தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ்ப்பாண த்தில் சட்டவிரோத பொருட்க ளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கட்டுவன் முனியப்பர் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வைத்து குறித்த மூவரும் நேற்றையதினம் (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது ஒருவரிடமிருந்து வாளும், மற்றைய இருவரிடமிருந்து போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.போதைப்பொருளுடன் கைதான இருவரில் ஒருவரிடமிருந்து 2 கிராம் 340 மில்லிகிராம் ஐஸும், மற்றையவரிடமிருந்து 2 கிராம் 220 மில்லிகிராம் ஐஸும் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சுன்னாகம் காவல் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் இயங்கும் காவல்துறை குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. விசாரணைகளின் பின்னர் கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அன்மைச் செய்தி

Leave a Comment