தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மோட்டார் சைக்கிள் விபத்தில் 19 வயது பாடசாலை மாணவன் பலி

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள 64 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்றிரவு (19) இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் மூதூர் -ஆணைச்சேனை பகுதியை சேர்ந்த 19 வயது றிஸ்வான் சிப்கி எனும் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதுடன் அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொருவர் இளைஞரும் காயமடைந்துள்ளார்.விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது – மோட்டார் சைக்கிளில் 2 இளைஞர்களும் தோப்பூரிலுள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று , மீண்டும் மூதூருக்கு வரும் வழியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விளகி இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகிறது. விபத்தில் உயிரிழந்த இளைஞனின் ஜனாஸா மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்த இளைஞனும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

அர்ச்சுனாவின் உரைக்கு எதிராக விரிவுரையாளர் இளம்பிறையன் எச்சரிக்கை

அரசியற் செயற்பாடுகளை வெளியில் வைத்துக்கொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.பல்கலைக்கழக மாணவர்கள் மதுபானத்துக்காகவும், கொத்து ரொட்டிக்காகவுமே போராட்டங்களில் ஈடுபடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து குறித்து,வினவிய போதே,விரிவுரையாளர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இந்த பல்கலைக்கழகத்திலேயே கல்வி கற்றவர். ஆகவே மாணவர்கள் அவ்வாறு செய்வார்களா என அர்ச்சுனா யோசிக்க வேண்டும். தமது தேவைகளுக்காக இவ்வாறு சொல்லக் கூடாது. நான் இந்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று, இங்கேயே நீண்ட காலமாக ஆசிரியராக பணியாற்றுகிறேன். எமது மாணவர்கள் இவ்வாறெல்லாம் செய்பவர்கள் அல்ல. எமது மக்கள் பிரதிநிதிகளே எமது பல்கலைக்கழகத்தை இழிவுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். போட்டி அரசியலை பல்கலைக்கழகத்துடன் செய்யக் கூடாது. அதனை வெளியே செய்யுங்கள். பல்கலைக்கழக மாணவர்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

முள்ளிவாய்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு

முள்ளிவாய்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு விஜயரத்தினம் சரவணன் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் 18.05.2026இன்று முள்ளிவாய்கால் நினைவுமுற்றத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையில் 17ஆம் ஆண்டு பிரகடன உரை நிகழ்த்தப்பட்டதுடன், தொடர்ந்து உயிர்நீத்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து சரியாக காலை 10.30மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அந்தவகையில் இறுதிப்போரின்போது உறவுகளை இழந்த முல்லைத்தீவு – வற்றாப்பளையைச் சேர்ந்த சிறீரஞ்சன் ரினோசா என்பவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அத்தோடு ஏனையவர்களாலும் சமநேரத்தில் சுடரேற்றப்பட்டது. அதனையடுத்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உறவுகளை இழந்த உறவுகள் கதறி அழுது, கண்ணீர்சொரிந்து தமது அஞ்சலிகளைச் செலுத்தினர். மேலும் இந்த முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்புநாளின் 17ஆம் ஆண்டு நினைவேந்தலில் நாடாளுமன்றஉறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

நந்தக்கடலில் முள்ளி வாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக அஞ்சலி

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக, ரவிகரன் நந்தக்கடலில் அஞ்சலி முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும் அந்தவகையில்முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் 18.05.2026இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். குறிப்பாக நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி பிராத்தனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, இரத்தினம்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

புளியங்கூடலில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள்

2009 முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழின இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும் மே 18 – “தமிழின அழிப்பு நாள்” வாரத்தின் 5 ஆம் நாளான இன்று  வேலணை – புளியங்கூடலில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட நினைவிடத்தில் இறந்த உறவுகளை நினைவுகூர்ந்து சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கபட்டது. தீவக நினைவேந்தல் குழுவின் ஏற்பட்டில் புளியங்கூடல் சந்தியில்  பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட அரங்கில் இன்று (16) இரவு 7.00 மணியளவில்   முள்ளிவாய்க்காலின் வலிகளை இறுதிவரை அனுபவித்தவரும் மாவீரரது சகோதரனுமான சண்முகலிங்கம் அகஷ்கரன் அவர்களால் ஈகச்சுடர் ஏற்றபட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. 2009 இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் மற்றும் முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நாட்களில் மக்கள் எதிர்கொண்ட பட்டினி மற்றும் மனிதாபிமான அவலங்களும் நினைவுகூரப்பட்டதுடன் திடலில் நாட்டிவைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தீபங்கள் கூடி நின்ற மக்களால் ஏற்றப்பட்டதுடன் அழிப்பின் அடையாள…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கட்டுக்கரை திட்ட மேலாண்மை குழுவின் கட்டமைப்பைக் கலைக்க தீர்மானம்!

மன்னார் மாவட்ட செயலகத்தில் கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறுபோக வேளாண்மை செய்கின்ற, ஈவு  வழங்குகின்ற செயற்பாடுகளில் இருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மூலம்  வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக ஆராயும் விசேட கூட்டம்  மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் , மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும்,  பிரதி அமைச்சருமான உபாலி   சமரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,எஸ்.ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது பிரதேச செயலாளர்கள்,உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், கட்டுக்கரை குள விவசாய அமைப்புகள்,  திட்ட மேலாண்மை குழு போன்ற பிரதேச அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டார்கள். கடந்த பல வருடங்களாக இந்த   ஈவு    வழங்குகின்ற விடயத்திலே சிறுபோக விவசாயிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு கொண்டிருப்பதாக தொடர்ச்சியான…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

போரதீவில் முள்ளிவாய்க் கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

கடந்த யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய மக்கள் உப்புக்கூட இல்லாமல் தங்களிடமிருந்த அரிசியை வைத்துக் கொண்டு கஞ்சி காய்ச்சி அவர்களது பசியைப் போக்கியிருந்தனர். இந்நிலையில் அப்போதைய சூழ்ந்நிலையில் அங்கிருந்த மக்கள் கஞ்சி காய்ச்சி அருந்தியதை நினைவு கூர்ந்து வருடந்தோறும் இக்காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கும் நிகழ்வுகள் வடகிழக்கில் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபைக்கு முன்பாக இன்றையதினம் வெள்ளிக்கிழமை(15) முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி, சிரட்டைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. அப்பகுதி பொதுமக்களால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது அங்கிருந்த மக்கள் விருப்புடன் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியை அருந்தினர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை.

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர். வவுனியா கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சுவந்தன் திவ்யா என்ற யுவதியே இவ்வாறு காணாமல் போனவர் ஆவார்.  குறித்த யுவதி கடந்த 27 ஆம் திகதி யாழ்பபணத்தில் இருந்து வவுனியா செல்வதாக சென்ற நிலையிலேயே காணாமல் போயுள்ளதாக காங்கேசன்துறை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக தகவல் தெரிந்தோர் 0773828845 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் காங்கேசன்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கல்விளான் மக்களின் குடியிருப்புக் காணிகள், வீடுகள் பறிக்கப்படக் கூடாது – ரவிகரன் எம்.பி

கல்விளான் மக்களின் குடியிருப்புக் காணிகள், வீடுகள் பறிக்கப்படக்கூடாது – ரவிகரன் எம்.பி வலியுறுத்து விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கல்விளான் கிராமமக்கள் பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தில் வெள்ள அனர்த்தப் பாதிப்புக்குள்ளாகிவருகின்ற நிலையில் அவர்களை மாற்று இடங்களில் குடியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு கல்விளான் மக்கள் மாற்று இடங்களில் குடியேற்றப்பட்டாலும், அவர்களால் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற வீடுகளைகளை அழித்துவிட்டு, காணிகளை அவர்களிடமிருந்து மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படக்கூடாதென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் வலியுறுத்தலையடுத்து, கல்விளான் மக்கள் தற்போது பயன்படுத்தும் வீடுகள் அழிக்கப்படாதெனவும், காணிகள் அலர்களிடம் மீளப் பெற்றுக்கொள்ளப்படாதெனவும் துணுக்காய் பிரதேச செயலாளரால் இதன்போது பதிலளிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 13.05.2026நேற்று இடம்பெற்றபோதே இவ்விடயம்தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

முள்ளிவாய்க்கால் கஞ்சி:ஒரு இனத்தின் குறியீடு

முள்ளிவாய்க்கால் கஞ்சி: ஒரு இனத்தின் ஈழத் தமிழர்களின்மன உறுதியையும் பறைசாற்றும் ஒரு குறியீடு முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது வெறும் உணவுப் பண்டம் அல்ல; அது ஈழத் தமிழர்களின் வரலாற்றில் அழியாத வடுக்களையும், அதே சமயம் அவர்களின் மன உறுதியையும் பறைசாற்றும் ஒரு குறியீடு. வரலாற்றுப் பின்னணி 2009-ஆம் ஆண்டு ஈழப்போர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியபோது, வன்னிப் பெருநிலப்பரப்பில் மக்கள் ஒரு சிறிய பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டனர். அங்கு உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை இலங்கை அரசு தடுத்ததால், கடும் பஞ்சம் ஏற்பட்டது. அந்தப் பயங்கரமான சூழலில், கிடைத்த சொற்ப அரிசியைக் கொண்டு அதிக நீர் சேர்த்து காய்ச்சப்பட்ட இந்தக் கஞ்சியே பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காத்தது. கஞ்சியின் முக்கியத்துவம் பசியின் அடையாளம்: குண்டுகள் மழைபோல் பொழிந்த வேளையிலும், பதுங்கு குழிகளுக்குள் இருந்த மக்களுக்குக் கிடைத்த ஒரே ஆகாரம்…

மேலும் படிக்க