இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பயங்கர வாதத் தடைச்சட்டம் விரைவில் நீக்கப்படும்! ஹர்ஷன நாணயக்கார

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) விரைவில் நீக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், பல தசாப்த கால பழமையான சட்டத்தை ஒழிப்பதற்கான தீர்க்கமான நடவடிக்கையாக புதிய சட்டமூலம் ஏற்கனவே அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒழிக்கப்படும் என அமைச்சர் உறுதிப்படுத்தினார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் இன்றி நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் சம்பந்தப்பட்ட மேல் நீதிமன்றத்தின் ஊடாகப் பிணை கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் விளக்கமளித்தார். பிணை வழங்குவது அரசாங்கத்தின் கொள்கை முடிவு அல்ல என்றும், இதுபோன்ற விவகாரங்களில் நீதித்துறை சுதந்திரமாகச் செயற்படுகிறது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

குவைத்துக்கான ஸ்ரீலங்கன் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தம்!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத் நாட்டிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது இதன்படி, நேற்று (20) முதல் ஜூலை 26 ஆம் திகதி வரை குவைத்திற்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 1979 என்ற அவசர தொலைபேசி இலக்கம் மூலமாகவோ அல்லது +94 11 777 1979 அல்லது +94 74 444 1979 ஆகிய வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியோ பெற்றுக்கொள்ள முடியும். அல்லது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். இதேவேளைமத்திய கிழக்கு பிராந்தியத்தில் திடீரென தீவிரமடைந்துள்ள பாதுகாப்புப் பதற்றம் காரணமாக, முக்கிய நகரங்களுக்கான தனது விமான சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,000 ஐக் கடந்துள்ளது.

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,000 ஐக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க இந்த ஆண்டின் நேற்று வரையான காலப்பகுதியில் 76,044 டெங்கு நோயாளர்கள்  இனங்காணப்பட்டுள்ளதுடன் 53 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு விடுத்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த  ஜூலை மாதத்தின் முதல் 19 நாட்களில் மாத்திரம் 20,666 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த  பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் இனங் காணப்பட்டுள்ள  னர்.கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம்   15,910 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அதற்கு அடுத்ததாக கொழும்பு மாவட்டத்தில் 15,110 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.  ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5330 பேரும், கண்டியில் 5111 பேரும், களுத்துறையில் 5010 பேரும் இரத்தினபுரியில் 4295 பேரும், காலியில் 4260 பேரும் பதிவாகியுள்ளதாக அந்தப்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அரசாங்கத்தை வீழ்த்து வதற்கான செயற் பாடுகளில் ஈடுபடப் போவதில்லை மனோகணேசன்

ஜனநாயக ரீதியில் தேர்தலொன்று நடத்தப்படும் வரைக்கும் இந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான செயற்பாடுகளில் ஈடுபடப்போவதில்லை என்றும் தடையின்றி அரசாங்கத்தின் இப்பயணம் தொடர்வதற்கு வழிவிடுவதாகவும்  தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே,அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்ததாவது; தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் மற்றும் பாரளுமன்ற நடவடிக்கைகள் தொடரட்டும்.  எதிர்க்கட்சிகள் என்ற ரீதியில், இந்த அரசாங்கத்தை வீழ்த்தவோ அல்லது  எதிராகவோ செயற்படப் போவதில்லை. அரசாங்கம் தடையின்றி அதன் பயணத்தைத் தொடரட்டும்.  தேர்தலொன்று நடத்தப்படும் வரை   எவ்வித முட்டுக் கட்டைகளும் போடப்படமாட்டாது. அரசாங்கங்கள் வருவதும் போவதும் இயல்பான ஒன்று. இந்நிலையில்,நாடு தற்போதைய நிலையில் சுமுகமாக முன்னோக்கிச் செல்வதற்கே விரும்புகிறோம்.உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் தீர்ப்பின் மூலம் மட்டுமே அரசியல் மாற்றங்கள் நிகழ…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பாதிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்க விசேட அமைச் சரவைப் பத்திரம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் பாதிக்கப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு மற்றும் பிற நிவாரணங்களை ஆராய்வதற்கு விசேட  குழு நியமிக்கப்படவுள்ளது.இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.இவ்வாறான சம்பவங்களின்போது பாதிக்கப்படும் அரசாங்க அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுவது வழமையானது.எனினும் நீர்கொழும்பு  சம்பவத்துக்காக மேலதிக இழப்பீடு மற்றும்  நிவாரணங்கள்  வழங்கும் நோக்கிலேயே,   விசேட குழு  நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்  குறிப்பிட்டார்.இக்குழு முன்வைக்கும் பரிந்துரைகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. நீர்கொழும்பு  சிறைச்சாலையில் அண்மையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 10 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்தனர். உயிரிழந்த அதிகாரிகளுக்கு   பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களின் இறுதிச்சடங்கு செலவுகளுக்காக ஏற்கனவே தலா 05 இலட்சம் ரூபா  வழங்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் காலத்தில் கூடுதலாக ஒவ்வொரு அதிகாரிக்கும் தலா 05 இலட்சம் ரூபா  வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

முட்டை விலைகள் உயரும் முட்டை உற்பத்தியா ளர்கள் சங்கம்

இலங்கையில் இன்று முதல் முட்டை விலைகள் உயரும் என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு வெள்ளை முட்டையின் சில்லறை விலை ரூ. 41 ஆகவும், ஒரு சிவப்பு முட்டையின் விலை ரூ. 42 ஆகவும் அதிகரிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை குளியாபிட்டியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இந்த அறிவிப்பை வெளியிட்டதோடு, இந்த விலை உயர்வுக்கு அரசாங்கத்தின் தவறான கொள்கைகளே காரணம் என்றும் குற்றம் சாட்டினார். நாட்டில் மக்காச்சோள இறக்குமதி முழுமையாக நிறுத்தப்பட்டதால் கோழித் தீவனத்திற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உள்ளூர் மக்காச்சோள உற்பத்தியும் முட்டைத் தொழிலின் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை. தீவனப் பற்றாக்குறையால் உற்பத்தியாளர்கள் அரிசி உள்ளிட்ட மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இது கோழிகளின் ஆரோக்கியத்தையும் செரிமானத்தையும் பாதித்து, முட்டை உற்பத்தியில் 20 முதல்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை; எச்சரிக்கை

இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அம்பாறை, மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொணராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் பகல் வேளைகளில் வெப்ப குறிகாட்டி (மனித உடல் உணரும் வெப்ப அளவு) ‘அவதானம் செலுத்தும் மட்டத்தில்’ காணப்படுமென திணணக்களம் அறிவித்துள்ளது. எனவே உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தென்மேற்கு பருவக்காற்று நிலை காரணமாக, நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மாகாணங்களிலும் இரத்தினபுரி, அம்பாந்தோட்டை,…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

2 கோடிக்கு மேற்பட்ட ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் தம்பதியினர் கைது

கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் ஆசிரியை மற்றும் அவரது கணவர் ஆகியோர் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் தொகையுடன் மாதம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு வடக்கு பிராந்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின் போதே இந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, சந்தேகநபரான ஆண்டமிருந்து 1 கிலோ 6 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், பெண்ணிடமிருந்து 149 கிராம் 150 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளின் போது, இவர்கள் ‘மொதர மயூர’ என்ற பிரபல போதைப்பொருள் கடத்தல்காரனின் கூட்டாளிகள் என்பது தெரியவந்துள்ளது. அத்துடன், இந்த தம்பதியினர் நீண்டகாலமாக இப்போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமையும் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது. இருப்பினும், சந்தேகநபரான பெண் பொலிஸ் விசாரணைகளின் போது, தான் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் சட்டப் பட்டப்படிப்பு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

குருநாகல் கார் தீ விபத்து சமூக ஊடக வதந்திகளை நம்ப வேண்டாம்

சமூக ஊடகங்களில் கடும் விவாதத்திற்கு உள்ளாகி வரும், தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் காரின் அருகே சிறுவன் ஒருவன் நடந்து செல்லும் காணொளிக் காட்சி தொடர்பாக, பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு அது தொடர்பான விளக்கம் ஒன்றை வழங்கியுள்ளது. சிறுவன் தான் காருக்குத் தீ வைத்ததாகக் குறிப்பிட்டாலும், விசாரணையின் போது நேரில் பார்த்த சாட்சியோ அல்லது வேறு ஆதாரமோ எதுவும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருநாகல் பொலிஸ் பிரிவுக்குச் சொந்தமான பாடசாலை வளாகத்திலேயே இந்தத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. பொலிஸாரின் அறிக்கைகளின்படி, பாடசாலை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 14 லட்சம் ரூபா பெறுமதியான கார் ஒன்று, ஜூலை 3 ஆம் திகதி தீக்கிரையானது. சுமார் 8 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் இந்தத் தீவைப்புக்குக் காரணம் என்று குருநாகல் பொலிஸ் நிலையத்தில் ஒரு புகாரும் செய்யப்பட்டிருந்தது. புகாரின்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

இன்றைய வானிலை.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை போன்ற மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் காரணமாக பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும். சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும். மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 – 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும். கடல் பிராந்தியங்களில் நீர்கொழும்பு தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு…

மேலும் படிக்க