அண்மை செய்தி இலங்கை செய்தி. 

சிறைச்சாலை சம்பவங்களுக்கான பொறுப்பை நான் ஏற்கிறேன் நீதியமைச்சர்

தமது பொறுப்பிலுள்ள அமைச்சின் கீழ் செயற்படும் ஒரு நிறுவனத்தில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் அதன் பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக நீதியமைச்சர் ஹர்சண நாணயக்கார தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்  எவருடைய உயிரும் பறிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

700 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த சுமார் 700 கைதிகள், அங்குள்ள நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கையாக அகுணகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (05) முதல் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிலவும் அமைதியற்ற சூழலைக் கருத்தில் கொண்டு இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

எரிபொருளுக்கான கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடரும்!

எரிபொருள் விநியோக முறைமை எந்தவித தடையுமின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை நிறுத்துவதற்கு அரசாங்கம் எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். நாட்டில் எதிர்காலத்திலும் தடையின்றி எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, தற்போதைய விநியோக முறைமையில் மாற்றங்கள் ஏற்படலாம் எனப் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. எரிபொருள் ஒதுக்கீட்டு அளவை அதிகரிப்பதற்கோ அல்லது குறைப்பதற்கோ எந்தவித முடிவுகளும் எடுக்கப்படவில்லை. மறுஅறிவித்தல் வரை தற்போதைய ஒதுக்கீட்டு எல்லைகளே தொடர்ந்து அமுலில் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நீர்கொழும்பு சிறையில் ரத்தக்களரி! 25 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் வெடித்த கைதிகள் மோதல், இன்று (06) காலை மீண்டும் உச்சகட்டத்தை எட்டிய நிலையில் இதுவரை 25பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அதன்படி இந்த வன்முறைச் சம்பவங்களில் 5  சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதற்கிடையில், சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பலரது உடல்களில் துப்பாக்கிக் காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆரம்ப விசாரணைகளின்படி, சுமார் 1,800 கைதிகள் உள்ள இந்தச் சிறைச்சாலையில்  “பூரு மூனா” பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சுரேஷ் என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் செல்வாக்கின் கீழ் இந்த மோதல் நடைபெற்றதாக பொலிஸார்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இரு பிரிவினருக்கு இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் மோதல் ஒன்று ஏற்பட்டிருந்தது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும், தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும் இடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இம்மோதலில் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 38 பேர் காயமடைந்து தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று திங்கட்கிழமை காலை நிலவரப்படி சிறைச்சாலையின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும், தற்போது அங்கு மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பேருந்து புதிய கட்டண திருத்தம் நடைமுறைக்கு வருகிறது

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய இன்று திங்கட்கிழமை முதல் புதிய கட்டண திருத்தம் நடைமுறைக்கு வருகிறது. இந்தக் கட்டண திருத்தத்தின்படி, பேருந்து கட்டணங்களை 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி, இதுவரை 30 ரூபாவாக இருந்த ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 34 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு இணையாக சொகுசு பேருந்து கட்டணங்களும் அதிவேக வீதிகளுக்கான பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நடைமுறைக்கு வரும் புதிய பேருந்து கட்டண திருத்தம் குறித்து பேருந்து ஊழியர்களுக்குத் தெளிவுபடுத்தி, பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான சோதனைகள் இன்று முதல் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இருப்பினும், பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களைப் புதுப்பிப்பதற்கு இன்னும் 2 நாட்கள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நீர்கொழும்பு சிறை நிலைமை கட்டுப் பாட்டுக்குள்;விசேட விசாரணைக் குழுவொன்று நியமனம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையினுள் நேற்று (05) இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பாரிய மோதலில் இருவர் உயிரிழந்ததோடு, இந்த வன்முறைச் சம்பவத்தின் போது காயமடைந்த சுமார் 35 கைதிகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமென தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சர் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சிறைச்சாலைக்குள் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை ஒன்று அம்பலமானதைத் தொடர்ந்து ஏற்பட்ட தர்க்கமே இந்த வன்முறைக்குக் காரணமாக அமைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மோதலானது “பூரு மூனா” (Booru Moona) எனும் பாதாள உலகக் கும்பல் தலைவருடன் நெருங்கிய…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

2026 GCE O/L விண்ணப்பம் ஒன்லைனில் கோரப்பட்டுள்ளது!

இவ்வருடம் (2026) நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (2026 GCE O/L) பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோரும் நடவடிக்கையை இலங்கை பரீட்சைத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் இருவரும் நேற்று (03) முதல் எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி வரை இணையவழியில் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகேவினால் இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் அனைத்தும் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரிகளுக்கான அறிவுறுத்தல்:பாடசாலை விண்ணப்பதாரிகள்:  தத்தமது பாடசாலை அதிபர்கள் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஏற்கனவே அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட விண்ணப்பதாரிகள்:  தமது தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அடையாள அட்டை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

தமிழக முதலமைச்சர் விஜய் – இலங்கை துணை உயர்ஸ்தானிகர் சந்திப்பு

சென்னையில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜயை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில், விஜய்க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்த  உயர்ஸ்தானிகர், இலங்கை மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக பேசினார். இரு நாடுகளின் மக்களிடையேயான உறவுகளை மேம்படுத்தும் வழிகள், கலாச்சார மற்றும் சமூக தொடர்புகளை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையிலான நட்புறவு மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை தொடர்ந்து பேணிப் பாதுகாப்பதில் இலங்கை உறுதியாக இருப்பதாகவும் பிரதி  உயர்ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

கட்டுகுருந்த பகுதியில் கோர விபத்தில் பாட்டி, பேரன் பலி

காலி – கொழும்பு பிரதான வீதியின் பயாகல, கட்டுகுருந்த பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 62 வயதுடைய மூதாட்டியும், அவரது 12 வயது பேரனும் உயிரிழந்துள்ளனர். நேற்று (01) நள்ளிரவு சுமார் 12.00 மணியளவில் தனியார் பேருந்தொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேருவளையில் நடைபெற்ற பொசன் மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் முச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த 62 வயதுடைய பெண்ணும், அவரது 12 வயது பேரனும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவனின் தாத்தாவே முச்சக்கரவண்டியை செலுத்தியிருந்தார். அவர் பலத்த காயங்களுடன் களுத்துறை போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.…

மேலும் படிக்க