இலங்கை செய்தி. 

தென்னிலங்கையில் மீட்கப்பட்ட 1000ம் கோடி பெறுமதியான போதைப்பொருள்.

தென்னிலங்கையில் மீட்கப்பட்ட 1000ம் கோடி பெறுமதியான போதைப்பொருள். இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட பல நாள் மீன்பிடி படகு ஒன்றிலிருந்து, 1000 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் நவீன ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சர்வதேச கடல் பரப்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் போது, குறித்த படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 600 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் (ICE) போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 10 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட நவீன ஆயுதங்கள் போதைப்பொருட்களுடன் மாத்திரமன்றி, சட்டவிரோத ஆயுதங்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 08 பிஸ்டல்கள் 02 டி-56 (T-56) ரக துப்பாக்கிகள் 01 எம்-16 (M16) ரக நவீன துப்பாக்கி அவற்றுக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் மற்றும் மகசின்கள் (Magazines) கைது நடவடிக்கையும் விசாரணையும் இந்த…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

ஜனாதிபதி மின்சார சபையின் பொறியி யலாளர் தொழிற் சங்கப் பிரதிநிதி களுக்கிடையி லான கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறை குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. நுகர்வோருக்கு நியாயமான விலையில், வினைத்திறனான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதும், புதிய நிறுவனங்களின் உரிமையை அரசாங்கத்தின் கீழ் பேணுவதன் மூலம் ஒரு நாடாக வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுமே இந்த மறுசீரமைப்பின் நோக்கம் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்குரிய அனைத்து உரிமைகளும் இந்தச் செயல்முறையின் போது புதிய நிறுவனங்களுக்குள்ளும் உறுதிப்படுத்தப்படும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, மின்சார சபையாக இருக்கும் போதே தீர்க்கப்பட வேண்டிய, ஆனால் இதுவரை தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகள் குறித்தும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் விரிவாகக் கலந்துரையாடினார். இது ஒரு…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தமிழர் காணிகளில் அத்துமீறி உப்பளம் அமைப்பதற்கு கடுமையாக எதிர்பு வெளியிட்ட ரவிகரன் எம்.பி;

கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் அத்துமீறி உப்பளம் அமைப்பதற்கு கடுமையாக எதிர்பு வெளியிட்ட ரவிகரன் எம்.பி; உப்பளம் அமைப்பதை நிறுத்தி விசாரணைகளை மேற்கொள்ள முல்லை மாவட்டசெயருக்கு அறிவுறுத்திய அமைச்சர் – கே.டிலால்காந்த முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் தமிழர்களின் தனியார் காணிகளில் மகாவலி அதிகாரசபை மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகிய தரப்பினரின் சட்ட விரோத அனுமதியுடன் பெரும்பான்மை இனத்தவர் அத்துமீறி உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை மேற்கொண்டுவருவதாகச் சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை நிறுத்தி குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, சட்டவிரோத அனுமதி வழங்கியோருக்கும், அத்துமீறிய செயற்பாடுகளில் ஈடுபட்டோருக்கும் எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் குறித்த உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை நிறுத்துவதுடன், குறித்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கு விவசாயம்,…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

மட்டு மண்முனையில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

மட்டக்களப்பு, மண்முனை பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தீவுப் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று காவல் துறையினரால். சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இன்று (12) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 1 இலட்சத்து 80 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா ம‌ற்று‌ம் 67,500 மில்லி லீட்டர் கசிப்பு என்பவற்றை  காவல் துறை கைப்பற்றியுள்ளனர். அத்துடன், இந்த சம்பவத்தின் போது இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக கொக்கட்டிச்சோலை காவல் துறை.தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் கைதானவர்கள் தாளங்குடா, மாவிலங்கத்துறை பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 36 வயதுடைய நபர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மேலும் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, கேஸ் சிலிண்டர், கேஸ் அடுப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை  காவல் துறை .முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

ஏப்ரல் மாதம் இறுதி வரை நாட்டுக்குத் தேவையான எரி பொருள் கையிருப்பை உறுதி டி.ஏ. ராஜகருணா

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா தெரிவித்துள்ளார். இதன்படி ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் பகுதியில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து நான்கு பிரதான எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 – 15: முதலாவது கப்பலும் ஏப்ரல் 17 – 18: இரண்டாவது கப்பலும் ஏப்ரல் 21 – 22: மூன்றாவது கப்பலும் ஏப்ரல் 29 – 30: நான்காவது கப்பலும் நாட்டுக்கு வந்தடையவுள்ளது. குறித்த எரிபொருள் கையிருப்புகள் அனைத்தும், கப்பல்களில் இருந்து எரிபொருள் இறக்கப்படும் தருணத்தில் உலக சந்தையில் நிலவும் சந்தை விலைக்கு ஏற்ப கொள்வனவு செய்யப்படும் என தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தத் திட்டமிடப்பட்ட இறக்குமதிகள் மூலம் பண்டிகைக்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

பிரதேச வைத்திய சாலைக்கு சென்ற குறைபாடுகள் குறித்து ஆராய்வு.ரவிகரன் எம்.பி;

முல்லைத்தீவு பிரதேச வைத்திய சாலைக்கு நேரடியாகச் சென்ற ரவிகரன் எம்.பி; குறைபாடுகள் குறித்து ஆராய்வு. முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு 12.03.2026இன்று நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வைத்திய சாலையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார். குறிப்பாக நோயாளர்கள் மற்றும் வைத்தியர் உள்ளிட்ட தரப்பினர்களுடன் கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வைத்தியசாலைக்குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். அத்தோடு வைத்திய சாலையில் காணப்படும் குறைபாடுகளை நேரடியாகப் பார்வையிட்டார். அந்தவகையில் குறித்த வைத்தியசாலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர், சிற்றுழியர்கள், மருத்துவர் உள்ளிட்ட ஆளணித் தேவைப்பாடுகள் காணப்படுவதாக வைத்தியரால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இவ்வாறான ஆளணிப்பற்றாக்குறைகள் காணப்படுவதால் தம்மால் வினைத்திறனான வைத்தியசேவையை வழங்கமுடியாதுள்ளதாகவும் இதன்போது வைத்தியரால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டப்பட்டது. இதுதவிர வைத்தியசாலையின் சில அறைகளில் மின்சார இணைப்புக்கள் சீரின்றிக்காணப்படுவதால் அந்த அறைகளைப் பயன்படுத்திக்கொள்ளமுடியாத நிலை காணப்படுவதாகவும் இதன்போது…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

ஒரு புதிய உலக ளாவிய எரிசக்திப் போரும் உலக வல்லரசுகளின் மூலோபாய மறுசீரமைப்பும்

ஹார்முஸ் நெருக்கடி 2026: ஒரு புதிய உலகளாவிய எரிசக்திப் போரும் உலக வல்லரசுகளின் மூலோபாய மறுசீரமைப்பும் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுத்து: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்று ஆய்வாளர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ ◆ ஹார்முஸ் ஜலசந்தி: உலகின் மிக ஆபத்தான கடல்வழிப் பாதை ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீண்டும் ஒருமுறை உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. உலகின் எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதத்தை ஏந்திச் செல்லும் இந்த குறுகிய கடல்வழிப் பாதை, வரலாற்று ரீதியாக பூமியின் மிக முக்கியமான மூலோபாயப் பகுதிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. மார்ச் 2026 நிலவரப்படி, ஈரான், இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே தீவிரமடைந்து வரும் இராணுவ மோதல், இந்த நீரிணையை…

மேலும் படிக்க
உலக செய்திகள் சிறப்புச் செய்தி 

ஈரான் கொத்துக் குண்டுகளை பயன் படுத்துவதாக இஸ்ரேலிய இரா ணுவம் குற்றம் சாட்டு!

ஈரான் தனது ஏவுகணைத் தாக்குதல்களில் கொத்துக்குண்டுகளை பயன்படுத்துவதாக இஸ்ரேலிய இராணுவம் (IDF) மற்றும் சர்வதேச ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. ஈரானின் Fateh போன்ற ஏவுகணைகள் விண்ணிலிருந்து வரும்போது, தரைக்குச் சில கிலோமீட்டர் உயரத்திலேயே வெடித்துச் சிதறுகின்றன. அதன் உள்ளே இருக்கும் சிறிய குண்டுகள் ஒரு பெரிய கால்பந்து மைதானம் போன்ற பரப்பளவில் மழையெனப் பொழிகின்றன. இஸ்ரேலின் Iron Dome போன்ற அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளுக்கே இது பெரும் சவாலாக உள்ளது. ஒரு ஏவுகணையைத் தடுப்பது எளிது, ஆனால் விண்ணிலேயே பிரிந்து பல துண்டுகளாக வரும் நூற்றுக்கணக்கான சிறு குண்டுகளைத் தடுப்பது மிகக் கடினம். சமீபத்திய தாக்குதல்களில் மத்திய இஸ்ரேலின் பல பகுதிகளில் இத்தகைய குண்டுகள் விழுந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் ஈழப் போரின் போதும் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அதனை நிருபிக்கக்கூடிய சாட்சியங்களும் உள்ளன என்கின்றனர்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் கோட்டாபய ராஜபக் க்ஷவுக்கு அழைப்பு

இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் எதிர்வரும் (17) செவ்வாய்க்கிழமை ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழு முன்னெடுக்கும்விசாரணையில் சாட்சியமளிப்பதற்காக இந்த அழைப்பு அவருக்கு விடுக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னரும் பெப்ரவரில் 12 ஆம் திகதி ஆஜராகுமாறு இவ்வாறான அழைப்பு விடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், தாம்,சிங்கப்பூரிலிருப்பதாக கோட்டாபய எழுத்துமூலம் அறிவித்திருந்தார்.இதையடுத்தே இம்மாதம் 17 ஆம் திகதி ஆஜராகும்படி அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

ஆயுதங்கள் தாங்கிய குழுவினரால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்

யாழ். தென்மராட்சி பிரதேசத்தில் ஆயுதங்கள் தாங்கிய குழுவினரால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்கள் நேற்று (11) அதிகாலை 1.00 மணிக்கும் 2.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளன. தாக்குதலுக்குள்ளான இடங்கள்: சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒரு வீட்டின் மீதும், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 வீடுகள் மீதும் இந்த ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீசாலை மேற்கு: வங்களா வீதியிலுள்ள வீடொன்றில் புகுந்த கும்பல், அங்கிருந்த பொருட்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளது. மீசாலை தட்டான் குளம்:  இங்குள்ள இரண்டு வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதில் ஒரு வீடு முற்றாகத் தீக்கிரையாகியுள்ளதுடன், ஒரு மினிபஸ் (Minibus) மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளும் எரிக்கப்பட்டுள்ளன. மீசாலை வடக்கு: ஞானவைரவர் வீதியிலுள்ள வீடொன்றில் புகுந்த குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது அங்கிருந்த இளைஞர்…

மேலும் படிக்க