இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

போதைப்பொருள் அற்ற தேசம் அதிரடிச் சோதனைகளில் 906 பேர் கைது

ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய, போதைப்பொருள் அற்ற தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனைகளில் 906 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட சுற்றிவளைப்புகள் குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது:- நேற்று ஒரே நாளில் மாத்திரம் 965 சுற்றிவளைப்புச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதில் கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பான விசாரணைகளுக்கமைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான 4 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து பெருமளவிலான போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து, 510 கிராம் ஹெரோயின், 788 கிராம் ஐஸ், 70 கிலோகிராம் 264…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை பொதுவான செய்திகள் 

பிரியான்ஸ்க் ஏவுகணைத் தாக்குதல்: புதிய மோதலின் விளிம்பில் ரஷ்யா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ்

உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றம் பிரியான்ஸ்க் ஏவுகணைத் தாக்குதல்: புதிய மோதலின் விளிம்பில் ரஷ்யா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ✦ ரஷ்யா–உக்ரைன் போரின் விரிவடைதலும் மேற்கத்திய நாடுகளின் மறைமுக நேரடி தலையீடும் – ஒரு ஆழமான மூலோபாயப் பகுப்பாய்வு ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ ✦ ஐரோப்பிய போரில் ஒரு புதிய வெடிப்புப் புள்ளி 2026 மார்ச் 10 அன்று ரஷ்யாவின் எல்லை நகரமான Bryansk (பிரியான்ஸ்க்) மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, ரஷ்யா–உக்ரைன் போர் ஒரு ஆபத்தான புதிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தாக்குதல் ரஷ்யா, ஐக்கிய இராச்சியம் (United Kingdom) மற்றும் பிரான்ஸ் (France) ஆகிய நாடுகளுக்கிடையில் கடுமையான இராஜதந்திர மோதலை உருவாக்கியுள்ளது.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் சிவில் சமூக அமைப்பு

இலங்கையில் நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை இனியும் தாமதப்படுத்தாமல், தேவையேற்படின் பழைய தேர்தல் முறையிலாவது உடனடியாக நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்தியுள்ளன. “வாக்குரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமை. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாவிட்டால், அந்தச் சமூகத்தில் சர்வஜன வாக்குரிமை முறையாகச் செயற்படுத்தப்படவில்லை என்றே அர்த்தம். புதிய தேர்தல் முறையைச் சீரமைக்கும் வரை தேர்தலை நடத்த மாட்டோம் என்று கூறுவது நியாயமான வாதம் அல்ல. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் தற்போது சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணையை அரசு தனது சொந்தப் பிரேரணையாக ஏற்றுக்கொண்டால், மிகக் குறுகிய காலத்தில் பழைய முறையிலேயே தேர்தலை நடத்தி முடிக்க முடியும். அவ்வாறு செய்யாமல் குழுக்களை நியமித்து காலத்தைக் கடத்துவது…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

எரிபொருள் மீண்டும் (QR Code) முறைமை! அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றிருந்த மற்றும் தற்போதும் அதே வாகனம் மற்றும் அதே தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தும் நபர்கள், எவ்வித சிக்கலுமின்றி தமது புதிய QR குறியீட்டைப் புதுப்பித்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமது வாகனங்கள் அல்லது தொலைபேசி இலக்கங்களை மாற்றியுள்ளவர்கள் மற்றும் புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை மிக விரைவாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட விசேட விடயங்கள் தொடர்பில் இன்று (15) பிற்பகல் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ்ப்பாண த்தில் சட்டவிரோத பொருட்க ளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கட்டுவன் முனியப்பர் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வைத்து குறித்த மூவரும் நேற்றையதினம் (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது ஒருவரிடமிருந்து வாளும், மற்றைய இருவரிடமிருந்து போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.போதைப்பொருளுடன் கைதான இருவரில் ஒருவரிடமிருந்து 2 கிராம் 340 மில்லிகிராம் ஐஸும், மற்றையவரிடமிருந்து 2 கிராம் 220 மில்லிகிராம் ஐஸும் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சுன்னாகம் காவல் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் இயங்கும் காவல்துறை குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. விசாரணைகளின் பின்னர் கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

சுயநலம் குடிகொண்டு ள்ள தமிழ்கட்சிகள் தங்களது கடமை களை தவறி விட்டது சுதாகரன்

சுயநலம் குடிகொண்டுள்ள தமிழ்கட்சிகள் தங்களது கடமைகளை தவறிவிட்டது. எனவே அந்த இடைவெளியை தமிழர்விடுதலைக்கூட்டணி நிரப்பும் என்று அதன் ஊடக பேச்சாளரும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான சுதாகரன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்… தமிழர் விடுதலைக்கூட்டணியானது புதிய நிர்வாகிகளின் கீழ் தமிழ்மக்களுக்கான தலைமையை வழங்கும் நோக்குடன் சிறப்பாக செயற்ப்பட்டுவருகின்றது.நாங்கள் கடந்த காலங்களில் சில பின்னடைவுகளை சந்தித்திருந்தோம். தற்போது இளைஞர்களின் பங்களிப்புடன் புதிய உத்வேகத்துடனும் முன்னிலையான செயற்ப்பாட்டை நோக்கி நகர்ந்துவருகின்றோம். தற்போது தமிழ்மக்கள் தலைமைத்துவம் அற்று மோசமான நிலையில் வாழ்கின்றனர். எந்த ஒரு தமிழ்கட்சிகளும் மக்களின் விடுதலைக்கான சரியான பாதையினை தெரிவுசெய்யவில்லை. தொடர்ச்சியாக பிழையான பாதையில் அந்த கட்சிகள் பயணிக்கின்றன. கட்சிகளில் சுயநலம் குடிகொண்டுள்ளது. பொது நலம் இல்லாமல் போய்விட்டது. தமிழ்கட்சிகளுக்கு போதுமான சந்தர்ப்பம்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கையில் அரிசி கையிருப்பால் நிரம்பியுள்ளது கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க!

இலங்கையில் அரிசி விலையை நிர்ணயிக்கும் முக்கியமான அரிசி வர்த்தக மையமாக கருதப்படும் மரதகஹமுல களஞ்சிய வளாகம் தற்போது அரிசி கையிருப்பால் நிரம்பியுள்ளது என வர்த்தக, வாணிப மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மரதகஹமுல கூட்டுறவு மொத்த வர்த்தக நிறுவனத்திற்குச் சொந்தமான களஞ்சியங்களை பார்வையிட்டபோதே, இதனை குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், கடந்த 13 ஆண்டுகளாக ஒரு நெல் மூட்டையோ அல்லது அரிசி மூட்டையோ கூட சேமிக்கப்படாமல் இருந்த களஞ்சியம் தற்போது அரிசியால் நிரம்பியிருப்பது ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.மேலும், சுமார் 75,000 மெட்ரிக் டன் நெல் சேமிக்கக்கூடிய திறன் கொண்ட இரண்டு களஞ்சியங்கள் நீண்டகாலமாக சேதமடைந்து புறக்கணிக்கப்பட்டிருந்தது தேசிய இழப்பாகும். தனது அரசின் கீழ் அந்த களஞ்சியங்களுக்கு மீண்டும் உயிர் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.அதேநேரத்தில், அரசாங்கத்திடம் போதுமான அளவு அரிசி கையிருப்பில் இருப்பதால், வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் அரிசி…

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

எரிபொருள் விநியோ கத்தை தொடர்ச்சி யாக முன்னெடுப் பதாகவும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம்

இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதாகவும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த அந்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கே.ரகு இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; “லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் என்ற ரீதியில், எரிபொருள் விநியோகத்தை நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என்பதை மக்களுக்கு கூற விரும்புகிறேன். நாட்டிற்கு மிகவும் அவசியமான வலுசக்தி பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். தற்போதைய நிலைமை மிகவும் சிறப்பாக இருப்பதாக நான் கூறவில்லை. எவ்வாறாயினும், நாட்டுக்குள் எரிபொருள் விநியோகத்தை சீராகப் பேணுவதற்காக லங்கா ஐஓசி நிறுவனமும் அரசாங்கமும் தங்களால் இயன்ற உச்சகட்ட முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தம்பல காமம் பிரதேச செயலாளராக கந்தவனம் சதிசேகரன் நியமிக்க ப்பட்டுள்ளார்.

திருகோணமலை , தம்பலகாமம் பிரதேச செயலாளராக இலங்கை நிருவாக சேவை அதிகாரியான கந்தவனம் சதிசேகரன்  நியமிக்கப்பட்டுள்ளார். அவர்  (13) வெள்ளிக்கிழமை  உத்தியோகபூர்வமாக கடமையினை பொறுப்பேற்றார்.தம்பலகாமம் பிரதேச செயலாளராக இருந்து வந்த  ஜெ.ஸ்ரீபதி திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க  அதிபராக பதவி உயர்வு பெற்றுச் சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டார். காரைதீவைச் சேர்ந்த சதிசேகரன்( சதீஷ்) இறுதியாக லாகுகல உதவிப் பிரதேச செயலாளராக பணியாற்றியிருந்தார்.புதிதாக நியமிக்கப்பட்ட பிரதேச செயலாளர் சதீஷ் , காரை தீவில் பயின்று,  திருகோணமலை இலங்கைத்துறை முகத்துவாரம் இந்து கல்லூரியில் 2012 முதல், ஆசிரியராக முதல் நியமனம் பெற்றார். பின்னர், காரைதீவு பிரதேச செயலகத்தில் 2013- 2015 காலப் பகுதியில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வந்தவேளை  இலங்கை நிருவாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று  இலங்கை நிருவாக சேவையில் இணைந்தார்.2015- 2019 காலப்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

10 சந்தேகநபர்களை, 7 நாட்கள் தடுப்புக் காவலில் புதுக்கடை நீதவான் நீதிமன்றம்

தென் கடற்பரப்பில் சுமார் 10 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் நவீன ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களை, 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 12ஆம் திகதி ஆழ்கடலில் இரண்டு மீன்பிடி படகுகளை முற்றுகையிட்ட கடற்படையினர், அவற்றில் இருந்த 10 சந்தேகநபர்களையும் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் திக்ஓவிட்ட துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். கைப்பற்றப்பட்ட படகிலிருந்து 176 கிலோ ஹெரோயின் மற்றும் 478 கிலோ ‘ஐஸ்’ (மொத்தம் 654 கிலோ).8 பிஸ்டல்கள், 2 டி-56 ரக துப்பாக்கிகள், ஒரு எம்-16 ரக துப்பாக்கி மற்றும் அவற்றுக்கான மெகசின்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன. 22 முதல் 49 வயதுக்கு இடைப்பட்ட இரணவில, மஹவெவ, நீர்கொழும்பு, தங்காலை மற்றும் கந்தர உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.…

மேலும் படிக்க