தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

படுகாயமடைந்த குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

கிளிநொச்சி, இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் படுகாயமடைந்த குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நேற்று (03) பிற்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், வீதியில் நின்றுகொண்டிருந்த பெண் மீது அதே திசையில் பின்னால் வந்த ஹயஸ் ரக வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்துள்ளார். விபத்தில் காயமடைந்த அவர் உடனடியாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கிளிநொச்சி பளை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய சந்திரன் சசிகலா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சமூக மட்ட அமைப்புகளில் பணியாற்றியவர் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

களுவாஞ்சிகுடியில் 24½ பவுண் தங்க நகைகள் திருட்டு:ஒருவர் கைது

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் உள்ள வீடொன்றில் திருடப்பட்ட 24½ பவுண் தங்க நகைகளை 24 மணி நேரத்திற்குள் பொலிஸார் மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக யுவதி ஒருவரையும் கைது செய்துள்ளனர். துறைநீலாவணையில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்த தாலிக்கொடி, கைவளையல்கள், தோடுகள், கைச்சங்கிலி உள்ளிட்ட 24½ பவுண் தங்க நகைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.08.2026) திருடப்பட்டிருந்தன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அதே நாளில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டைப் பெற்றவுடன் களுவாஞ்சிகுடி பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்தனர். அதன் பலனாக, 24 மணி நேரத்திற்குள் களவாடப்பட்ட அனைத்து தங்க நகைகளும் மீட்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்டார். விசாரணைகளில், கைது செய்யப்பட்ட யுவதி வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், பாதிக்கப்பட்ட வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

மண்டைதீவு கடற்பரப்பில் 3,111 கடல் அட்டைகள் கைப்பற்றல் – இருவர் கைது

யாழ்ப்பாணம் – மண்டைதீவு கடற்பரப்பில் முறையான அனுமதிப் பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 3 ஆயிரத்து 111 கடல் அட்டைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மண்டைதீவு கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இணைந்து நேற்று (03) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது, சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட கடல் அட்டைகளுடன் அவற்றை ஏற்றிச் சென்ற சிறிய கன்டர் வாகனமும் கைப்பற்றப்பட்டதுடன், அதில் பயணித்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட 3,111 கடல் அட்டைகள் 11 இலட்சத்து…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தமிழர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி – அருட்தந்தை மா. சத்திவேல்!

அவரால் இன்று (03.08.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாற்றம் எனும் தொனியோடு  ஆட்சி பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தியாகிய மக்கள் விடுதலை முன்னணியினர் அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட தமது இயக்க உறுப்பினர்களுக்கு வருடம் தோறும் தெற்கில் நினைவு நிகழ்வுகள் பெருமெடுப்பில் நிகழ்த்துகையில்  அதே அரச பயங்கரவாத இனவாத கட்டமைப்பு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்திய இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்காக தெற்கில் நினைவேந்தல் நடத்துபவர்களையும் அந்நினைவுகளில் வளவாளர்களாக கலந்து கொண்டவர்களையும்  பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தொடர்ந்து விசாரணை என அழைப்பது அரச பயங்கரவாத இயந்திரம் தமிழர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் காலத்திலும் தமது வன் முகத்தை காட்டி நிற்கின்றது. இதனை கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் வன்மையாக கண்டிப்பதோடு நினைவேந்தல் சுதந்திரத்திற்கு எதிரான செயற்பாட்டினை நிறுத்துமாறும் கோரிக்கை விடுகின்றது. கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பண்டாரவன்னியன் மற்றும் பால்ராஜ் போன்றோரை நினைவு கூருவது எமது வரலாற்றுக் கடமை;

பண்டாரவன்னியன் மற்றும் பால்ராஜ் போன்றோரை நினைவு கூருவது எமது வரலாற்றுக்கடமை; அந்த வரலாற்றுக் கடமையை தொடர்ந்து முன்னெடுப்பேன் – ரவிகரன் எம்.பி தெரிவிப்பு தமிழர்களின் வீரத்தினைப் பறைசாற்றுகின்றவகையிலான வரலாற்றினையுடைய வன்னி மன்னன் பண்டாரவன்னியன், பால்ராஜ் போன்றவர்களை நினைவுகூருவது தமிழர்களின் வரலாற்றுக் கடமை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அத்தோடு கடந்த மேமாதம் இலங்கை நாடாளுமன்றில் பால்ராஜ்ஜிற்கு தாம் அஞ்சலி செலுத்தியமைக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், பெரும்பான்மை இனத்தவர்கள் பலரும் கடுமையாக எதிர்வினையாற்றியிருந்ததாகச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இவ்வாறான எதிர்ப்புக்களைக் கண்டு தாம் அஞ்சப்போவதில்லை எனவும் இவ்வாறான நினைவுகூரல்களும், அஞ்சலிகளும் தம்மால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவுந் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு – முற்றவெளி மைதானத்தில் 02.08.2026நேற்று இம்பெற்ற தமிழர் பாரம்பரிய வீரக்கலை வீரர்களின் மதிப்பளிப்பு நிகழ்வில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பேருந்தும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 20 பேர் காயம்

கேகாலை – கரடுபன பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை (இ.போ.ச.) பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர் இன்று (03) காலை 6.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரம்புக்கனையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இ.போ.ச. பேருந்தும், திகனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்துமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கேகாலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை;

நாட்டின் நான்கு மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நேற்று (02) இரவு 11.00 மணியளவில் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள மற்றும் கங்கஇஹல கோரள பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட (Level 2) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் நோர்வுட் பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு முன்னெச்சரிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட (Level 1) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஊழல் தடுப்புச் சட்டத்தில் முன்வைக்கப் பட்டுள்ள புதிய திருத்தங்கள்

ஊழல் தடுப்புச் சட்டத்தில் அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய திருத்தங்கள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.ஊழல் மூலம் ஈட்டப்பட்ட சொத்துகள் தொடர்பாக விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிப்பதற்கும், பிணை வழங்கும் நடைமுறைகளை மேலும் கடுமையாக்குவதற்கும் இத்திருத்தங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஊழல்கள் மூலம் பெறப்பட்ட சொத்துக்கள் அல்லது அவற்றை மாற்றியமைத்ததாக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு, குறித்த சொத்தின் பெறுமதியை விடக் குறையாத மூன்று மடங்கு தொகை மேலதிக அபராதமாக விதிக்கப்படும்.இதற்கு முன்னர், ஊழல் குற்றத்திற்கான அதிகபட்ச தண்டனையாக 10 ஆண்டுகளுக்கு குறையாத கடூழியச் சிறைத்தண்டனையும், ரூ.10 இலட்சம் அபராதமும் மட்டுமே விதிக்கப்பட்டது. புதிய திருத்தத்தின்படி, ஊழல் காரணமாக அரசுக்கு ஏற்பட்டுள்ள முழுமையான நிதி இழப்பிற்குச் சமமான தொகையையும் மேலதிக அபராதமாக அறவிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான பிணை வழங்கும் நடைமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. ரூ.1 இலட்சத்திற்குக்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மெட்ரோ தாழ்தள பேருந்துகளில் பயணிப்போருக்கு சிறப்பு சலுகைகள்

நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இறக்குமதி செய்யப்பட்ட தாழ்தள மெட்ரோ (Metro) பேருந்துகளில் வார இறுதியில் பயணிக்கும் பயணிகளுக்காக ரூ.799 பெறுமதியிலான சிறப்புச் சலுகைப் பொதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்டுள்ள 104 மெட்ரோ பேருந்துகளின் பதிவு நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலே,இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்ததாவது, இந்தப் பேருந்துகள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. பதிவு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், இம்மாத இறுதிக்குள் அனைத்து 104 பேருந்துகளும் சேவையில் இணைக்கப்படும். இதற்கிடையில், மெட்ரோ நிறுவனம் வார இறுதியில் பயணிக்கும் பயணிகளுக்காக ரூ.799 பெறுமதியிலான சிறப்புச் சலுகைப் பொதியை அறிமுகப்படுத்தியுள்ளது. சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தப் பாதையிலும் எத்தனை தடவைகள் பயணம் செய்தாலும், ரூ.799 செலுத்துவதன் மூலம்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காணிகளை விடுவிக்கக் கோரி வசாவிளான் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கக் கோரி, வசாவிளான் மக்களால் இன்று (02)கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போராட்டம் இன்று காலை 10.00 மணியளவில் வசாவிளான் சந்தியில் ஆரம்பிக்கப்பட்டது. வசாவிளான் மீள்குடியேற்ற அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்தப் போராட்டத்தில், 36 ஆண்டுகளாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது பாரம்பரிய காணிகளை விடுவித்து, மீள்குடியேறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்துமாறு மக்கள் வலியுறுத்துகின்றனர். இதனுடன், பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் காணி மீட்புக்கான போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. ஏற்கனவே மயிலிட்டி மக்களால் மயிலிட்டியில் ஒரு போராட்டமும், பலாலி மக்களால் பலாலி சந்தியில் மற்றுமொரு போராட்டமும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், இன்று வசாவிளான் மக்களும் போராட்டத்தில் இணைந்துள்ள நிலையில், பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தற்போது மூன்று இடங்களில்…

மேலும் படிக்க