தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

நயினாதீவு படகு விபத்து. மீட்கப்பட்ட 10 பேர். யாழ் போதனா வைத்தியசாலையில்.

நயினாதீவுக்கு அருகில் படகு விபத்துக்குள்ளானதில் மீட்கப்பட்ட 10 பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறிகட்டுவான் பகுதியில் இருந்து நெடுந்தீவு நோக்கி இரண்டு படகு இயக்குநர்கள் உட்பட 10 பேருடன் பயணித்த குறித்த படகு நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை மாலை கடலில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயிருந்தது.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடற்பரப்பு கொந்தளிப்பாக காணப்பட்ட போதிலும், காணாமல் போன படகையும் அதில் பயணித்தவர்களையும் தேடும் பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டனர்.

இதன்போது, கடல் சீற்றத்துக்கு மத்தியிலும் காணாமல் போயிருந்த படகையும் அதில் பயணித்த 10 பேரையும் கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இதனையடுத்து, மீட்கப்பட்ட 10 பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அன்மைச் செய்தி

Leave a Comment