தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காங்கேசன்துறை கடற்கரை பகுதியில் இசை நிகழ்ச்சி,

யாழ் மாவட்டத்தின் 12 இசைக் குழுக்கள் இணைந்து மாபெரும் இசை நிகழ்ச்சியை காங்கேசன்துறை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபை மைதானத்தில் மார்ச் 6,7,8ம் திகதிகளில் மதியம் ஒரு மணி முதல் நடத்த ஏற்பாடு செய்துள்ளன. இது தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு நிகழ்வு ஏற்பாட்டாளர்களான யாழ் மாவட்ட இசைக் குழு கலைஞர்கள் சங்க பிரதிநிதிகளால் யாழ் ஊடக அமையத்தில் நடத்தப்பட்டது.தாயக இசைக் கலைஞர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நிதி திரட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த நிகழ்விற்கு பலரும் தமது நிதி அனுசரணையை வழங்கியுள்ளனர்.இசை நிகழ்ச்சி, உணவுத் திருவிழா, களியாட்ட நிகழ்ச்சி என பல விடயங்கள் இதன்போது நடைபெற ஏற்பாடாகியுள்ளது.அனுமதி கட்டணமாக சிறுவர்களுக்கு நூறு ரூபாவும் பெரியவர்களுக்கு இருநூறு ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

கட்டி முடிக்கப்படாம லுள்ள பாடசாலைக் கட்டடங்களை விரைந்து முழுமைப் படுத்த நடவடிக்கை மேற்கொள்க;ரவிகரன்

கட்டி முடிக்கப்படாமலுள்ள பாடசாலைக் கட்டடங்களை விரைந்து முழுமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்க; பிரதமர் ஹரிணியிடம் ரவிகரன் எம்.பி வலியுறுத்து. கட்டிமுடிக்கப்படாமலுள்ள பாடசாலைக்கட்டடங்கள் தொடர்பில் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவிடம் கேள்வி எழுப்பிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இவ்வாறு கட்டி முடிக்கப்படாமலுள்ள பாடசாலைக் கட்டடங்களை முழுமைப்படுத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் நாடுமுழுவதும் 468கட்டிமுடிக்கப்படாத பாடசாலைக்கட்டடங்கள் காணப்படுவதாகவும், அவற்றில் 356பாடசாலைக்கட்டடங்களைக் முழுமைப்படுத்துவதற்கு 2025ஆம் ஆண்டிற்குரிய வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளபோதும் சில கட்டடங்களை முழுமைப்படுத்துவதில் சில நடைமுறைச்சிக்கல்கள் காணப்படுவதாகவும் இதன்போது பதிலளித்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, அந்தச் சிக்கல்களுக்கு தீர்வுகாணப்பட்ட பிற்பாடு குறித்த நிர்மாணப்பணிகளைப் பூர்த்திசெய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவுந்தெரிவித்துள்ளார். அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்தின் கலைமகள் வித்தியாலயத்தில் கற்றல் செயற்பாடுகளுக்கான வேறு வகுப்பறைகள் இல்லாதநிலையில், முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத ஆபத்தான…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

செம்மலை பெரிய குளக்கட்டுகுளம் உடைப்பு கமநல உதவி ஆணையாள ருக்கு நேரில் காண்பித்த ரவிகரன் எம்.பி;

செம்மலை பெரியகுளக்கட்டு குளம் உடைப்பெடுத்துள்ளதால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கமநல உதவி ஆணையாளருக்கு நேரில் காண்பித்த ரவிகரன் எம்.பி; சீரமைப்பை துரிதப்படுத்தவும் வலியுறுத்து. முல்லைத்தீவு – செம்மலையில் உள்ள பெரியகுளம் உடைப்பெடுத்துள்ளதால் அப்பகுதியிலுள்ள மக்கள் எதிர்நோக்கும் பாதிப்புக்களை முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளருக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்த 27.02.2026அன்று நேரில் அழைத்துச்சென்று காண்பித்துள்ளார். அத்தோடு உடைப்பெடுத்துள்ள குறித்த குளத்தினை விரைந்து சீரமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கமநல உதவி ஆணையாளரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு – செம்மலைப்பகுதியில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்தத 22.02.2025அன்று மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நாடாத்தியிருந்தார். குறித்த மக்கள் குறைகேள் சந்திப்பில் முல்லைத்தீவு – செம்மலை கமக்கார அமைப்பு பிரிவிலுள்ள பெரியகுளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுத்துள்ளதாக அப்பகுதி மக்களால்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காங்கேசன் துறைக்கும் நாகபட்டினத்து க்கும் இடையிலான கப்பல் சேவை

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது எதிர்வரும் 06.03.2025 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுபம் கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். குறித்த கப்பல் சேவையானது அசாதாரண காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் கப்பல் சேவையானது மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் வழமைபோல் செவ்வாய்க்கிழமை தவிர்ந்த ஏனைய ஆறு நாட்களும் குறித்த கப்பல் சேவையானது இடம்பெறும். www.sailsubham.com என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதனூடாகவோ அல்லது 0212224647, 0117642117 என்ற இலக்கங்களுக்கு அழைப்பு மேற்கொள்வதன் மூலமாகவோ பயணச்சீட்டுகளை பதிவுசெய்துகொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

சாவகச்சேரியில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோம்

யாழ்பாணத்தில்  தொடர்ந்தும் சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு நீடித்து வரும் நிலையில் நேற்றைய தினம் ஒரு தொகை லாப்ஸ் (Laugfs) எரிவாயு சிலிண்டர்கள் சாவகச்சேரியில் உள்ள யாழ் மாவட்ட முகவர் நிலையத்தில் நேரடியாக விநியோகிக்கப்பட்டிருந்த நிலையில் மக்கள் வரிசையில்  முண்டியடித்து பெற்றுக்கொண்டனர்.இந்நிலையில் ஈரான் எடுத்துள்ள அதிரடி முடிவுகளால் இயற்கை எரிவாயுவின் (LNG) விலை சர்வதேச சந்தையில் செங்குத்தாக உயரத் தொடங்கியுள்ளது. உலக இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை (20%) கொண்டுள்ள கத்தார், தனது ஏற்றுமதிக்கு இந்த ஹோர்முஸ் நீரிணையையே பெரிதும் நம்பியுள்ளது.கத்தாரின் முக்கிய வாடிக்கையாளர்கள் ஆசியாவில் இருந்தபோதிலும், இந்த விநியோகத் தடையால் உலகெங்கிலும் உள்ள நாடுகள் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ளப் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.இது சந்தையில் தேவையற்ற தட்டுப்பாட்டை உருவாக்கி, விலையை பன்மடங்கு உயர்த்தியுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேலில் உள்ள சில முக்கிய எரிவாயு உற்பத்தி…

மேலும் படிக்க

திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்; மருதனார்மடத்தில் பதற்றம்!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் இன்றையதினம்  மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.குறித்த மோட்டார் சைக்கிள் தானாகவே தீப்பற்றி எரிந்ததா, அல்லது யாராவது தீ மூட்டினரா என இதுவரை தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.குறித்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் திடீரென தீப்பிடித்து முழுவதுமாக எரிந்துள்ளது. திடீரென மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததில் குறித்தபகுதியில் பதற்றசூழல் உருவாகியுள்ளது. சம்பவத்தையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

பெரியவிளாத்தி க்குளம் அணைக்கட்டு அமைத்தல் மற்றும் வாய்க்கால் சீரமைப்பு தொடர்பில் ஆராய்வு

பெரியவிளாத்திக்குளம் புல்மோட்டைவெளிக்கு நேரில் சென்ற ரவிகரன் எம்.பி; அணைக்கட்டு அமைத்தல் மற்றும் வாய்க்கால் சீரமைப்பு தொடர்பில் ஆராய்வு வவுனியா – ஓமந்தை கமநலசேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட பெரியவிளாத்திக்குளம் கமக்கா அமைப்பின் கீழ் காணப்படும் புல்மோட்டை வயல்வெளிக்கு நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் புல்மோட்டை வெளிக்கான அணைக்கட்டை அமைத்தல் மற்றும் வாய்க்கால் சீரமைப்புத் தொடர்பில் ஆராய்ந்துள்ளார். வவுனியா – ஓமந்தை, பெரியவிளாத்திக்குளம் பகுதியில் கடந்தவருடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் மக்கள் குறைகேள் சந்திப்பொன்று நடாத்தப்பட்டிருந்தது. இதன்போது புல்மோட்டை வயல்வெளிக்கான அணைக்கட்டு அமைப்பது தொடர்பிலும், வாய்க்காலை சீரமைப்பதுதொடர்பிலும் இதன்போது அப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 13.02.2026அன்று இடம்பெற்ற வவுனியா பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் குறித்த புல்மோட்டை வெளிக்கான அணைக்கட்டை அமைக்குமாறும், நீர்ப்பாசன வாய்க்கால் சீரமைப்பை மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

சிறுபோகத்திலும் நெற்கொள்வனவிற்கு ஏற்றவாறு களஞ்சிய சாலைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் – ரவிகரன்

நெல் சந்தைப்படுத்தல்சபை சிறுபோகத்திலும் தவறிழைக்க முடியாது; சிறுபோக அறுவடைக்கு முன்னரே நெற்கொள்வனவிற்கு ஏற்றவாறு களஞ்சியசாலைகள் தயார்நிலையில் இருக்கவேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து. நெல்சந்தைப்படுத்தல் சபையினர் தமது களஞ்சியசாலைகளில் ஏற்கனவே கொள்வனவுசெய்யப்பட்ட நெல்மூட்டைகளை அகற்றாது தேக்கிவைத்திருந்ததன் காரணத்தினால் 2025 – 2026ஆம் ஆண்டுகளுக்குரிய பெரும்போக காலத்தில் அறுவடைசெய்யப்பட்ட நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவுசெய்வதில் தாமதம் ஏற்பட்டிருந்ததாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் 2026ஆம் ஆண்டிற்குரிய சிறுபோக காலத்திலும் நெல் சந்தைப்படுத்தல் சபை அத்தகைய தவறை செய்யக்கூடாதெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், சிறுபோக அறுவடைக்காலத்திற்கு முன்னரே நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலையில் தேங்கியுள்ள ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட நெல் மூட்டைகள் உரியவகையில் அகற்றப்பட்டு, சிறுபோகத்தில் அறுவடைசெய்யப்படுகின்ற நெல்லை விவசாயிகளிடமிருந்து தாமதமின்றி கொள்வனவுசெய்வதற்கு ஏற்றவாறு களஞ்சியசாலைகள் தயார் நிலையில் இருக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு வன்னி மாவட்ட அபிவிருத்தி…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மட்டு களுவாஞ்சிகுடியில் உழவு இயந்திரத்தின் மேல் ஏறி நின்ற டிப்பர்

மட்டு களுவாஞ்சிகுடியில் உழவு இயந்திரத்தின் மேல் ஏறி நின்ற டிப்பர் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் சற்றுமுன் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.மட்டு கல்முனை சாலை வழியே பழுதான டிப்பர் ஒன்றை உழவு இயந்திரம் ஒன்று கட்டி இழுந்துக்கொண்டு சென்ற சமயம் உழவு இயந்திரத்தின் மேல் எதிர்பாராத விதமாக டிப்பர் ஏறியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது விபத்து நடைபெற்ற போது உழவு இயந்திர சாரதி கீழே குதித்து தெய்வாதினமாக உயிர்தப்பியுள்ளார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி காவல் துறையினர். மேற்க்கொண்டு வருகின்றனர்

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வடக்கின் பெரும் நீர்ப்பாசனத்தை நசுக்கப் பெரும் சதி – இரணைமடு விவசாயிகள் அமைப்பு போர்க்கொடி!

வடக்கின் பெரும் நீர்ப்பாசனத்தை நசுக்கப் பெரும் சதி – இரணைமடு விவசாயிகள் அமைப்பு போர்க்கொடி! வடக்கின் பெரும் நீர்ப்பாசனமான இரணைமடு நீர்ப்பாசனத்தின் கீழ் இருக்கும் 28 கமக்காரர் அமைப்புகளின் மீது அர்ச்சுனா எம்.பி கூறும் குற்றச்சாட்டுக்களில் உண்மைகள் இல்லை என்று கூறும் கமக்காரர் அமைப்புகளின் தலைவர், குறித்த எம்.பி உண்மைகளை ஆராயாது அரசியல் கதிரையின் மீது கொண்ட ஆசை காரணமாக ஒருதலைப் பட்சமாக கருத்துக் கூறுவதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில் -கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது இரணைமடு கமக்கார அமைப்புக்களின் நிர்வாகம் பெரும் நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும்,பதிவு செய்யப்படாத அமைப்பு என்றும், பல்வேறு குற்றச்சாட்டுக்களை அர்ச்சுனா எம்.பி முன்வைத்திருந்தார்.அவர் குறித்த கருத்தை கூறும் முன்…

மேலும் படிக்க