganda) பயன்படுத்தக்கூடும் என்றும், அவ்வாறு நடக்காமல் இலங்கை அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அமெரிக்கா தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், இந்த விவகாரத்தை ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாகவே அணுகுவதாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இலங்கை இச்சூழ்நிலையில், சர்வதேச நாடுகளின்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கல்வி திணைக்களத்தின் அநீதியான செயற்பாடு . நீதிமன்றை நாடவுள்ள ஆசிரியர் சங்கம்

வடமாகாண கல்வி திணைக்களத்தின் அநீதியான செயற்பாடுகளுக்கெதிராக வரும் வாரத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கம் என்ற வகையில்  ஆசிரியர்களின் உரிமைகளை நிலைநாட்ட இறுதிவரை போராடுவோம் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில்  நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். சேவையின் தேவை இடமாற்றம் என்ற பெயரில் தொழிற்சங்கங்களின் பங்களிப்பின்றி வடமாகாண கல்வி திணைக்களத்தால், முன்னெடுக்கப்படும் சட்டவிரோத இடமாற்ற செயற்பாடுகளுக்கு துணைபோகும் வகையில் வடமாகாண ஆளுநர் செயற்படுகிறார். இலங்கை ஆசிரியர் சங்கம் வடமாகாண ஆணைக்குழுவுக்கும் சட்ட ஏற்பாடுகள் குறித்து முறையிட்டிருந்தும், சட்ட முரண் குறித்த விடயங்களுக்கு பதிலளிக்காமல் மழுப்பலான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது என்பது வடமாகாண ஆணைக்குழுவும் சுயாதீனமாக இயங்கவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. இன்றைய ஆளுநர் முன்னர் அரச அதிபராக இருந்துபோது, தனக்கு வழங்கப்பட்ட இடமாற்றம்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

யாழ்- தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியானது இன்றையதினம் கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்றது. ஆரம்பத்தில் விருந்தினர்கள் மேற்கத்திய இசை வாத்தியங்கள் முழங்க மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத்தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டு, அணிநடையுடன் போட்டி ஆரம்பமானது. தொடர்ந்து சுவட்டு நிகழ்வுகள், இடைவேளை நிகழ்வு, பரிசில்கள் வழங்கல் என்பன இடம்பெற்றன. கல்லூரியின் முதல்வர் ரி.வரதன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவனான வைத்தியர் ரி.நந்தகுமார் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினர்கள், கௌரவ விருந்தினர்கள், ஆசிரியர்கள், அயற்பாடசாலை அதிபர்கள் – ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இஸ்ரேலின் பணிபு ரியும் இலங்கை யர்கள் அவதானத் துடன் இருக்குமாறு கோரிக்கை

இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் தமது பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா அமைப்பினால் நடத்தப்படும் ஏவுகணைத் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஹைஃபா (Haifa), நஹாரியா (Nahariya), எக்கர் (Acre), கலிலி (Galilee), அஃபுலா (Afula), கர்மேல் மலைத்தொடர் (Carmel Mountains), நாசரேத் (Nazareth), திபேரியா (Tiberias) உள்ளிட்ட வடக்கு பிராந்தியங்களில் வசிக்கும் மக்கள், லெபனான் திசையிலிருந்து வரக்கூடிய தாக்குதல்கள் மற்றும் நாட்டின் உட்பகுதிகளில் சில குழுக்களால் முன்னெடுக்கப்படக்கூடிய ஆத்திரமூட்டும் சம்பவங்கள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும் என நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், தற்போது ஈரானில் இருந்து முன்னெடுக்கப்படும் தாக்குதல்களில் குறைவு காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ்.படைத் தலைமையகம் அகற்றப்பட மாட்டாது.பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர,

யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தை அகற்றுவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று  பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, இது தொடர்பாகப் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை எனத் தெரிவித்து விரிவான விளக்கமளித்தார். “யாழ்ப்பாணம் படைத் தலைமையகம் அகற்றப்படவுள்ளதாகச் சிலர் திட்டமிட்டுப் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். மிகக் குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தவுமே இவ்வாறான பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.” – என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் அவர் இதன்போது தெளிவுபடுத்தினார்: “நாட்டின் எந்தவொரு பகுதியிலும் காணிகளை விடுவிக்கும் போது, ‘தேசிய பாதுகாப்பு’ என்பற்கே முதலிடம் வழங்கப்படும். பாதுகாப்புத் தேவைகளைக் கருத்திற்கொண்டு,…

மேலும் படிக்க