இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கை மக்களுக்கு காவல்துறை விடுத்த முக்கிய அறிவிப்பு

பத்தரமுல்ல, இசுஹுருபாய கட்டடத்தின் 17ஆவது மாடியில் அமைந்துள்ள காவல்துறை. தலைமையகத்தினால் வழங்கப்படும் காவல்துறை.  அனுமதி அறிக்கை தரவு அமைப்பில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அனுமதி சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தல், அறிக்கைகளை கோருதல் மற்றும் சான்றிதழ்களை அச்சிடுதல் ஆகிய நடவடிக்கைகள் தரவு அமைப்பொன்றின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. குறித்த தரவு அமைப்பு நேற்று நண்பகல் முதல் செயலிழந்துள்ளதாக  காவல்துறை. தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அத்துடன், தரவு அமைப்பை மீளச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குறித்த தரவு அமைப்பு மீள செயல்படும் வரை காவல்துறை. அனுமதி அறிக்கைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தரவு அமைப்பு மீளவும் இயங்கியவதுடன் பொலிஸ் அனுமதி அறிக்கைகளுக்கான விண்ணப்பங்களை மீண்டும் சமர்ப்பிக்க முடியும் என பொ

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வடக்கு மாகாணத்தி லுள்ள மருத்துவ மனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நன்கொடை

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு குருதி சுத்திகரிப்பு இயந்திரம் என்பது ஒரு மருத்துவ உபகரணம் மாத்திரமல்ல, தொடர்ந்தும் வாழ்வதற்கான ஒரு வாய்ப்பாகும். அந்த வாய்ப்பை வடக்கு மாகாண மக்களுக்கு, குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் வாழும் நோயாளிகளுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 83 ஆயிரத்து 544 கனேடிய டொலர் பெறுமதியான ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்படுவது மிகவும் பெறுமதியான மனிதநேயப் பங்களிப்பாகும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இந்த இயந்திரங்கள் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைகளுக்கும், மல்லாவி ஆதார மருத்துவமனைக்கும் வழங்கப்படவுள்ளதுடன், அவற்றுக்கான வரித்தீர்வாக வடக்கு மாகாண சபையால் 3.5 மில்லியன் இலங்கை ரூபா வழங்கப்பட்டுள்ளது செந்தில்குமரன் நிவாரண நிறுவனமும் வடக்கு மாகாண சபையும் இணைந்து வடக்கு மாகாண மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு நேற்று(20.08.2026)…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லை- கிளிநொச்சிக்கு பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்களை நிறுவுக – ரவிகரன்

இலங்கையிலேயே பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் இல்லாத மாவட்டங்களாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களே காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த இரு மாவட்டங்களுக்கும் தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் நிறுவப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கென தனியான பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகம் நிறுவப்படவேண்டும்இலங்கையிலேயே பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகம் இல்லாத இரண்டு மாவட்டங்கள் முல்லைத்தீவு, கிளிநொச்சி தான். 2026 ஜனவரிமாதத்தின்படியான தரவுகளின்படி முல்லைத்தீவு இணைப்பு மாவட்டத்தில் 8500 குடும்பங்களுக்கு நீர் கொடுக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்தும் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. வடமாகாணத்தில் இதுவரை இல்லாதுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் மேற்படி பிராந்திய முகாமையாளர் காரியாலயங்களை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தாதியர்களின் சீருடை விவகாரம் : அவசர சந்திப்பை நடத்திய எம்.பிக்கள்

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.இந்த சந்திப்பானது நேற்றைய தினம்(19.08.2026) இடம்பெற்றுள்ளது.இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் ஞா.சிறிநேசன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இந்த விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே குறிப்பிட்டுள்ளார். இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது கடந்த 09 ஆம் திகதி நாடு முழுவதும் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார். இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளையும் செப்டெம்பர் மூன்றாம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பஸிலுக்கு பிடியாணை மேலும் ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை நீடிப்பு!

முறையற்ற வகையில் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி மாத்தறையில் ஒன்றரை ஏக்கர் நிலத்தை வாங்கினார் எனக் கூறப்படும் வழக்கில், தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் பிணைத்தொகையைப் பறிமுதல் செய்யுமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸ்  நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, மாத்தறை பிரதான நீதவான் சதுர திஸாநாயக்க முன்னிலையில் நேற்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கில் மூன்றாவது பிரதிவாதியான பஸில் ராஜபக்ஷ, நீதிமன்றம் ஏற்கத்தக்க மருத்துவ அறிக்கையைச் சமர்ப்பிக்காமல் தொடர்ந்து மன்றில் ஆஜராகாமல் இருந்து வருகின்றார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அவரது பிணைக்குப் பிணையாளர்களாகக் கையொப்பமிட்ட மூவருக்கும் அபராதம் விதித்த நீதிவான், அதனைச் செலுத்தத் தவறினால் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டார். அத்துடன், பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை எதிர்வரும் ஒக்டோபர்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கையில் இருந்து பணப் பரிமாற்றம் செய்வது தொடர்பில் கடுமையாகும் சட்டம்

இலங்கையின் 2017ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தைத் திருத்துவதற்கு அமைச்சரவை கொள்கை ரீதியான அனுமதியை வழங்கியுள்ளது அதற்கமைய, இலங்கையில் இருந்து அங்கீகரிக்கப்படாத முறையில் பணப் பரிமாற்றம் செய்வது குற்றவியல் குற்றமாக மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்வைக்கப்பட்ட இந்த திருத்தத்தின் கீழ், பொருட்களை இறக்குமதி செய்வதற்கான முற்பணமாக வெளிநாடுகளுக்குப் பணத்தை அனுப்பிவிட்டு, நியாயமான காலப்பகுதிக்குள் அதற்கேற்ற பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். அதனை செய்யத் தவறும் ஒருவரின் பரிவர்த்தனையானது, அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டுச் செலாவணிப் பரிமாற்றமாகக் கருதப்படலாம். தற்போதைய சட்டத்திற்கமைய, அங்கீகரிக்கப்படாத முறையிலான பண அனுப்பீட்டின் பெறுமதிக்குச் சமமான நிதிக் தண்டப்பணத்தை இலங்கை மத்திய வங்கியால் இலங்கை ரூபாயில்ல் விதிக்க முடியும். எனினும் அவ்வாறான பரிவர்த்தனைகள் தற்போது வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் குற்றவியல் குற்றங்களாக வகைப்படுத்தப்படவில்லை. இதனால் குற்றவியல் வழக்குத் தொடர்வதற்கான சட்ட அடிப்படையானது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

தமிழீழ விடுதலை புலிகள் பயிற்சி முகாம் தொடர்பான போலியான தகவல்களை சந்தேகநபர் கைது

தமிழீழ விடுதலை புலிகள் (LTTE) பயிற்சி முகாம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத மற்றும் போலியான தகவல்களை சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (18) இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.   சமூக வலைத்தளம் வாயிலாக காணொளி ஒன்றை வெளியிட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் LTTE பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தப்படாத பொய்த் தகவல்களைப் பரப்பியமை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பெல்லன்வில, பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவராவார். சந்தேகநபரால் பரப்பப்பட்ட அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை அல்லது அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். சந்தேகநபர் இன்று கொழும்பு முதன்மை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இலங்கை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காணாமல் ஆக்கப் பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு பூரண ஆதரவு – செல்வம் எம்.பி. அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்  மாநாட்டிற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழீழ விடுதலை இயக்கமும் பூரண ஆதரவை வழங்குவதோடு, அவர்களுடன் தோளோடு தோள் நிற்கின்ற ஒரு செயல்பாட்டை  முன்னெடுக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், இராணுவத்திடம் கண் முன்னே ஒப்படைக்கப்பட்ட கணவன்,குழந்தைகள்,உறவுகள் , காணாமல் போயுள்ள நிலையில் காணாமல் போயிருக்கும் உறவுகளைத் தேடி கொண்டிருக்கின்ற காணாமல் போன உறவுகளின் தாய்மார்கள்  எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில்  மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறார்கள். உண்மையில் இந்த உறவுகளின் போராட்டங்கள் அவர்களுடைய தேடுதலுக்கான நடவடிக்கைகள் தான் இன்றைக்கும் எங்களுடைய தேசத்திலே உலக நாடுகளில் பேசும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அதிகாரப் போட்டி களுக்கு இடமளிக் காமல்,செயற்பட வேண்டும் வடக்கு ஆளுநர்

வடக்கு மாகாணத்தின் மக்கள் தேவைகளை திறம்பட நிறைவேற்றுவதற்கு மாகாண நிர்வாகத்தின் ஒவ்வொரு அங்கமும் ஒரே திசையிலும் ஒரே நோக்கத்துடனும் செயற்பட வேண்டும். தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள், தன்முனைப்பு மற்றும் அதிகாரப் போட்டிகளுக்கு இடமளிக்காமல், அனைவரும் மக்களுக்காக ஒரே அணியாகச் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் ஆளணி மற்றும் பயிற்சிப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிர்வாகச் சட்டம் தொடர்பான பயிற்சிப் பட்டறை இன்று (18.08.2026) செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் நா.வேதநாயகன் உரையாற்றினார். நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், மாகாண நிர்வாகத்தின் கட்டமைப்பு அபிவிருத்தி, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் வரவு–செலவுத் திட்ட முகாமைத்துவம் போன்ற பல விடயங்கள் முக்கியமானவையாக இருந்தாலும், அவற்றைச் சரியாக முன்னெடுப்பதற்கான அடிப்படை…

மேலும் படிக்க