தமிழ்நாடு இந்தியா செய்திகள் தாயகச் செய்தி 

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்திய பாடகர் சத்தியன்

முள்ளிவாய்க்காலில் யுத்தத்தினால் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள பொதுத் தூபிக்கு இந்திய பின்னணிப் பாடகர் சத்தியன் அஞ்சலி செலுத்தியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று (21) விஜயம் மேற்கொண்டிருந்த அவர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள மக்களையும் இடங்களையும் பார்வையிட்டார். அதன் ஒரு பகுதியாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குச் சென்ற சத்தியன், யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள பொதுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தி தனது அஞ்சலியைத் தெரிவித்தார்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணி மனித புதைகுழி அகழ்வு: இதுவரை எலும்புக் கூடுகள் 405 அடையா ளம் காணப்பட்டன!

தலைப்பு: செம்மணி மனித புதைகுழி அகழ்வு: 30ஆம் நாளில் மேலும் 7 எலும்புக்கூடுகள் மீட்பு; இதுவரை 405 அடையாளம் காணப்பட்டன!  செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 30ஆம் நாள் பணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை விசேட நிபுணர்கள் மற்றும் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றன. நேற்றைய அகழ்வாராய்ச்சியின் போது, மேலும் 7 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக மேலும் 11 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி, செம்மணி மனித புதைகுழியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த அகழ்வுப் பணிகளின் அடிப்படையில், அடையாளம் காணப்பட்ட மொத்த மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 405 ஆக உயர்ந்துள்ளது. அடையாளம் காணப்பட்ட இந்த எலும்புக்கூடுகளில், இதுவரை 377 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டு, மேலதிக தடயவியல் மற்றும் அறிவியல் பரிசோதனைகளுக்காகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் இன்னும் பல…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

புதுக்குடியிருப்பு குணா கலைக் கல்லூரியில் மாணவர் மதிப்பளிப்பு நிகழ்வு; ரவிகரன் எம்.பி பங்கேற்பு

புதுக்குடியிருப்பு குணா கலைக்கல்லூரியில் மாணவர் மதிப்பளிப்பு நிகழ்வு; ரவிகரன் எம்.பி பங்கேற்பு முல்லைத்தீவு – குணா கலைக்கல்லூரியில் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மற்றும் அண்மையில் வெளியாகியுள்ள க.பொ.த சாதாரணதரப் பரீட்சை முடிவுகளின்படி சிறப்புச்சித்தி பெற்ற மாணவர்களையும் மதிப்பளிக்கும் நிகழ்வானது 20.06.2026இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். இந்நிகழ்வானது விருந்தினர் மற்றும் சாதித்த மாணவர்கள் ஆகியோரது வரவேற்புடன் ஆரம்பமானது. அந்தவகையில் விருந்தினர்களும், சாதனை மாணவர்களும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு, தவில், நாதஸ்வர இசை முழக்கத்துடன் மலர்தூவி வரவேற்று அழைத்துவரப்பட்டனர். அதனையடுத்து மங்கலவிளக்கேற்றல் இடம்பெற்றதுடன், அதனையடுத்து பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மற்றும் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சிறப்புச் சித்திபெற்ற மாணவர்களும் மதிப்பளிக்கப்பட்டனர். அதனையடுத்து விருந்தினர்களது உரை, மாணவர்களது கலை நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன. மேலும் இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி பிடிப்பு..கயேந்திர குமாரின் கேள்வி

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி பிடிப்பு..கயேந்திர குமாரின் கேள்வியால் திண்டாடிய நெடுந்தீவு பிரதேச செயலாளர் குழப்பம் விளைவித்த என்பிபி ஆதரவாளர்கள். * பொலிஸார் வரவழைப்பு *அனுர அரசின் போலி வக்குறுதிகள் *யுத்தத்துக்கு பின்னரும் காணி பிடிப்பு தொடர்கிறது. *போலி வாக்குறுதிகளை வழங்கும் அனுர அரசு.. கயேந்திரகுமார் காட்டம் யாழ் நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் அரச காணியை கடற் படையின் தேவைக்காக யாழ் மாவட்ட செயலக காணி பயன்பாட்டு குழு வழங்கிய விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுப்பிய கேள்வியால் குழப்பநிலை ஏற்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் இடம் பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போதை இவ்வாறான நிலை ஏற்பட்டது. குறித்த விடையம் தொடர்பில் பாராளுமன்ற…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காணாமற் போன ஆட்கள் தொடர்பாக 7,000க்கும் மேற் பட்டோரின் அடிப் படைத் தகவல்கள் சேகரிப்பு

காணாமற்போன ஆட்கள் தொடர்பாக 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) ஆணையாளர் தெரிவித்துள்ளார செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சருடன் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை கூறியுள்ளார் மேலும் அவர், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அலுவலகம் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சட்டம், சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) ஆகியவற்றின் வழிகாட்டல்களுக்கு அமைவாக முழுமையாக சட்டப்பூர்வமாக இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார் அரச நிதியுடன் செயல்பட்டாலும், இது எந்தவொரு இராணுவ பிரிவு, பொலிஸார் அல்லது அரசியல் தரப்புக்கும் சார்பாக செயல்படாத சுயாதீன ஆணைக்குழு எனவும் அவர் வலியுறுத்தினார். பாதிக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வடக்கு – கிழக்கு மாகாண சபையின் பொறுப்புகளைப் போராளிகளிடம் ஒப்படையுங்கள்: சிறீதரன்

வடக்கு – கிழக்கு மாகாண சபையின் பொறுப்புகளைப் போராளிகளிடம் ஒப்படையுங்கள்: சிறீதரன் எம்.பி அறைகூவல்! “நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து, வடக்கு – கிழக்கு மாகாண சபையின் பொறுப்புகளைப் போராளிகளிடம் ஒப்படைத்து, சிறந்ததொரு அரசியல் சூழலை உருவாக்குவதற்கும், அதற்காக முன்னின்று உழைப்பதற்கும் நான் தயாராக இருக்கிறேன். இத்தகைய வரலாற்றுப் பணியைச் செய்ய எல்லோரும் தயாரா? ” என போராளிகள் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது சிறீதரன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார். ஆளுமையுள்ள போராளிகளை வெறுமனவே அரசியலுக்குப் பயன்படுத்துவதோ அல்லது வாக்குக் கேட்பதற்கான கருவிகளாக மாற்றுவதோ எமது நோக்கமல்ல. அவர்களை மீண்டும் இந்த மண்ணின் உண்மையான பங்காளிகளாக, நம்முடைய தலைவர்களாக மாற்ற வேண்டும்; அவர்கள் போர்க்களங்களில் நின்று எந்த இலட்சியத்திற்காகப் போராடினார்களோ, அதனை இப்போதும் செய்யட்டும். 2010ஆம் ஆண்டுகளிலும் அதற்குப்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

படகு ஓடு பாதையை ஆழப்படுத்து மாறு மீனவர் சங்கத்தினர் ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை

படகு ஓடுபாதையை ஆழப்படுத்துமாறு கீலிக்கரையான்பிட்டி மீனவர்சங்கத்தினர் ரவிகரன் எம்.பியிடம்கோரிக்கை மீன்பிடித் தொழிலுக்குப் பயன்படுத்தும் படகு ஓடுபாதையினை ஆழப்படுத்தித் தருமாறு மன்னார் – மாந்தை மேற்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட வேட்டையாமுறிப்பு, கீலிக்கரையான்பிட்டி மீனவர்சங்கத்தினர் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். கீலிக்கரையான்பிட்டி மீனவர்சங்கத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக, கீலிக்கரையான்பிட்டி களப்பு பகுதிக்கு நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தார். இதன்போதே மீனவர் சங்கத்தினரால் மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,குறித்த கீலிக்கரையான்பிட்டி களப்புப் பகுதியில் 09கிராமங்களைச்சேர்ந்த 60வரையான மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் மீன்பிடித் தொழிலுக்குப் பயன்படுத்தும் 02கிலேமீற்றர் தூரமான படகு ஓடுபாதை சீரின்றிக் காணப்டுவதால் தாம் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாக கீலிக்கரையான்பிட்டி மீனவர்கள் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இவ்வாறு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தாயகச் செய்தி 

மதவாச்சி தலை மன்னார் வரை புகையிரத சேவை யின் பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுப்பு

மதவாச்சி -தலைமன்னார் வரை புகையிரத சேவையின் பரீட்சார்த்தநடவடிக்கை முன்னெடுப்பு மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரைக்கும் புகையிரத சேவையின் பரிட்சார்த்த நடவடிக்கை இன்று (19) மதியம் இடம் பெற்றது. தலைமன்னாரில் இருந்து கொழும்பிற்கான புகையிரத சேவைகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயல் காரணமாக தலைமன்னாரில் இருந்து கொழும்புக்கு செல்லும் புகையிரத பாதையில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக குறித்த சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த புகையிரத பாதைகள் புனரமைப்பு செய்யப்பட்ட நிலையில் தலைமன்னாரில் இருந்து கொழும்பு வரையிலான புகையிரத சேவைகளை முன்னெடுக்க இலங்கை புகையிரத திணைக்களம் நடவடிக்கைகளை மேற் கொண்டது. அதற்கு அமைவாக இன்று மதியம் மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரைக்கும் புகையிரத சேவையின் பரீட்சார்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.விரைவில் தலைமன்னாரில் இருந்து கொழும்பிற்கான புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கும் நிகழ்வு

கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் காரைநகர் சீ நோர் படகு தொழிற்சாலை வளாகத்தில்  நடைபெற்றது. இந் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கலந்து கொண்டு மீனவர்களுக்கான படகுகள் மற்றும் வலைகளை வழங்கி வைத்தார். இதன்போது முதலாம் கட்டமாக ரூபா 1.800 மில்லியன் பெறுமதியான 32 வலைகளும், ரூபா 8.640 மில்லியன் பெறுமதியான 18 படகுகளும் வழங்கி வைக்கப்பட்டன. இதில், தலா ரூபா 480,000.00 பெறுமதியான 18 படகுகளில், யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு  03 படகுகளும் ( நெடுந்தீவிற்கு  02 படகுகளும், காரைநகருக்கு 01 படகுகள்), முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 13 படகுகளும்,  மன்னார் மாவட்டத்திற்கு 02 படகுகளுமாக  வழங்கி வைக்கப்பட்டது என்பது…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செருப்பு மாலை அணிவித் திருந்த தனது பதாகையை கிழித்து, அறுத்துச் சென்ற அர்ச்சுனா

யாழ்ப்பாணத்தில் செருப்பு மாலை அணிவித்திருந்த தனது பதாகையை கிழித்து, தனது காரில் அர்ச்சுனா இராமநாதன் எடுத்து சென்ற  சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை இலக்கு வைத்து அவமதிப்பான வாசகங்கள் கொண்ட 10 அடி உயர பதாகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் பிரதான வீதியில், சின்னக்கடை பகுதிக்கு அண்மையில் இந்தப் பதாகை வைக்கப்பட்டிருந்தது.அந்தப் பதாகையில் ‘நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராஜபக்ஷ ஈனப் பிறவி’ என எழுதப்பட்டு அவரது புகைப்படத்தின் மீது செருப்புகளால் செய்யப்பட்ட மாலையும் தொங்கவிடப்பட்டிருந்தது. நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் இந்தப் பதாகை அமைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.இந்நிலையில், குறித்த பதாகையின் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வந்தது. இந்நிலையில் காலை 10 மணியளவில் பதாகை வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு தனது காரில் வந்த அர்ச்சுனா இராமநாதன், பதாகையை கிழித்தெடுத்து, தனது காரில் எடுத்து…

மேலும் படிக்க