தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் பட்டாசு வெடித்ததில் இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்ற பட்டாசு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 32 வயதுடைய செல்வராசா கசிவன்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கிடைத்த தகவல்களின்படி, நேற்று மடு மாதா ஆலய யாத்திரைக்காக பக்தர்கள் புறப்பட்டுச் சென்ற வேளையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு பட்டாசு வெடிக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வெடிக்காமல் இருந்த பட்டாசை மீண்டும் வெடிக்கச் செய்வதற்காக செல்வராசா கசிவன் அதற்கு அருகில் சென்று ஊதியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அப்போது பட்டாசு திடீரென வெடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் திடீர் மரண விசாரணை பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

சுற்றுலா விமானம் திடீர் விபத்து – 13 பேர் உயிரிழப்பு

பெருவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 13 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. செஸ்னா கரவன் C-208 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம், நேற்று (01) பெருவின் பிரபல சுற்றுலாத் தலமான நாஸ்கா கோடுகள் (Nazca Lines) மீது பார்வைப் பயணத்தில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. விமானத்தில் 11 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 2 விமானிகளும் பயணித்திருந்தனர். உயிரிழந்தவர்களில் ஜெர்மனியைச் சேர்ந்த 2 பேர், ஸ்பெயினைச் சேர்ந்த 2 பேர் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த 7 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், விபத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால் விமானத்தில் இருந்த எவரும் உயிர் தப்பவில்லை என்று பெரு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுவரை சம்பவ இடத்திலிருந்து 4 பேரின் சடலங்கள்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

ஓமந்தை பகுதியில் வீதி விபத்து: பேருந்து தரிப்பிடத்தில் நின்றவர் பலி

வவுனியா, ஓமந்தை – ஏ9 வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற சோககரமான வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை ஓமந்தை, பனிக்கன் நீராவி பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் நின்றிருந்த நபர் ஒருவர் மீதே, கூலர் (குளிரூட்டப்பட்ட) வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பனிக்கன் நீராவி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஏ9 வீதியில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களும் உயிரிழப்புகளும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. இன்னும் எத்தனை உயிர்களை வீதி விபத்துக்களுக்கு பலி கொடுக்கப் போகிறோமோ? என அப்பகுதி மக்கள் கவலையும் விசனமும் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

17 ஆண்டு கால விளக்கமறியலின் பின்னர் தமிழ் அரசியல் கைதி ஒருவருக்குப் பிணை

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்த உளவுத் தகவல்களை வழங்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக எவ்வித இறுதித் தீர்ப்புமின்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த செல்லையா பியூபாகரன் என்பவருக்கே நேற்று இவ்வாறு பிணை அனுமதிக்கப்பட்டது. எனினும், நீதிமன்றம் விதித்த கடுமையான பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்குப் போதிய பிணையாளர்களோ அல்லது வசதிகளோ இல்லாத காரணத்தால், பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் அவர் மீண்டும் சிறைச்சாலையிலேயே அடைக்கப்பட்டுள்ளார். நீண்டகாலமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் மனித உரிமைகள் மற்றும் நீதித்துறைத் தாமதங்கள் குறித்து இந்தச் சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே மீண்டும்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

போராடிய ஊடகவியலாளர்களை சந்திக்க மறுத்த பிரதி அமைச்சர்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரிப் போராடிய ஊடகவியலாளர்களைச் சந்திக்க மறுத்த ஊடகப் பிரதி அமைச்சரின் செயற்பாட்டின் மூலம், இந்த அரசு ஊடகவியலாளர்களுக்கு எப்போதுமே நீதியைப் பெற்றுக்கொடுக்கப் போவதில்லை என்பது தெள்ளத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது என்று யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கே. செல்வகுகுமார் தெரிவித்தார். படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஊடகவியலாளர்கள் நேற்று முன்னெடுத்த கவனவீர்ப்புப் போராட்டத்தின் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களுடன் இணைந்து பணியாற்றிய 39 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை எந்த அரசும் முறையான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. புதிய அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் விசாரணைகளைத் துரிதப்படுத்தாததைக் கண்டித்தே நாம் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தோம். கடந்த காலங்களில் நாம் கோரிக்கைகளை…

மேலும் படிக்க