சிறப்புச் செய்தி தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

சிறுமி உயிரிழப்பு இரு மருத்துவர்கள் தற்காலிக இடைநிறுத்தம்!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் கடந்த 21 ஆம் திகதி உணவு ஒவ்வாமையினால் அனுமதிக்கப்பட்ட சிறுமி மருத்துவர்களின் சிகிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ளமை மருத்துவமனையின் நிர்வாகத்தின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து முல்லைத்தீவு சமூகம் இன்று நீதி வேண்டிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் முன்பாக இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது இந்த போராட்டத்திற்கு மாவட்டத்தில் உள்ள சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட அமைப்பினர் ஆதரவினை தெரிவித்துள்ளார்கள். உயிரிழந்த சிறுமியின் உருவப்படங்களை தாங்கிய பதாதைகைள கையில் வதை;து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளார்கள். அதனை தொடர்ந்து  கோரிக்கை அடங்கிய மனு ஒன்றும் மாவட்ட மருத்துவமனை பணிப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு வழங்கியுள்ளார்கள். மனுவில் உள்ள முக்கிய கோரிக்கையாக.. 1)டினோயாவுக்கு நடந்த கொலை தொடர்பிலான உண்மைத்தன்மையினை பணிப்பாளர் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். 2)இவ்வாறு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தாளையடி கடலில் குளிக்கச் சென்ற காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கு, தாளையடி கடலில் குளிக்கச் சென்ற காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் 28 திகதி மாலை மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாளையடி கடலில் நண்பர்களுடன் குளிக்கச்சென்ற நபர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.உடுத்துறை வடக்கைச் சேர்ந்த விஜயமோகன் ஜெசிந்தன் என்பவரே நேற்றைய தினம் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லை மாவட்டத்தில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள விசேட கவனம் அமைச்சர் ஆனந்த விஜேபால

முல்லைத்தீவு மாவட்டத்தில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் நிவாரணம் வழங்கவும் அரசாங்கத்தால் விசேட கவனம் செலுத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படுமென்று அமைச்சர் ஆனந்த விஜேபால வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் நிவாரணம் வழங்கவும் அரசாங்கத்தால் விசேட கவனம் செலுத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படுமென்று அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் அனர்த்த நிவாரணப் பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பாக ஆராயும் சிறப்பு முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் அம்மாவட்டச் செயலகத்தின் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாகவும் நிவாரணப்பணிகள் தொடர்பாகவும் குளங்கள், வீதிகள் பாலங்களுக்கு ஏற்பட்டுள்ள…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தமிழ் தே. ம. மு. கோரிக்கை க்கு தமிழ்நாடு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் இணைந்து விடுத்துள்ள கூட்டறிக்கை

ஈழத் தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணை கோரிக்கையை மூடி மறைக்கவும், சுதந்திரத் தமிழீழக் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யவும் சிங்கள அரசின் மறைமுக நடவடிக்கைதான் தற்போதைய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கை! மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, திராவிட தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், மே-17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் மணியரசன், விடுதலை தமிழ்ப் புலிகள் குடந்தை அரசன், தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஈரோடு வே.பொன்னையன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்,…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வருகை; சீனத் தூதுக்குழுவும் இன்று வருகை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புத் தூதுவராக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார். அவர் இன்று காலை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ​இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலதிக நிவாரண உதவிகளை வழங்குவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும். தனது பயணத்தின் ஒரு பகுதியாக, அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்திப்பதோடு, இன்று மதியம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார். ​தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துகொண்டு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று இரவு இலங்கையிலிருந்து…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கட்டைக்காடு கிழக்கில் வன்முறைக் குழு : குடும்பம் மீது தாக்குதல்

கட்டைக்காடு கிழக்கில் வன்முறைக்குழு அட்டகாசம்: கைக்குழந்தையுடன் இருந்த குடும்பம் மீது தாக்குதல் முயற்சி! யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கிழக்கு பகுதியில் நேற்று (21) இரவு புகுந்தல் வன்முறைக்குழு ஒன்று, வீடுகளைச் சேதப்படுத்தியும் வாகனங்களை அடித்து நொருக்கியும் பாரிய அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. நேற்று இரவு வாள்கள், கத்திகள் மற்றும் கற்களுடன் திரண்டு வந்த வன்முறைக்குழுவினர், கட்டைக்காடு கிழக்கிலுள்ள வீடு ஒன்றின் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்த முயன்றுள்ளனர். அந்த வீட்டில் கைக்குழந்தைகளுடன் ஒரு குடும்பம் தங்கியிருந்த வேளையிலேயே இந்தத் தாக்குதல் முயற்சி இடம்பெற்றுள்ளது. இந்த வன்முறையின் போது வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன், அங்கிருந்த உழவு இயந்திரம் மற்றும் வாகனமும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. குறித்த வன்முறைக்குழுவினர் மதுபோதையில் நீண்டகாலமாக அப்பகுதி குடும்பங்களை அச்சுறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம்…

மேலும் படிக்க
காணொளி சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

தையெட்டியில் போராட்டம் செய்த பலர் கைது காவல்துறை அடிதடி

தையெட்டியில் போராட்டம் செய்த பலர் கைது காவல்துறை அடிதடி

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஏப்ரல் நடுப்பகுதியில்

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் சில பாடங்கள் இயற்கை பேரிடரால் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும் எதிர்வரும் ஏப்ரல் நடுப்பகுதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் சில பாடங்கள் இயற்கை பேரிடரால் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும் எதிர்வரும் ஏப்ரல் நடுப்பகுதியில் பெறுபேறுகள் வெளியிடப்படுமென பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் பத்தாம் திகதி ஆரம்பமாகின. டிசம்பர் முதலாம் திகதி இப்பரீட்சைகள் முடிவடையவிருந்தன.இநநிலையில்,திடீரென இயற்கை அனர்த்தத்துக்கு முகங்கொடுக்க நேர்ந்ததால்,சில பாடங்களுக்கான பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.இதன் பிரகாரம் மீதமுள்ள பாடங்களுக்கான பரீட்சையை ஜனவரி 12 ஆம் திகதி முதல் நடத்த பரீட்சை திணைக்களம் முடிவு செய்துள்ளது.இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களின் மதிப்பீடு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் பரீட்சை முடிவுகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
காணொளி சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

தேசத்தின் புதல்வி துவாரகா அவர்கள் திருகோணமலை குச்சவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆற்றிய உரை

தேசத்தின் புதல்வி துவாரகா அவர்கள் நேற்றைய தினம் திருகோணமலை குச்சவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆற்றிய உரை  இது தேசத்தின் புதல்வி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் ஆகும்:     ‘எனது அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். தமிழீழ மண்ணில் மட்டுமன்றி, உலகெங்கும் இன்று தமிழினம் தலைநிமிர்ந்து நிற்கின்றது என்றால் அதற்குக் காரணமானவர்கள் எமது மாவீரர்கள். தம்மையும், தமது வாழ்வையும் பற்றியே மட்டும் சிந்திக்கும் மனிதர்களின் மத்தியில் தமது மக்கள் வாழ வேண்டும், எதிர்காலச் சந்ததி தலைநிமிர்ந்து நிற்க வேண்டும், தமிழ்த் தாயின் துயர் துடைக்கப்பட வேண்டும் என்ற உன்னத சிந்தனையோடு தம்மையே ஈகம் செய்தவர்கள் எமது மாவீரர்கள். தமது உயிரையே வேலியாக்கி, எமது மண்ணையும், மக்களையும், மொழியையும் காத்த அந்த அற்புதப் பிறவிகள் மண்ணிலும், கடலிலும், வான்வெளியிலும் புரிந்த சாதனைகளை…

மேலும் படிக்க