பொதுவான செய்திகள் 

கிளியில் வீதி சோதனை: 30-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள், 20-க்கும் மேற்பட்ட டிப்பர்கள் பறிமுதல்

கிளிநொச்சி பகுதியில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட விசேட அதிரடி வீதி சோதனை நடவடிக்கையின் போது, 30-க்கும் அதிகமான அதிவேக மோட்டார் சைக்கிள்களும், 20-க்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் ஏனைய வாகனங்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக பயணிக்கும் மோட்டார் சைக்கிள்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதி விபத்துகளை குறைத்து, பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சோதனை நடவடிக்கையின் போது பல்வேறு போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. அவற்றில் இலக்கத் தகடுகள் இல்லாமை, உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களை இயக்குதல், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடங்குகின்றன. இதனையடுத்து குறித்த வாகனங்கள் அனைத்தும் சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற விதிமீறல்கள்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கத்தி வெட்டு தாக்குத லுக்கு உள்ளான ஆணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து ள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு கத்தி வெட்டு தாக்குதலுக்கு உள்ளான ஆணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் 39 வயதுடைய ரகு துஷ்யந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணை தகவலின்படி, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இந்த கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, இந்த தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபர் முன்னதாக வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்தார். அப்போது, அவரை எதிர்வரும் 07 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கொழும் பிலிருந்து_பதுளை நோக்கி பயணித்த பேருந்து விபத்து

கொழும்பிலிருந்து_பதுளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளானது. தொடருந்து  தியத்தலாவ தொடருந்து கடவைக்கு (Railway Crossing) அருகே இன்று அதிகாலை (ஜூன் 27) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்து சுமார் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் 42 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் (இவர்களில் 36 ஆண்களும் 6 பெண்களும் அடங்குவர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

கேப்பாப்பிலவு மக்களின் பூர்வீகக் காணிகள் விடுவிக்கப் பட வேண்டும்; ரவிகரன் எம்.பி

கேப்பாப்பிலவு மக்களின் பூர்வீகக் காணிகள் விடுவிக்கப்படவேண்டும்; காணி விடுவிப்பிற்காய் போராடும் மக்களோடு எப்போதும் துணைநிற்பேன் – ரவிகரன் எம்.பி இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்களின் பூர்வீக காணிகள் விடுவிக்கப்படவே வேண்டும் என வலியுறுத்திய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமது பூர்வீகக் காணி விடுவிப்பிற்காய் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கேப்பாப்பிலவு மக்களுக்காக எப்போதும் துணைநிற்பேன் எனவும் தெரிவித்துள்ளார். இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, கேப்பாப்பிலவு மக்கள் தொடர் போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் நான்காவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு மக்களைீநாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் 27.06.2026இன்று நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடினார். இவ்வாறு அந்த மக்களுடன் கலந்துரையாடி நிலமைகளைக் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியாவில் சுகாதார பரிசோதகர்கள் சுற்றிவளைப்பு: 580 லீற்றர் சீனிப் பாணி மீட்பு

வவுனியாவில் சுகாதார பரிசோதகர்கள் சுற்றிவளைப்பு: வீடு ஒன்றில் இருந்து 580 லீற்றர் சீனிப் பாணி மீட்பு வவுனியாவில் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது வீடு ஒன்றில் இருந்து விற்பனை செய்வதற்காக தயார்படுத்தப்பட்ட 580 லீற்றா சீனிப் பாணி கைப்பற்றப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். வவுனியா, வேப்பங்குளம், 8 ஆம் ஒழுங்கை, ஊர்மிளா கோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினை வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் சுரேந்திரன் அவர்களின் ஆலோசனையின் கீழ் சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர் மேஜெயா அவர்களின் வழிப்படுத்தலில் நெளுக்குளம் பொது சுகாதார பரிசோதகர் ம.அன்ரன் தலைமையில் பூவரசன்குளம் பொது சுகாதார பரிசோதகர் டிலுக்சன், கூமாங்குளம் பொது சுகாதார பரிசோதகர் பவிந்திரன், சாஸ்திரி கூழாங்குளம் பொது சுகாதார பரிசோதகர் துவாரகன் ஆகியோர் இணைந்து பொலிசாரின உதவியுடன…

மேலும் படிக்க
தமிழ்நாடு இந்தியா செய்திகள் பொதுவான செய்திகள் 

பிரபல நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் மாரடைப்பு ஏற்பட்டு (ஜூன் 27) காலமானார்

பிரபல நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் இன்று (ஜூன் 27) காலை காலமானார். அவருக்கு வயது 73. தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் பாக்யராஜ். இவர், 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனித்துவமான கதைக்களம் மற்றும் நகைச்சுவையுடன் கூடிய குடும்பத் திரைப்படங்களை உருவாக்குவதில் மிகவும் பிரபலமானவர். கோவாவில் நடந்த நடிகை குஷ்புவின் மகள் அவந்திகாவின் திருமணத்தில் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு தான் சென்னை திரும்பி உள்ளார் பாக்யராஜ். இன்று காலையில் வழக்கம் போல் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது நெஞ்சு வலிப்பதாக கூற உடனடியாக அருகில் உள்ளவர்கள் வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டுள்ளனர். இதையடுத்து சென்னையில் உள்ள சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

குற்றவாளி நாட்டை விட்டு தப்ப கடவுச்சீட்டு பெற்றுக் கொடுத்த அதிகாரி கைது

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினல் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் உதவி கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றிய குறித்த அதிகாரி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்காக போலியான கடவுச்சீட்டைத் தயாரித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக, மற்றொருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டைத் தயாரித்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் நேற்று மாலை (26) கைது செய்யப்பட்டார். மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவால் நடத்தப்பட்டு வரும் ஒரு விசாரணை தொடர்பாக கைதான கண்டியைச் சேர்ந்த, 41 வயதான குறித்த சந்தேக நபர் ஜனாதிபதி செயலகத்தின் பாராளுமன்ற மற்றும் அமைச்சரவைப் பிரிவில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஒட்டு சுட்டான் தட்டாமலை இணைப்பு வீதியின் சீரமைப்பு பணிகள் ஆரம்பம்

ரவிகரன் எம்.பியின் தொடர் கோரிக்கை; ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் ஒட்டுசுட்டான் தட்டாமலை இணைப்பு வீதியின் தாழ்நிலப்பகுதியின் சீரமைப்புபணிகள் ஆரம்பம் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, ஏம்பல் குளத்து நீரால் மூடப்படும் தட்டாமலை, ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதியின் தாழ்வாக உள்ள பகுதியை சீரமைக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தநிலையில், குறித்த பகுதியை நீர் ஓடும் கட்டுமானங்கள் (பெட்டி மதகுகள்) உடனான உயர்த்தப்பட்ட பாதையாக சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வடக்கு மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டில், இரண்டு கோடியே ஒருஇலட்சத்து அறுபத்தொன்பதாயிரத்து அறுநூற்று நாற்பதுரூபாய் என்னும் ஒப்பந்தத் தொகையில் முல்லைத்தீவு மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினூடாக இவ்வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இவ்வாறு முன்னெடுக்கப்பட்டுவரும் சீரமைப்புப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், ஒட்டுசுட்டான்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

TIN பெற அவசரம் இல்லை: நீண்ட வரிசை குறித்து யாழ். அரச அதிபர்

யாழ்ப்பாணத்தில் வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெறுவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை தொடர்பாக, யாழ்ப்பாண அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் விளக்கமளித்துள்ளார். காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் அண்மைய நாட்களாக நிலவும் நெரிசலைத் தொடர்ந்து, அரச அதிபர் நேற்று பிராந்திய ஆணையாளருடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார். இதனையடுத்து பொதுமக்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், TIN இலக்கத்தை ஜூன் 30ஆம் திகதிக்குள் கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எந்தக் காலக்கெடுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், TIN பெறுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எந்தவித கட்டணமும் அறவிடுவதில்லை என்றும், இதற்காக பணம் பெறுவதோ அல்லது வழங்குவதோ சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே TIN பதிவு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மலேசியா விலிருந்து நாடு கடத்தப்பட்ட முக்கிய குற்றவாளி

பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரின் துப்பாக்கிதாரியாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் “மாட்டியா” என அழைக்கப்படும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் தங்கியிருந்த அவர், அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதையடுத்து, நேற்று (25) நள்ளிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோதே குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் ஆரம்பக்கட்ட வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 42 வயதுடைய சந்தேகநபர் கொட்டுகொட, யாகொடமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், அவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தல் (Interpol Red Notice)  பிறப்பிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மீது, 2022 ஆம்…

மேலும் படிக்க