இலங்கை செய்தி. 

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின்னர் மழை, இடியுடன் மழை!

இன்றையதினம் (14) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார், அநுராதபுரம் மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஏற்றிய விமானம் ஈரானுக்கு புறப்பட்டது.

இலங்கையின் தெற்கே கடலில் ‘IRIS DENA’ கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க தாக்குதலில் இறந்த 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஏற்றிய விமானம் ஈரானுக்கு புறப்பட்டது.மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து குறித்த விமானம் நேற்று இரவு 09.29 மணிக்கு (13) புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறத இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் இறந்த மாலுமிகளின் உடல்கள் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளன.கடந்த 4 ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து 40 மைல் தொலைவில் சுமார் 180 பேருடன் ஒரு ஈரானிய கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது.அதனைதொடர்ந்து, சுமார் 84 மாலுமிகளின் உடல்கள் மீட்கப்பட்டதுடன், 35 பேர் உயிருடன் மீட்கப்பட்டு கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஒரு டார்பிடோவைப் பயன்படுத்தி சர்வதேச கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்க உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

மகாவலி அதிகார சபைக்கு மரண தண்டனை வழங் கப்பட வேண்டும் – ரவிகரன் எம்.பி

திரிவச்சகுளத்தில் அடர்வனங்கள் அழிக்கப்பட்ட விவகாரம்; மகாவலி அதிகாரசபைக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து. மகாவலி அதிகாரசபையின் ஆதரவுடனேயே வவுனியா வடக்கு, திரிவச்ச குளம் பகுதியில் பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந்த விவகாரத்தில் மகாவலி அதிகாரசபைக்கு மரணதண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென விவசாயம், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்தவிடம் வலியுறுத்தியுள்ளார். வவுனியா மாவட்டசெயலகத்தில் 12.03.2026நேற்று இடம்பெற்ற விவசாயம், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் தலைமையிலான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வவுனியா வடக்கு பிரசேசெயலாளர் பிரிவிலுள்ள திரிவச்ச குளம் என்னும் இடத்தில் பெரும்பான்மை இனத்தவர்களால் சட்டவிரோதமாக பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டன. இலங்கையின் சட்டத்தின்படி…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ரஷ்யா விடமிருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வது குறித்து விரிவாகக் கலந்துரை யாடல்

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யனுக்கும் (Levan S. Dzhagaryan), வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சருக்கும் இடையிலான அவசர சந்திப்பொன்று இன்று (13) நண்பகல் அமைச்சில் நடைபெற்றது. ​மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக எரிபொருள் விநியோகக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குத் தீர்வாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. ​அதற்கமைய, இலங்கையின் எரிபொருள் விநியோகத்தைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக, ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறித்து ரஷ்யத் தூதுவருடன் வெளிநாட்டு விவகார அமைச்சர் விரிவாகக் கலந்துரையாடினார். ​இலங்கையின் இந்தக் கோரிக்கையை உடனடியாக ரஷ்ய அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்துவதற்குத் தூதுவர் இணக்கம் தெரிவித்தார். அத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து இதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருவதாகவும் அவர் உறுதியளித்தார். ​இலங்கைக்குத் தேவையான…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப் பட்டுள்ளார்.

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனிடம் வழங்கினார்.நீதித்துறை சேவையில் விசேட தர அதிகாரியான எஸ். சதீஸ்தரன், சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

ஐரோப்பாவின் எரிசக்தி நெருக்கடியும் புதிய உலகளாவிய அதிகார மாற்றமும்

ஐரோப்பாவின் எரிசக்தி நெருக்கடியும் புதிய உலகளாவிய அதிகார மாற்றமும் உக்ரைன் போர், மத்திய கிழக்கு மோதல் மற்றும் எண்ணெய் விலை உயர்வால் ரஷ்யா மூலோபாய ரீதியாக பலமடைகிறது; ஐரோப்பிய ஒன்றியம் பிளவுபடுகிறது ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர் : ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாளர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ ◆ ஐரோப்பாவிற்கான முக்கியமான திருப்புமுனை உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதன் மிகக் கடுமையான உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளில் ஒன்றை எதிர்கொண்டு வருகிறது. ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை புதுப்பிப்பதற்கான மார்ச் 15 காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் முன்னெப்போதும் இல்லாத அரசியல் முடக்கத்தை சந்தித்து வருகிறது. 2,700-க்கும் மேற்பட்ட ரஷ்ய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை புதுப்பிப்பதை ஹங்கேரி…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

ஈழத்தமிழன் ஒருவர் சுவிஸ் இராணுவ த்தின் முக்கிய அமைப்பில்..!

ஈழத்தமிழன் ஒருவர் சுவிஸ் இராணுவத்தின் முக்கிய அமைப்பில்..! புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் உலகெங்கும் பல சாதனைகளைத் தொடர்ந்து படைத்து வரும் வேளையில், சுவிற்சர்லாந்தில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) துணைத்தலைவராக ஈழத்தமிழரான மருத்துவர் அபிராம் சந்திரேலகர் (Lt. Abiram Chandrelegar) அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார். ஜெனிவா மாநிலத்தில் பிறந்த ஈழத்தமிழரான மருத்துவர் அபிராம், தனது கடின உழைப்பாலும் திறமையாலும் சுவிஸ் இராணுவத்தின் உயரிய பொறுப்புகளில் ஒன்றை எட்டியுள்ளார். 2025-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) புதிய நிர்வாகக் குழுவில், லெப்டினன்ட் டேவிட் எம். வி. க்ரீமர் தலைவராகவும், லெப்டினன்ட் அபிராம் சந்திரேலகர் துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சுவிற்சர்லாந்து இராணுவத்தின் மிக முக்கியமான அமைப்பான சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) புதிய துணைத்தலைவராக, ஈழத்தமிழ் பின்புலத்தைக் கொண்ட லெப்டினன்ட்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஹிங்கு ரங்கொட பகுதியில் இராணுவ சீருடை , கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் ஒருவர் கைது

ஹிங்குரங்கொட பகுதியில் இராணுவ சீருடை , கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் என்பனவற்றை தன்வசம் வைத்திருந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். அரச புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய விசேட பொலிஸ் அதிரடிப் படையின் அரலகங்வில முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரை கைது செய்துள்ளனர். சந்தேக நபரான முன்னாள் இராணுவ வீரரின் வீட்டில் ஒரு கைக்குண்டு , பல்வேறு வகையான வெடிபொருட்கள், வெற்றுத் தோட்டாக்கள் மற்றும் 36 பயிற்சி தோட்டாக்கள் பல சீருடைகள் , நான்கு கெமா தொப்பிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் தெரிவித்தனர். ஹிங்குரங்கொட கிம்புலாவல பகுதியில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைத்திருந்த நிலையில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட இந்த இராணுவ உபகரணங்கள்…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

ஈரானின் சட்டபூர்வ உரிமை களை மதித்து, இழப்பீடு களை வழங்க! ஈரான் ஜனாதிபதி

போரை நிறுத்த வேண்டுமானால் ஈரானின் சட்டபூர்வ உரிமைகளை மதித்து,இழப்பீடுகளை வழங்க இஸ்ரேலும் அமெரிக்காவும் முன்வர வேண்டுமென ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார். போரை நிறுத்துமாறு தொடர்ச்சியாக விடப்படும் வேண்டுகோளுக்கு பதிலளித்துள்ள ஈரான் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;எதிர்கால ஆக்கிரமிப்பைத் தடுக்க உறுதியான சர்வதேச உத்தரவாதங்கள் அவசியம். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் இருப்பையும் உரிமையையும் அங்கீகரிக்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட காசா பகுதியிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும்.வலிந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் ஏற்பட்ட அழிவுகளுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.இவற்றை செய்தால் மாத்திரமே போரை நிறுத்துவது சாத்தியப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.இரு தரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்தாலும் ஈரானின் நிலைப்பாடு இன்னும் மாறாதுள்ளதையே இந்நிபந்தனைகள் வௌிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.அயல்நாடுகளை தாக்குவதில்லை என ஈரான் அறிவித்த பின்னரும் சில நாடுகள் தாக்கப்படுவதை சுட்டிக்காட்டிய ஈரான் ஜனாதிபதி, சில சதிகளை அரங்கேற்றி போரின் போக்கை மாற்றுவதற்கு அமெரிக்கா…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

எரிவாயு விநியோக த்தை. – உடனடியாக QR முறையை அறி முகப் படுத்துமாறு கோரிக்கை

தற்போது எரிவாயு விலையை அரசாங்கம் அதிகரித்திருந்தாலும், நுகர்வோர் பணம் செலுத்துவது எரிவாயுவுக்காக அல்ல, தம்வசம் உள்ள வெற்றுச் சிலிண்டர்களுக்காகவே ஆகும். சந்தையில் எரிவாயு எங்கே இருக்கின்றது?  என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் கேள்வி எழுப்பினார். தேசிய நுகர்வோர் முன்னணி அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.சர்வதேச ரீதியிலான போர்ச் சூழல் எமக்கு இன்னும் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நம்மிடம் உள்ள கையிருப்புகளைக் காட்டி அநியாயமான முறையில் விலையை உயர்த்தும்போது, அது நுகர்வோரை நேரடியாகப் பாதிக்கின்றது. ஏன் இந்த அறிவிப்புகளை நள்ளிரவில் விடுக்க வேண்டும்? பகல் 10 மணிக்கு அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்க முடியாதா? நள்ளிரவில் விலையை உயர்த்துவதால், மறுநாள் காலை சந்தையில் உள்ள மருந்துகள் முதல் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின்…

மேலும் படிக்க