இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சிறுவர்களி டையேயும் டெங்கு காய்ச்சல் தீவிரம் இலங்கை மருத்துவ சங்கம்

நாட்டில் தற்போது சிறுவர்களிடையேயும் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளமையால், 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் பெற்றோர் அலட்சியமாக பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் நளின் சி. கித்துள்வத்த வலியுறுத்தியுள்ளார். டெங்கு பரவல் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் நேற்று  (30) இலங்கை மருத்துவ சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், காய்ச்சல் ஏற்பட்டுள்ள காலப்பகுதியில் ஓய்வு மிக அவசியம். பரீட்சை, போட்டி நிகழ்வு உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி அவர்களை சிரமப்படுத்த வேண்டாம். இதனால் நோய் தீவிரமடையலாம். பொதுவாக காய்ச்சல், தலைவலி, கடுமையான உடல் வலி, வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் தென்படக்கூடும். 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் தகுதிவாய்ந்த வைத்தியரை நாடி இரத்த…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை

தமிழ்நாட்டில் 18 வயது நிறைவடையாத சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் போன்ற வாகனங்களை இயக்குவது சட்டப்படி கடுமையான குற்றமாகும் எனத் தமிழகக் பொலிஸார் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் பொருட்டும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனப் பொலிஸார் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸாரின் அறிவிப்பின்படி, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பொது வீதிகளில் வாகனம் ஓட்டிப் பிடிபட்டால், சிறுவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காக, அவர்களின் பெற்றோர் அல்லது வாகனத்தின் உரிமையாளருக்கு ரூ. 25,000 வரை (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்படுவதுடன், 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கவும் சட்டத்தில் இடமுண்டு. குறிப்பிட்ட வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் (Registration Certificate – RC Book) உடனடியாக இரத்து செய்யப்படும்.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

(30) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையில் மாற்றம்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பெற்றோல் 92: ரூ. 434 – ரூ. 20 ஆல் குறைப்பு – ரூ. ரூ. 414 ஒட்டோ டீசல்: ரூ. 407 – ரூ. 15 ஆல் குறைப்பு – ரூ. 382 அதன்படி, பெற்றோல் 92: ரூ. 414 பெற்றோல் 95: ரூ. 495 ஒட்டோ டீசல்: ரூ. 382 சுப்பர் டீசல்: ரூ. 478 மண்ணெண்ணெய்: ரூ. 285 இற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

நாடளாவிய ரீதியில் 7,188 இடங்களில் நுளம்பு பெருகும் அபாயம்!

நாடளாவிய ரீதியில் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 85,712 இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அவற்றில் 7,188 இடங்கள் நுளம்பு பெருக்க கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சுற்றுப்புறச்சூழலை வைத்திருந்த ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகம் அவர் கூறியுள்ளார். இதேவேளை, நேற்று முன்தினம் மாத்திரம் 986 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.அதற்கமைய, நாடளாவிய ரீதியில் இந்த ஆண்டு 53,159 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், டெங்கு நோயினால் இதுவரையில் 31 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

பஸ் கட்டண திருத்தம் நாளை (01) முதல் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்

பஸ் கட்டண திருத்தம் நாளை (01) முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  வருடாந்த பேருந்து கட்டண திருத்தக் கொள்கையின்படி, இம்முறை பேருந்து கட்டணம் திருத்தப்பட வேண்டிய விதம் குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இருப்பினும், இது தொடர்பாக இதுவரை பேருந்து சங்கங்களுடன் அவர்கள் எந்தவொரு கலந்துரையாடலையும் நடத்தவில்லை என்று பேருந்து சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. எவ்வாறாயினும், இம்முறை பேருந்து கட்டண திருத்தத்தில் எதிர்பார்க்கப்படும் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படாவிட்டால், நீதிமன்ற நடவடிக்கைகளை நாடவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார் வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணை ஏற்கனவே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அமைச்சரவையின் அனுமதி கிடைத்தவுடன் பேருந்து…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஐந்தாண்டு காலப் பகுதிக்குள் 13ஆயிரத்து 600 தாதியர்களை சேவையில் சுகாதார அமைச்சர்,

ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் 13ஆயிரத்து 600 தாதியர்களை சேவையில் இணைப்பதை இலக்காக கொண்டு புதிய செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு நேற்றுமுன்தினம் விஜயம் செய்த சுகாதார அமைச்சர், தெல்லிப்பழை வைத்தியசாலையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த 14 மாதங்களில் மாத்திரம் நாங்கள் சுமார் 5,000 தாதியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளோம். ஆனால், எல்லா இடங்களிலிருந்தும் வரும் ஒரே முறைப்பாடு என்னவென்றால், ‘தாதியர்கள் போதுமானதாக இல்லை’ என்பதுதான். கடந்த கொவிட் நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த பொருளாதாரப் பின்னடைவு காரணமாக, பெருமளவிலான தாதியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர். அவர்கள் எங்களது உத்தியோகத்தர் பட்டியலில் இருந்தாலும், தற்போது பணியில் இல்லை. இதுவே பற்றாக்குறைக்கு முக்கிய காரணம். 5,000 பேரை வேலைக்கு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கொழும் பிலிருந்து_பதுளை நோக்கி பயணித்த பேருந்து விபத்து

கொழும்பிலிருந்து_பதுளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளானது. தொடருந்து  தியத்தலாவ தொடருந்து கடவைக்கு (Railway Crossing) அருகே இன்று அதிகாலை (ஜூன் 27) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்து சுமார் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் 42 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் (இவர்களில் 36 ஆண்களும் 6 பெண்களும் அடங்குவர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

குற்றவாளி நாட்டை விட்டு தப்ப கடவுச்சீட்டு பெற்றுக் கொடுத்த அதிகாரி கைது

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினல் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் உதவி கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றிய குறித்த அதிகாரி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்காக போலியான கடவுச்சீட்டைத் தயாரித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக, மற்றொருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டைத் தயாரித்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் நேற்று மாலை (26) கைது செய்யப்பட்டார். மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவால் நடத்தப்பட்டு வரும் ஒரு விசாரணை தொடர்பாக கைதான கண்டியைச் சேர்ந்த, 41 வயதான குறித்த சந்தேக நபர் ஜனாதிபதி செயலகத்தின் பாராளுமன்ற மற்றும் அமைச்சரவைப் பிரிவில்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

O/L பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (G.C.E. O/L) பரீட்சை விடைத்தாள்களை மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களைக் ஒன்லைன் (Online) முறைமை ஊடாகத் திணைக்களம் கோரியுள்ளது. இதற்கமைய, பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் ஜூன் 25 முதல் ஜூலை 8ஆம் திகதி வரை ஒன்லைன் மூலம் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்திகள் பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://www.doenets.lk இன் “Exam Information Centre” பகுதிக்குச் செல்வதன் மூலமோ அல்லது https://onlineexams.gov.lk/eic என்ற நேரடி இணைய முகவரி மூலமோ விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்கள் 2025 சாதாரண தரப் பரீட்சைக்குப் பயன்படுத்திய பரீட்சை சுட்டெண் (Index number) மற்றும் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், புதியவர்கள் அடையாள அட்டை மற்றும் தொலைபேசி இலக்கத்தைப் பதிவிட்டுப் பதிய…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மலேசியா விலிருந்து நாடு கடத்தப்பட்ட முக்கிய குற்றவாளி

பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரின் துப்பாக்கிதாரியாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் “மாட்டியா” என அழைக்கப்படும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் தங்கியிருந்த அவர், அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதையடுத்து, நேற்று (25) நள்ளிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோதே குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் ஆரம்பக்கட்ட வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 42 வயதுடைய சந்தேகநபர் கொட்டுகொட, யாகொடமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், அவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தல் (Interpol Red Notice)  பிறப்பிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மீது, 2022 ஆம்…

மேலும் படிக்க