தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிளி கண்டாவளை பாலத்தில் நடந்த விபத்து

யாழ்ப்பாணத்தில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி மீன்களை ஏற்றிக் கொண்டு பயணித்த கப் ரக வாகனம், பரந்தன் வீதி ஊடாக முல்லைதீவு நோக்கி சென்று கொண்டிருந்த போது, வெளிகண்டல் பகுதியில் வேகட்டுப்பாட்டை இழந்து பாலத்துடன் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது விபத்தில் வாகன ஓட்டுனரின் உதவியாளர் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பளையில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கையடி – இயக்கச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 31 வயதுடைய சிவகுமார் சிவதாஸ் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞன் மின்சார இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கியுள்ளது. இதனையடுத்து உடனடியாக பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

புனரமைக்கப் பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு

புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு – சுமார் ரூ. 3.5 மில்லியன் செலவில் தற்காலிக பாலம் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள இரண்டாவது பிரதான பாலமான புதுப் பாலம் அண்மையில் (28) உடைந்து விழுந்த பாலத்திற்கு பதிலாக தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் நேற்று (09) மாலை முடிவடைந்தன. அதனைத் தொடர்ந்து இன்று (10) காலை 9.00 மணி அளவில் மீண்டும் மக்களின் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் சுமார் ரூ. 3.5 மில்லியன் செலவில் இந்த தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வீதியினை பயன்படுத்தும் பொதுமக்கள் பாலத்திற்கு முன்பு வழங்கப்பட்டுள்ள வீதி அறிவுறுத்தல்களை பின்பற்றி இப் பாலத்தின் ஊடாக மிகவும் அவதானமாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை நிரந்தரமாக புதிய பாலம் ஒன்று அமைக்கும் வரை கனரக வாகனங்கள்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தமிழ் மக்களி டமிருந்து ராஜபக்சக் கள் கொள்ளையடித்த நகைகளை மக்களு க்கு வழங்க வேண்டும்

தமிழ் மக்களிடமிருந்து ராஜபக்சக்களால் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீண்டும் அவர்களிடம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,தமிழரசுக்கட்சி எம். பி எஸ். சிறீதரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவற்றில் ஊழல் நடந்துள்ளதால் இது தொடர்பில் விசாரணை செய்யாமல் விட முடியாது என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த நகைகளை மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பில் தேர்தல் காலங்களில் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட அரசாங்க அதிபர்கள் ஊடாக பட்டியலைக் கோரி அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் என குறிப்பிட்ட அவர்,எத்தனை ஆயிரம் பேர் நகைகளை அடகு வைத்துள்ளனர். அவ்வாறென்றால் எவ்வளவு கோடி ரூபா பெறுமதியான நகைகளை ராஜபக்‌ஷ அரசாங்கம் கொள்ளையடித்துள்ளது என்பதனை வெளிக்கொண்டு வாருங்கள் என்றும் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம்,…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கதிர்காம பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜபல் நகர் பகுதியில் இன்று (10) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில், சாரதி உட்பட நால்வர் காயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து, பாதையை விட்டு விலகி வீடு ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான பேருந்து கதிர்காமத்திற்கு யாத்திரிகர்களை அழைத்துச் சென்று, அவர்களை இறக்கிவிட்டு திருகோணமலை நோக்கி திரும்பி வந்தபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்தில் பேருந்தின் சாரதி உட்பட நால்வர் காயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மூதூர் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து மோதியதில் வீடு மற்றும் அதிலிருந்த பல்வேறு உபகரணங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியாவில் இன்று முதல் வடமாகாண குத்துச்சண்டைப் போட்டிகள்

வவுனியாவில் இன்று முதல் வடமாகாண குத்துச்சண்டைப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. வவுனியா பழைய பேருந்து நிலைய வளாகத்தில் ஆரம்பமான இப்போட்டிகள், எதிர்வரும் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும், மாவட்ட குத்துச்சண்டைச் சங்கத்தின் தலைவரும் குத்துச்சண்டை பயிற்சியாளருமான நிக்ஸன்  ரூபராஜ் அவர்களின் ஒழுங்கமைப்பிலும் நடைபெறும் இப்போட்டித் தொடரில், வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 90 குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டிக்கான வெற்றிக் கேடயங்களின் அனுசரணையை வவுனியா ஒமேகா ஆடைத்தொழிற்சாலை வழங்கியுள்ளது. போட்டியின் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ம. சபர்ஜா கலந்துகொண்டார். அத்துடன், ஒமேகா ஆடைத்தொழிற்சாலையின் மனிதவள முகாமையாளர் அன்ரன் மதன் ராஜ், மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர், வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பலர் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். குத்துச்சண்டை விளையாட்டு…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அராலி கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரது சடலமானது மீட்கப்பட்டுள்ளது.

அராலி மேற்கு கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரது சடலமானது மீட்கப்பட்டுள்ளது. அராலி மத்தி, வட்டுக்கோட்டையை சேர்ந்த செல்லையா சிவகுமார் (வயது 49) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த நபர் இன்றையதினம் கடற்றொழிலுக்கு சென்றுள்ளார். அதன்பின்னர் இன்று மதியம் 12.40 மணியளவில் அவர் கடலில் சடலமாக மிதப்பதை வேறு மீனவர்கள் அவதானித்தனர். பின்னர் இது குறித்து உறவினர்களுக்கும், வட்டுக்கோட்டை பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளனர். சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

இந்தியாவி லிருந்து கடத்திய. 10 ஆயிரம் கடல் அட்டைகள் சிக்கின! – 13 படகுகளுடன் 26 பேர் கைது

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட சுமார் 10 ஆயிரம் கிலோகிராம் நிறையுள்ள கடல் அட்டைகள், மன்னார் சவுத்பார் பகுதியில் வைத்து இன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து பல படகுகள் மூலம் கடல் அட்டைகள் இலங்கைக்குக் கடத்தப்படுகின்றன என்று கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து, கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தச் சட்டவிரோதக் கடத்தல் கண்டறியப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, கடத்தி வரப்பட்ட 13 படகுகளும், அதில் இருந்த 26 சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகளை, உரிய ஏற்றுமதி அனுமதிப் பத்திரம் உள்ளவர்களுக்கு ஏல அடிப்படையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்றொழில் மற்றும்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

கிளிநொச்சியில் சிக்கிய வாகனம்! தப்பியோடிய சாரதி

கிளிநொச்சி – மாங்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சட்டவிரோதமாக முதிரை மரப்பலகைகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் ஒன்றை, பல கிலோமீற்றர் தூரம் சினிமா பாணியில் துரத்திச் சென்று கிளிநொச்சி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவத்தின் போது வாகனத்தின் சாரதி தப்பியோடியுள்ள நிலையில், அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் தகவலின்படி, மாங்குளத்திலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்த குறித்த வாகனம், பொலிஸ் சோதனையில் சிக்காமல் இருக்க இரணைமடு சந்தியிலிருந்து திருவையாறு உள்வீதிக்குள் திருப்பப்பட்டுள்ளது. அதேவேளை, திருவையாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்கும் நோக்கில் பொலிஸார் வீதித்தடையை அமைத்து சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு கப் ரக வாகனத்தை மறித்து சோதனை செய்ய முற்பட்டபோது, சாரதி பொலிஸாரின் உத்தரவை மீறி அதிவேகமாக வாகனத்தைச் செலுத்தி தப்பிச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி பொலிஸார் மோட்டார் சைக்கிள்களில் வாகனத்தைத்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ் பல்கலைக்கழக” பேராசிரியருக்கு எதிராக போராட்டம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை காலத்தை இழுத்தடிக்காது, துரிதப்படுத்த கோரி  பல்கலை முன்றலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை “பாலியல் வன்முறைகளுக்கு எதிரான மக்கள் இயக்கம்” எனும் அமைப்பின் அழைப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட இருவர் மாணவிகளை துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கினார்கள் எனும் குற்றச்சாட்டில், பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான நிலையில் காலத்தை இழுத்தடிக்காது விசாரணைகளை துரிதப்படுத்த கோரி, பல்கலைக்கழக முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் , “பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை கேளுங்கள் – அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்’. “பல்கலைக்கழகங்களில் பெண்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும்” , ” குற்றத்தை மறைக்க சட்டத்தை…

மேலும் படிக்க