இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

ஒரு தனிமனிதனின் பேராசை காரணமாக ஒட்டுமொத்த மனித குலமும் வேதனையை ரஞ்சித் ஆண்டகை

உலகை ஆள வேண்டும் என்ற ஒரு தனிமனிதனின் பேராசை காரணமாக ஒட்டுமொத்த மனிதகுலமும் வேதனையை அனுபவித்து வருவதாக கொழும்பு மறைமாவட்ட ஆயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பிரதான திருப்பலியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது கிறிஸ்தவம் என்பது வெறும் பிரார்த்தனை செய்வது அல்லது புனித பைபிளின் பகுதிகளை வாசிப்பது மாத்திரம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக இந்தக் காலப்பகுதியில் உலக அமைதிக்காக நாம் பிரார்த்திப்போம். ஒரு மனிதனின் சுயநலத்தாலும், உலகை ஆள வேண்டும் என்ற அந்த மனிதனின் ஆசையாலும் இன்று உலக அமைதி சீர்குலைந்துள்ளது. இதனால் மனிதகுலத்திற்கே பெரும் வேதனை ஏற்பட்டுள்ளது. அந்த மனிதனின் மனதை மாற்றவும், இந்த கடினமான மற்றும் தவறான பாதையிலிருந்து அவரை விலக்கவும் நாம் பிரார்த்திப்போம். கிறிஸ்தவத்தை பின்பற்றுபவர்களால்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

குருக்கள் மட புதைகுழி : ஆதாரம் எதுவுமின்றி மூடப்பட்டது

விடுதலைப்புலிகள் அமைப்பினால் படுகொலை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட குருக்கள் மட புதைகுழி : ஆதாரம் எதுவுமின்றி மூடப்பட்டது மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள்மடம் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட முஸ்லிம் ஹஜ் யாத்திரிகர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட அகழ்வுப் பணிகள், எவ்வித மனித எச்சங்களும் கண்டெடுக்கப்படாத நிலையில் நேற்று (02) தற்காலிகமாக நிறைவடைந்துள்ளன. சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நபர்களின் உடல்களைத் தேடி, களுவாஞ்சிக்குடி நீதவான் தர்மலிங்கம் பிரதீபனின் நேரடி மேற்பார்வையில் கடந்த மார்ச் 30, 2026 அன்று அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கையில் தற்செயலாக எலும்புகள் கண்டெடுக்கப்படாத நிலையில், ஒரு பாரிய புதைகுழி இருப்பதாகக் கருதி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது இடம் இதுவாகும். மார்ச் 30 முதல் ஏப்ரல் 01 வரை மூன்று நாட்கள் அகழ்வுப்…

மேலும் படிக்க
அண்மை செய்தி சிறப்புச் செய்தி 

கள்ள மணல் ஏற்றிச் சென்ற வாகனத்தை அதிரடிப்படையினர் துரத்திச் சென்ற சம்பவம்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கள்ள மணல் ஏற்றிச் சென்ற வாகனத்தை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் துரத்திச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று(2) நள்ளிரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக நேற்று(2) நள்ளிரவு பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கள்ள மணல் ஏற்றிச் சென்ற வாகனத்தை கைப்பற்ற முனைந்த போது வீதியில் மணலை கொட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். காணொளி அடிப்படையில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

குருக்கள் மடம் மனித புதைகுழியில் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

குருக்கள்மடம் மனித புதைகுழியில் இடம்பெற்று வந்த அகழ்வுப்பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. மூன்று தினங்களாக இப்புதைகுழியில், அகழ்வுப் பணிகள் இடம்பெற்று ஆறடி ஆழம் வரை தோண்டப்பட்டது.இருந்தபோதும் மனித எச்சங்கள் எதையும் இதற்குள் காணக்கிடைக்கவில்லை. இதனால், இப்பணிகள் நேற்று முன்தினம் (01) கைவிடப்பட்டன.தோண்டப்பட்ட இடம் மண்ணிட்டு மூடப்பட்டது. களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஸ்கேன் செய்யப்பட்ட வேறு இடத்தில் பணிகளைத் தொடர்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.புனித ஹஜ் கடமையை முடித்துவிட்டு கல்முனை வீதியால் பயணம் செய்திருந்த 170 முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இவ்விடத்தில் மூடப்பட்டிருந்தனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

நள்ளிரவு உத்தி யோகபூர் வமாக வெளியிடப் பட்டுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று  (31) நள்ளிரவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உள்ளிட்ட மொத்தம் 281,810 பேர் தோற்றியிருந்தனர். இவர்களில் 176,527 மாணவர்கள், அதாவது 62.64% பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்திகள் தங்களது பெறுபேறுகளை Doenets.lk மற்றும் Results.exams.gov.lk ஆகிய இணையதளங்கள் மூலம் பார்வையிட முடியும். மேலும், இன்று (01.04.2026) முதல், மாணவர்கள் தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி onlineexams.gov.lk இணையதளத்தின் மூலம் பெறுபேற்று அட்டவணைகளை தரவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், அதிபர்கள் மற்றும் வலய/மாகாண கல்வி அதிகாரிகளும் தமக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் மூலம் பெறுபேறுகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும். இதேவேளை, பல்வேறு காரணங்களுக்காக…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வடபகுதி கடற் பரப்பு க்களில் அதிகரித் துள்ள இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்.ரவிகரன்

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுவதாக ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு; கண்காணிப்பு கருவிகள் பழுதடைந்துள்ளனவா எவும் கேள்வி எழுப்பினார். முல்லைத்தீவு உட்பட வடபகுதி கடற்பரப்புக்களில் அதிகரித்துள்ள இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுவதாக குற்றஞ்சாட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்படையினரது கண்காணிப்புக் கருவிகள் பழுதடைந்துள்ளனவா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பாக தம்மால் கண்காணிக்கப்படுவதாகவும், அத்தகைய அத்துமீறல்களுக்கெதிரா தம்மால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கடற்படை அதிகாரி பதிலளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 31.03.2026நேற்று கடற்றொழில் அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற, சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டத்திலேயே குறித்த விடயம் பேசப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வடக்கு கடற்பரப்புக்களில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக இந்திய இழுவைப் படகுகள்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

குருக்கள்மடம் மனிதப்புதைகுழியில்  இரண்டாம் நாளாக  இன்றும் அகழ்வுப் பணி

குருக்கள்மடம் மனிதப்புதைகுழியில்  இரண்டாம் நாளாக  இன்றும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள் மக்களை ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு நீண்ட விசாரணைகளைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி  நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.பிரதீபன் அவர்களின் முன்னிலையில் அகழ்வுப் பணி  நேற்று திங்கட்கிழமை (30.03.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த அகழ்வுப் பணி இரண்டாம் நாளாக இன்று செவ்வாய்கிழமையும்(31.03.2026) தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.அகழ்வு இடம்பெறும் அவ்விடத்தில் இதுவரையில் எதுவித எலும்புக் கூடுகளும் மீட்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சட்ட விரோத கடற் றொழில் செயற்பாடு களைக் கட்டுப் படுத்த அரசு வக்கற்றிருக் கின்றது; ரவிகரன்

சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த அரசு வக்கற்றிருக்கின்றது; கடற்றொழில் அமைச்சர் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து. முல்லைத்தீவு உட்பட வடக்கு, கிழக்கு கடற்பரப்புக்களில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த அரசுவக்கற்றிருப்பதாகவும் கடுமையாகச் சாடியுள்ளார். எனவே இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டைக் கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சர் துரித நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவில் 30.03.2026இன்று இடம்பெற்ற சட்டவிரோத தடற்றொழில் செயற்பாடுகளுக்கெதிரான கவனயீர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரமல்ல, வடக்கு கிழக்கிலுள்ள அனைத்துக் கடற்பரப்புக்களையும் ஆக்கிரமித்துள்ளன. இதனால் எமது அப்பாவி மீனவர்கள் மிக…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

இலங்கையில் வெப்ப நிலை 40 பாகை செல் சியஸ் இனை விட அதிகமாக இருக்கும்!

இலங்கையில் 02.04.2026 முதல் 15.04.2026 வரை வெப்பநிலை 40 பாகை செல்சியஸ் இனை விட அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம்  என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை அவர் வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் 02.04.2026 முதல்  15.04.2026 வரை சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளது. ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சூரியனின் அமைவு கிட்டத்தட்ட 90 பாகையில் அமையும் என்பதனால் இலங்கை முழுவதும் அதிக வெப்பநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்வரும் 04.04.2026 அன்று சூரியன் பருத்தித்துறைக்கு நேராகவும், 05.04.2026 அன்று சூரியன் எல்பிட்டியவுக்கு நேராகவும், 06.04.2026 அன்று களுத்துறைக்கு நேராகவும், 07.04.2026 அன்று கொழும்புக்கும் களனியாவுக்கும் நேராகவும், 08.04.2026 அன்று மகியங்கனைக்கு நேராகவும் உச்சம் கொடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மறைந்த ஊடகச் செம்மல் சலீமிற்கு முதற்தடவையாக காரைதீவு மண்ணில் நினைவஞ்சலி….

மறைந்த ஊடகச் செம்மல் சலீமிற்கு முதற்தடவையாக காரைதீவு மண்ணில் நினைவஞ்சலி…. கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவரும் அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் சங்கங்கத்தின் பிரதி தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஏ.எல்.எம் சலீமிற்கு நேற்று சனிக்கிழமை (28) காரைதீவில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மூன்று தசாப்த காலமாக சிரேஷ்ட ஆலோசகராகவும், உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்து இன,மத வேறுபாடின்றி வாழ்நாள் முழுவதும் ஊடகத்திற்காக குரல் கொடுத்து மறைந்த ஏ.எல்.எம் சலீமின் தியாகங்களை நினைவு கூர்ந்து இந் நிகழ்வு இடம்பெற்றது. அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் ச.லோகநாதன் தலைமையில் அவரது இல்லத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆரம்பமாக அன்னாருக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொழிற்சங்க வளர்ச்சிக்காக அமரர் ஏ.எல்.எம் சலீம் யுத்த…

மேலும் படிக்க