சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மாவீரர் லெப்டினன் கேணல் அசோக் குமாரின் தந்தை இயற்கை எய்தினர்.

யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் யோகராசா. அவர்கள் 01-06-2026 [திங்கட்கிழமை] அன்று இறைபதம் அடைந்தார். அன்னாரின் ஈமைக் கிரியைகள் 04-06-2026 வியாழக்கிழமை 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைக்காக நீர்வேலி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். குறைப்பு. மாவீரர் லெப்டினன் கேணல் அசோக் குமாரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணியில் மனிதப் புதைகுழியி லிருந்து 262 என்புகள் அடையாளம்!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து நேற்று அடையாளம் காணப்பட்ட என்புத்தொகுதியின் கழுத்துப் பகுதியிலிருந்து நாணயக்குற்றி வடிவிலான பொருள் ஒன்று கண்டறியப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனுடன், செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித என்புத்தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 262ஆக அதிகரித்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 13ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றன. இது தொடர்பில் செம்மணி புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், இதன்போது, புதிதாக என்புத்தொகுதியொன்று அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டது. மேலதிகமாக மேலும் மூன்று மனித என்புத்தொகுதிகள் தென்பட்ட போதிலும், அவை இன்னும் சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்படவில்லை. அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புத்தொகுதியின் கழுத்துப் பகுதியிலிருந்து கண்டறியப்பட்ட நாணயக்குற்றி வடிவிலான பொருளானது 97ஆவது சான்றுப் பொருளாக இலக்கமிடப்பட்டு,…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

உதவி செய்த மக்களுக்கு சிவாஜிலிங்கம் உருக்கமான நன்றி!

தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், மருத்துவச் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தமிழ் மக்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், அவசர அறுவைச் சிகிச்சைக்காக (சத்திர சிகிச்சை) தமிழ் மக்களிடம் ஊடகங்கள் வாயிலாக அவர் உதவி கோரியிருந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது முதற்கட்ட அறுவைச் சிகிச்சை மற்றும் ஏனைய மருத்துவச் செலவுகளுக்குத் தேவையான நிதி குறுகிய காலத்திற்குள் திரட்டப்பட்டது. நிதி உதவி கிடைத்ததைத் தொடர்ந்து, ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு நன்றி தெரிவித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: எஞ்சிய நிதி சமூக நலனுக்கும் மாவீரர் குடும்பங்களுக்கும்! “எனது உடல்நிலை குறித்து அக்கறை கொண்டு, சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தமிழ் மக்களுக்கு எனது…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பௌத்த துறவியால் துஷ்பிரயோகத்திற் குள்ளான சிறுமிக்கு நீதிகோரி முல்லை யில் கவனயீர்ப்பு நடவடிக்கை;

பௌத்த துறவியால் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமிக்கு நீதிகோரி முல்லையில் கவனயீர்ப்பு நடவடிக்கை; ரவிகரன் எம்.பி பங்கேற்பு அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினரால் 29.05.2026இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தார். அத்தோடு இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் சிறுமியின் கண்ணீர் மௌனமாகாது, மத ஆடையின் பின்னால் மறையும் குற்றங்களுக்கு நீதி வேண்டும், குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டனை வேண்டும், சிறார்களைக் காப்போம் குற்றங்களை நிறுத்துவோம், சிறார்களின் பாதுகாப்பு எங்கள் உரிமை உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு அமைதிவழியில் கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

படகுகள் கவிழ்ந்து தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் காணவில்லை.

யாழ்ப்பாணம் – வடமராட்சி கடற்பரப்பில் இரண்டு படகுகள் கவிழ்ந்து தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணி இன்றைய தினமும் (வெள்ளிக்கிழமை)   தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. காணாமல் போனவர்களை மீட்பதற்காகப் பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியிலிருந்து சுமார் 10 படகுகளும், முனை பகுதியிலிருந்து 10-க்கும் மேற்பட்ட படகுகளும் என 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சக மீனவர்கள் இன்று அதிகாலை முதலே கடலுக்குச் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, நேற்று முன்தினம் புதன்கிழமை (27) கடலுக்குச் சென்ற இவர்களைத் தேடி சக மீனவர்கள் சென்றிருந்த போதிலும், பலத்த காற்று மற்றும் கடற்கொந்தளிப்பு காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தனர். இந்த நிலையில், இன்று வானிலை சற்றே சாதகமாக உள்ளதால் தேடுதல் பணி முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பருத்தித்துறை – முனை மற்றும் கற்கோவளம்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பாலியல் குற்றவாளி களை காப்பாற்றாதே” – நீதி கேட்டு கொந்த ளித்த வடகிழக்கு பெண்கள்

அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, ‘வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு’ அமைப்பினால் இன்று மட்டக்கப்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன்படி, மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய பெண்கள் ஊர்வலமாக சென்று படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் “பிக்குவினால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அனுராதபுரம் சிறுமிக்கு நீதி வழங்குக…” பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதியை நிலைநாட்டுங்கள்”மதத்தின் பெயரால் பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டாம், சட்டத்தினால் மறுக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு பிணை கிடையாது போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட  பதாதைகளை ஏந்தியவாறு தங்களது பலத்த எதிர்ப்பை வெளியிட்டனர். இச்சம்பவம் தொடர்பில்  ஜனாதிபதி மற்றும் நீதியமைச்சர், மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவர்கள் உரிய அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கடலில் தத்தளித்த தமிழக கடற் றொழிலாளர் மீட்பு

தற்போது நிலவும் கடும் காற்றுக் காரணமாக திசைமாறி வந்து நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக கடற்றொழிலாளர் ஒருவர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தமிழகம் இராமேஸ்வரம் இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டு நெடுந்தீவு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.  இதே நேரம் இன்று (23) மாலை 4.30 மணியளவில் குறித்த மீன்பிடியாளர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்ட நிலையில் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் நாளை (24) குறித்த தமிழக கடற்றொழிலாளரை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் நெடுந்தீவு காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

அநுரவின் வாக்குறுதிகள் எங்கே? மயிலிட்டியில் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக இன்றைய தினம் ஐந்தாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது. யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் , அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது. இந்நிலையில் தமது 651 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த அர்ச்சுனா எம்.பி மன்னிப்பு கேட்க வேண்டும் டாக்டர் ராமதாஸ்

ஆயுதம் இருந்திருந்தால் சுட்டிருப்பேன்’ எனப் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்துப் பேசியிருப்பது ஜனநாயக மரபுகளுக்கு முற்றிலும் எதிரானது என்றும், இதற்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உடனடியாகப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் தங்களின் அரசியல் உரிமை மற்றும் வாழ்வுரிமைக்காக 75 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேரிழப்புகளுடன் விடுதலைப் போராட்டத்தை நடத்தினார்கள் என்றும், அந்தப் போராட்டக் காலங்களில் தமிழினம் பின்னடைவைச் சந்தித்ததற்குச் சகோதர யுத்தங்களும் ஒற்றுமையின்மையுமே முதன்மைக் காரணம் என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் இத்தகைய சூழலில், பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைக் குறிவைத்து, ‘ஆயுதம் இருந்திருந்தால் சுட்டிருப்பேன்’…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜி ற்கு சபையில் அஞ்சலி செலுத்தினார் – ரவிகரன் எம்.பி

சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி செலுத்தினார் – ரவிகரன் எம்.பி விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்ததளபதியும் சமர்க்களநாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,எமது ஈழ விடுதலைப்போராட்டத்தின் சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் எமை விட்டுப் பிரிந்து 18ஆண்டுகள் கடந்திருக்கின்றன. கந்தையா பாலசேகரம் என்ற இயற்பெயரையுடைய சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியைச்சேர்ந்தவர். உலகப் போரியல் வல்லுநர்களே கண்டு வியந்த சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு இந்த உயரிய சபையிலே சிரம் தாழ்த்தி எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் – என்றார்.

மேலும் படிக்க