சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

புளியங்கூடலில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள்

2009 முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழின இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும்

மே 18 – “தமிழின அழிப்பு நாள்” வாரத்தின் 5 ஆம் நாளான இன்று  வேலணை – புளியங்கூடலில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட நினைவிடத்தில் இறந்த உறவுகளை நினைவுகூர்ந்து சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கபட்டது.

தீவக நினைவேந்தல் குழுவின் ஏற்பட்டில் புளியங்கூடல் சந்தியில்  பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட அரங்கில் இன்று (16) இரவு 7.00 மணியளவில்   முள்ளிவாய்க்காலின் வலிகளை இறுதிவரை அனுபவித்தவரும் மாவீரரது சகோதரனுமான சண்முகலிங்கம் அகஷ்கரன் அவர்களால் ஈகச்சுடர் ஏற்றபட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.

2009 இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள்

மற்றும் முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நாட்களில் மக்கள் எதிர்கொண்ட பட்டினி மற்றும் மனிதாபிமான அவலங்களும் நினைவுகூரப்பட்டதுடன் திடலில் நாட்டிவைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தீபங்கள் கூடி நின்ற மக்களால் ஏற்றப்பட்டதுடன் அழிப்பின் அடையாள சின்னமான படத்திற்கும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது

அத்துடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் நினைவுகூரலில் கலந்து அஞ்சலித்த பொதுமக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அன்மைச் செய்தி

Leave a Comment