இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஊடகத் துறைக்கான உப துறைசார் மன்றத்தை நிறுவும் நிகழ்ச்சித் திட்டம்

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட துறைசார் மன்றத்துடன் இணைந்து, ஊடகத் துறைக்கான உப துறைசார் மன்றத்தை நிறுவுதல் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கான ஆற்றல் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் கொழும்பில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சித்திட்டம் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அரச சேவை மறுசீரமைப்பு மற்றும் திட்டமிடல் பிரிவின் மேலதிக செயலாளர் சாந்தி வீரசிங்க உள்ளிட்ட அப்பிரிவின் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அனுசரணையுடன் இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. துறைசார் மன்றங்கள் அமைக்கப்படும் விதங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அரச அதிகாரிகளுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் சாந்த வீரசிங்க, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி தீபா லியனகே, தபால் மாஅதிபர் ருவன் சத்குமார, அரச அச்சகத்தின் தலைவர் ஆர்.ஏ.பி.கே. ஜயரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

அன்மைச் செய்தி

Leave a Comment