பாதிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்க விசேட அமைச் சரவைப் பத்திரம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் பாதிக்கப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு மற்றும் பிற நிவாரணங்களை ஆராய்வதற்கு விசேட குழு நியமிக்கப்படவுள்ளது.இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.இவ்வாறான சம்பவங்களின்போது பாதிக்கப்படும் அரசாங்க அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுவது வழமையானது.எனினும்
நீர்கொழும்பு சம்பவத்துக்காக மேலதிக இழப்பீடு மற்றும் நிவாரணங்கள் வழங்கும் நோக்கிலேயே, விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.இக்குழு முன்வைக்கும் பரிந்துரைகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 10 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்தனர். உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இவர்களின் இறுதிச்சடங்கு செலவுகளுக்காக ஏற்கனவே தலா 05 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் காலத்தில் கூடுதலாக ஒவ்வொரு அதிகாரிக்கும் தலா 05 இலட்சம் ரூபா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

