இலங்கை செய்தி. 

பாராளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடும்

பாராளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் வைத்தியர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவுக் கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டதாகவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார். இதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவலங்களுக்கும், 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், 11.00 மணி முதல் 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ள்ளது. இதனைத் தொடர்ந்து 11.30 மணி முதல் 2.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

6 கிலோ குஷ் போதைப் பொருளுடன் வெளிநாட்டவர் கைது

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 6 கிலோ 180 கிராம் எடையுடைய குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 63 வயதுடைய பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். விமான நிலையத்தின் வருகைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, ​​இன்று (14) அதிகாலை வேளையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (PNB) விமான நிலையப் பிரிவு அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் தற்போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ​​தொம்பே – பரங்கொட பகுதியில் 9 கிலோ 128 கிராம் ‘கிறிஸ்டல் மெத்தாம்பேட்டமைன்’ (Ice) போதைப்பொருளுடன் 23 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (13) கைது செய்யப்பட்டார். கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் STF-இன்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

நாட்டில் டெங்கு பாதிப்பு 70,000ஐ நெருங்கியது; தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70,000 ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நேற்று (13) வரை நாட்டில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து, 69,951 ஆகப் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அத்துடன், கடந்த 12 ஆம் திகதி வரை பதிவாகியிருந்த மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68,672 ஆகும் என்பதுடன், நேற்று (13) ஒரு நாளில் மாத்திரம் 1,279 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த நோயாளர்களின் எண்ணிக்கை 33,127 ஆகக் குறிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 14,464 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 14,004 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதேவேளை, ஜூலை மாதத்தின் கடந்த 13…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

நீர்கொழும்பு வன்முறை மோதலில் மேலும் இரண்டு அதிகாரிகள் உயிரிழந்து ள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். நேற்றுமுன்தினம் (13) மற்றும் நேற்று (14) அதிகாலை வேளையில் குறித்த இரு அதிகாரிகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய சிறைச்சாலை அதிகாரிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் ஏற்கனவே 21 சிறைக்கைதிகள் உயிரிழந்திருந்த நிலையில், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை தற்போது 31 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த மோதலில் காயமடைந்த சில சிறைக்கைதிகளும் சிறைச்சாலை அதிகாரிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் தொடர்ந்து சிகிச்சை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

ஆயுதக் கிடங்கான சிறைச்சாலை சமையலறை! – சந்தேகநபர்கள் அடையாளம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும் சாட்சியங்களைப் பதிவு செய்து வருகின்றது. போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பில் கைதிகளின் இரு குழுக்களிடையே ஏற்பட்ட இந்த மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துரதிர்ஷ்டவசமாக, இச்சம்பவத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் தலைகளில் கொடூரமாகத் தாக்கப்பட்டமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு, ஆரம்பக்கட்ட நட்டஈடாக தலா 5 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலதிகமாக, தலா 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நட்டஈடு வழங்குவது குறித்துத் திணைக்களம் கவனம் செலுத்தி வருகின்றது என்று…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

கொழும்பு பல்கலைக்கழக நடவடிக்கைகள் இணைய வழியில்

நாட்டில் நிலவும் டெங்கு நோய் பரவல் நிலைமையை கவனத்திற் கொண்டு, கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை ஒரு வார காலத்திற்கு இணையவழியூடாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விடுத்துள்ள கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் முதல் இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என்றும், எனினும், பல்கலைக்கழகத்தை மூடுவது தொடர்பான எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, அனைத்து பல்கலைக்கழக ஊழியர்களும் வழமை போன்று கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக விடுதிகள் அனைத்தும் தொடர்ந்து திறந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடம், சட்ட பீடம், கல்வி பீடம் மற்றும் முகாமைத்துவ பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகளை ஜூலை 09 முதல் ஒரு வார காலத்திற்கு இணையவழியூடாக மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

ஆறு மாவட்டங்களுக்கு அதிக வெப்பநிலை எச்சரிக்கை

நாட்டின் ஆறு மாவட்டங்களில் நிலவவுள்ள அதிக வெப்பநிலை குறித்து முன்கூட்டிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை எட்டியுள்ளது. மனித உடலால் உணரப்படும் அளவில் இம்மாவட்டங்களில் வெப்பநிலை, உச்சந்தொடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் திறந்த வெளிகளில் பணிபுரிபவர்கள் அடிக்கடி போதுமான அளவில் நீரைப் பருகுமாறும், நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன வீட்டிலுள்ள முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் உடல்நிலை தொடர்பில் அதிக கவனம் செலுத்தம்படியும் திணைக்களம் கேட்டுள்ளது.அதேவேளை, சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என்றும், வெயிலில் அதிக அசௌகரியங்களை ஏற்படுத்தும் வேலைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகள் ஓகஸ்ட் முதல் வாரத்தில் வெளியீடு

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப் புள்ளிகள் ஓகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிடப்படுமென, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இந்த வருடத்தில் பல்கலைக்கழக அனுமதிக்காக மொத்தம் 92,043 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.இவ்விண்ணப்பங்கள், பரிசீலிக்கப்பட்ட பின்னர், 42,937 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் புதிய பட்டப்படிப்பு பாடநெறிகள் சிலவற்றை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மூலம் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கு 176,527 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மாணவர்களின் பாதுகாப்புக்கு அதிரடி முடிவு – முழுக் கை, முழுக் கால் ஆடைக்கு அனுமதி

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக, பள்ளி மாணவர்கள் கொசுக்கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிய கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை டெங்கு கொசுக்கடியிலிருந்து பாதுகாப்பதே இந்த புதிய நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். இதற்கென, தற்போதுள்ள பள்ளிச் சீருடையுடன் கூடுதலாக, மாணவர்களின் கைகள் மற்றும் கால்களை முழுமையாக மறைக்கக்கூடிய பொருத்தமான ஆடைகளை அணிய அனுமதிக்குமாறு அனைத்து பள்ளி முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், டெங்கு பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் கொசு விரட்டிகளை (Mosquito Repellents) மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வையும், கல்வியையும் வழங்குமாறு பள்ளி முதல்வர்களுக்கு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் ஆரோக்கியத்தையும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டில் மிதமான மழை பெய்யக்கூடும்.! இன்றைய வானிலை அறிவிப்பு

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்று (11) மிதமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மாகாணம் மற்றும் மொனராகலை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, மன்னார் மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் மின்னல் தாக்கம் மற்றும் பலத்த காற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க