இலங்கை செய்தி. 

இலங்கை உள்ளூராட்சிப் பிரதிநிதிகளுக்கு இந்தியாவில் விசேட பயிற்சி

இலங்கை தமிழ் மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் சமூகங்களின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் 30 பேருடனான இரண்டாவது குழுவினர் ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் நடைபெற்ற 10 நாள் ஆளுமை விருத்தி செயல் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

இந்த செயல் திட்டமானது தெலுங்கானா மற்றும் தமிழ் நாடு ஆகிய இரு மாநிலங்களில் மார்ச் 9-18 வரை நடைபெற்றது. இக்குழுவில் தமிழ் முற்போக்கு கூட்டணியை சேர்ந்த 20 பிரதிநிதிகளும் இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த 10 பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட்டிருந்தனர். குறித்த நிலையத்தில் 2026 ஜனவரி 19-29 வரை முதல் தொகுதி 20 உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் ஆளுமை விருத்தி செயல்நெறியில் பங்கேற்றிருந்தனர்.

அன்மைச் செய்தி

Leave a Comment