தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

13 இலட்சம் ரூபா பெறுமதியான உணவு பொருட்கள் அழிப்பு நீதிமன்றம் உத்தரவு

மன்னாரில் உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையம் ஒன்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேர்ட், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நகரசபை சுகாதார பரிசோதகர் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது,

கலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்தியமை, அழுகிய மரக்கறி பழங்களை காட்சிப்படுத்தியிருந்தமை, உணவு பொருட்களை உரிய வகையில் களஞ்சியப்படுத்தாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பிரபல வர்த்தக நிலையம் ஒன்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வர்த்தக நிலையத்தின் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் வர்த்தக நிலையத்திற்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட உணவு பொருட்களையும் உடனடியாக அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

மேற்படி 13 இலட்சம் ரூபா பெறுமதியான உணவு பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன், மன்னார் சுகாதாரத்துறை தொடர்சியாக இவ்வாறான நடைமுறைகளை மேற்கொண்டுவதுடன்  உணவகங்களின் சுகாதாரம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

Leave a Comment